



அருவமும் உருவமாகி அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்குஉதித்தனன் உலகம் உய்ய!
இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம்.

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா!!!

முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம்
முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு.

மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில்.
பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.



ஒவ்வொரு நாள் இரவும் சஷ்டி மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்கத் தேரில் வலம் வரச் செய்யும்போது அடியார்கள் வேல் வகுப்பு, திருப்புகழ், வீரவாள் வகுப்பு பாடியபடி செல்வார்கள்.
ஆறாம் நாள் மாலை கடற் கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். அப்போது கடலும் உள்வாங்கி இடம் தரும். இந்நிகழ்ச்சியைக் காண பக்தர் கூட்டம் அலை மோதும். பார்க்கும்போது தலையா கடல் அலையா எனத் தோன்றும்.
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.

சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்தவர் முருகப்பெருமான்.
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பி னான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத் தைக் காணலாம்.
சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.








சூரபதுமனை வதம் செய்த சண்முகா போற்றி...
ReplyDeleteஆடும் மயிலின் நிழற்படம்
மனதில் நீங்காது ஆடிக்கொண்டே இருக்கிறது சகோதரி....
சிறப்பான பதிவு...
ReplyDeleteஆடும் மயிலின் படம் சூப்பர்...
நன்றி...
அழகான படங்களுடன் பதிவு சிறப்பு.
ReplyDeleteஅழகான படங்கள் மற்றும் தகவல்களுடன் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteuseful song for getting a child
ReplyDeleteமுருகனின் மூன்று மயில்கள். விவரம் தெரிந்து கொண்டேன். இரண்டாவதாக உள்ள வேல்முருகன் படம் அருமை.
ReplyDeleteநெல்லையில் மேம்பாலத்துக்கு கீழ் அமைந்திருக்கும் "சாலைக்குமரன்" கோவிலில் உள்ள முருகன் சிலை உண்மையில் திருச்செந்தூர் ஸ்தலத்தில் இருக்கவேண்டியது.
ReplyDeleteசிலையை கொண்டுவரும் போது அதனை அவ்விடத்தில் இறக்கி வைக்க பின் எடுக்கமுடியாமல் போய் "சாலைக்குமரன்" என்ற பெயர் பெற்றது.
இங்கும், ஆற்றின் நடுவில் உள்ள "குறுக்குத்துறை" முருகன் கோவிலிலும் சூரஸம் ஹாரம் சிறப்பாக நடக்கும்.
இரண்டாவது முருகன் படத்தில் தங்க ரேக்குக்களின் அலங்காரம் மிகவும் அழகு!
ReplyDeleteஆடும் மயில் அற்புதம்!
வணக்கம்
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி
சூரசம்ஹாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்டது மிகவும் பிரமாண்டமாக உள்ளது,அதற்கு சிறப்புசேர்க்கும் வகையில் அருணகிரி நாதரின் படல்களும் அத்தோடு முருகப்பெருமானின் படங்களும் உங்களின் படைப்புக்கு ஒரு மகுடம் சேர்க்குது சிறப்பாக உள்ளது,அதிலும் மயில் ஆடுவது மிக மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சூரசம்ஹாரம் காட்சிகள் அருமை.
ReplyDelete2008rupan said...
ReplyDeleteவணக்கம்
இராஜராஜேஸ்வரி
சூரசம்ஹாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்டது மிகவும் பிரமாண்டமாக உள்ளது,அதற்கு சிறப்புசேர்க்கும் வகையில் அருணகிரி நாதரின் படல்களும் அத்தோடு முருகப்பெருமானின் படங்களும் உங்களின் படைப்புக்கு ஒரு மகுடம் சேர்க்குது சிறப்பாக உள்ளது,அதிலும் மயில் ஆடுவது மிக மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- //
முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நிறைவான இனிய நன்றிகள்..
மகேந்திரன் said...
ReplyDeleteசூரபதுமனை வதம் செய்த சண்முகா போற்றி...
ஆடும் மயிலின் நிழற்படம்
மனதில் நீங்காது ஆடிக்கொண்டே இருக்கிறது சகோதரி....//
கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்..
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசிறப்பான பதிவு...
ஆடும் மயிலின் படம் சூப்பர்...
நன்றி...//
கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்..
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅழகான படங்களுடன் பதிவு சிறப்பு./
கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்.
பழனி.கந்தசாமி said...
ReplyDeleteரசித்தேன். //
இனிய நன்றிகள்.
கோவை2தில்லி said...
ReplyDeleteஅழகான படங்கள் மற்றும் தகவல்களுடன் சிறப்பான பகிர்வு.
கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்.
arul said...
ReplyDeleteuseful song for getting a child/
கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்.
தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteமுருகனின் மூன்று மயில்கள். விவரம் தெரிந்து கொண்டேன். இரண்டாவதாக உள்ள வேல்முருகன் படம் அருமை.
கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்.
சந்திர வம்சம் said...
ReplyDeleteநெல்லையில் மேம்பாலத்துக்கு கீழ் அமைந்திருக்கும் "சாலைக்குமரன்" கோவிலில் உள்ள முருகன் சிலை உண்மையில் திருச்செந்தூர் ஸ்தலத்தில் இருக்கவேண்டியது.
சிலையை கொண்டுவரும் போது அதனை அவ்விடத்தில் இறக்கி வைக்க பின் எடுக்கமுடியாமல் போய் "சாலைக்குமரன்" என்ற பெயர் பெற்றது.
இங்கும், ஆற்றின் நடுவில் உள்ள "குறுக்குத்துறை" முருகன் கோவிலிலும் சூரஸம் ஹாரம் சிறப்பாக நடக்கும்.
தகவல்களுக்கும் ,கருத்துரைக்கும் நிறைவான இனிய நன்றிகள்..
மனோ சாமிநாதன் said...
ReplyDeleteஇரண்டாவது முருகன் படத்தில் தங்க ரேக்குக்களின் அலங்காரம் மிகவும் அழகு!
ஆடும் மயில் அற்புதம்!
கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்.
மாதேவி said...
ReplyDeleteசூரசம்ஹாரம் காட்சிகள் அருமை.
கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள்.
அருமையான பதிவு.
ReplyDeleteஅரிய தகவல்கள்.
நன்றி.
அன்பின் இராஜ இராஜேஸ்வாரி - சூர சம்ஹாரம் பற்றிய பதிவும் படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல அருமை - கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள் - கருத்தைக் கவரும் அழகிய விள்ககங்கள் - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஇரண்டாவது படத்தில் உள்ள ஸ்வாமி அழகோ அழகு. முருகு என்றால் அழகு என்பதற்கு இது ஒன்று தான் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
ReplyDeleteமுகத்தில் ஒளிவீசும் அற்புத அழகு. நல்ல அம்சமான படம் அது.
வேல் + நகைகள் + திருவாசி போன்ற அனைத்துமே மிக அழக்காக உள்ளன.
Excellent Art Work. Superb!
>>>>> இடைவேளை >>>>>
கொம்பு நீட்டிடும் யானையாரும், தோகை சிலிரித்து ஆடிடும் மயிலும், வழக்கம் போல அருமை.
ReplyDeleteகடைசி இரண்டு படங்களின் சுற்றுப்புறமும், முதல்படத்து புஷ்ப மாலைகளும் மிகவும் நன்றாக உள்ளன.
ooooo