Saturday, November 10, 2012

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி





ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.'

 16 முறை கூறினால் நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை ..

ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்; 
அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, 
அனைத்து பயங்களைப் போக்குபவரும்; 
எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்; 
மூன்று உலகங்களுக்குத் தலைவராக விளங்குபவரும்; 
அனைத் துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்குபவருமான 
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான 
ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான 
ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.
ஸ்ரீ மகாவிஷ்ணு மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்

நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது..
திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.
இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் 
இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை 
இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

..ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்து தயாரித்த பிரசாதம்  முக்கிய நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது..

 தீபாவளி லேகியம் தயாரிக்கும் வழக்கமும் தன்வந்திரி வழிபாட்டிலிருந்தே தொடங்கியதாம்.... 
அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி நாளன்றே துவங்கும் தீபாவளி தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும், தன்திர யோதசி என்றும் கொண்டாடப்படுகிறது. 

இந்நாளில் 13 வெள்ளி அல்லது தங்கக் காசுகள் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது வடமாநில மக்களின் நம்பிக்கை. 

இதே தன்திரேயாஸ் நாள் எமனுக்குரிய நாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, அன்றிரவு யமதீயா என்ற யம தீபம் ஏற்றப்படுகிறது. 


கோவையில் தன்வந்திரி ஆலயம் பிரசித்தி பெற்றது...
கேரள மாநிலத்தில் தன்வந்திரி பகவானுக்கு பல ஆலயங்கள் உள்ளன..

ஸ்ரீ தன்வந்திரி பகவான் பற்றி எமது இன்னொரு பதிவு..
http://jaghamani.blogspot.com/2012/02/blog-post_23.html 
ஓம் நமோ பகவதே வாசுதேவாய

24 comments:

  1. படங்களும் படமும் அருமை...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  2. பகிர்விற்கும் தகவல்களுக்கும் நன்றி

    ReplyDelete
  3. It felt like a blessing through this post today, have been chanting this mantram for a major health issue and it was a positive time to go through the pictures.

    ReplyDelete
  4. தன்வந்திரி பகவானை வணங்கும் போது ஏற்படும் மன அமைதியை நான் உணர்ந்திருக்கிறேன். வேலூருக்கு அருகாமையில் வாலாஜாபேட்டையில் தன்வந்திரி பகவான் ஆலயம் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. மூலிகை தோட்டத்தின் நடுவே ஆலயம் அமைதியும்,ஆன்மிகமும் நிறைந்து இருக்கிறது. இங்கு வந்து தரிசிக்கலாம்

    ReplyDelete
  5. பிணி தீர்க்கும் தன்வந்தரி பகவானின் துதியும், அதற்கான அர்த்தமும், புகைப்படங்களும் மனதை கவர்ந்தன.

    எங்கிருந்து உங்களுக்கு இத்தனை அருமையான புகைப்படங்கள் கிடைக்கின்றன?

    திரும்பத்திரும்பப் பார்த்து ரசித்தேன்.

    பாராட்டுக்களும், நன்றிகளும்

    ReplyDelete
  6. @@ உஷா அன்பரசு said...
    தன்வந்திரி பகவானை வணங்கும் போது ஏற்படும் மன அமைதியை நான் உணர்ந்திருக்கிறேன். வேலூருக்கு அருகாமையில் வாலாஜாபேட்டையில் தன்வந்திரி பகவான் ஆலயம் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. மூலிகை தோட்டத்தின் நடுவே ஆலயம் அமைதியும்,ஆன்மிகமும் நிறைந்து இருக்கிறது. இங்கு வந்து தரிசிக்கலாம்//

    தங்கள் கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ஸ்ரீ தன்வந்திரி பகவான் பற்றி எமது இன்னொரு பதிவு..
    http://jaghamani.blogspot.com/2012/02/blog-post_23.html
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

    ReplyDelete
  7. @@ Ranjani Narayanan said...
    பிணி தீர்க்கும் தன்வந்தரி பகவானின் துதியும், அதற்கான அர்த்தமும், புகைப்படங்களும் மனதை கவர்ந்தன.

    எங்கிருந்து உங்களுக்கு இத்தனை அருமையான புகைப்படங்கள் கிடைக்கின்றன?

    திரும்பத்திரும்பப் பார்த்து ரசித்தேன்.

    பாராட்டுக்களும், நன்றிகளும் //

    தங்கள் ரசிப்புக்கும் பாராட்டுகளுக்கும் இனிய நன்றிகள்..

    ReplyDelete
  8. @@ திண்டுக்கல் தனபாலன் said...
    படங்களும் படமும் அருமை...

    நன்றி அம்மா...//

    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  9. raji said...
    பகிர்விற்கும் தகவல்களுக்கும் நன்றி //

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  10. @2 padmaja said...
    It felt like a blessing through this post today, have been chanting this mantram for a major health issue and it was a positive time to go through the pictures. //

    இனிய கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  11. பிணி தீர்க்கும் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒன்று தான் தன்வந்திரி பகவான் என்பது ஆச்சர்யமான விஷயம்பா....

    அம்மா ரெண்டு நாளைக்கு முன்பு தான் சொன்னார்கள்... விஷ்ணு பகவான் எத்தனை அவதாரம் என்று கேட்டபோது தசாவதாரம் என்று சொன்னேன். இல்லை 24 அவதாரம் என்று சொன்னார்கள்.... இப்ப நீங்களும் இதையே போட்டிருக்கீங்கப்பா...

    இன்னொரு சின்ன உதவி ராஜேஸ்வரி.... 24 அவதாரங்கள், அந்த அவதாரங்களின் மகிமை, படங்கள் இடமுடியுமாப்பா ப்ளீஸ்?

    எடுத்ததுமே பகவானின் நோய் தீர்க்கும் ஸ்லோகம் படிக்க பகிர்ந்து... பிரகாசமான தூய ஒளியில் பிரகாசிக்கும் விஷ்ணு பகவானின் ஓர் அவதாரமாக தன்வந்திரியின் சாந்த சொரூபமான கைகளில் அமிர்த கலசமும், மிக அழ்கடலில் விஷ்ணுவின் சயனக்கோலமும் ஆஹா ஆஹா எல்லா படங்களும் தன்வந்திரி பகவானின் கதை சொன்ன விவரங்களும் மிக அற்புதம்பா....

    படங்கள் எல்லாம் என்ன அழகாய் ஜொலிக்கிறது....

    அட தீபாவளி லேகியம் கூட இதில் இருந்து தான் அறியப்பட்டதா? ஆச்சர்யமான அவசியமான மிக அற்புதமான பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா இராஜேஸ்வரி...

    ReplyDelete
  12. @@ மஞ்சுபாஷிணி said...
    பிணி தீர்க்கும் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒன்று தான் தன்வந்திரி பகவான் என்பது ஆச்சர்யமான விஷயம்பா....//

    வாங்க மஞ்சுபாஷிணி .. பதிவுக்கு நீங்க வந்து ரொம்ப நாளாச்சு ..சந்தோஷம் ..

    24 அவதாரங்களையும் இந்த பதிவிலேயே எழுதியிருந்தேன் ..
    பதிவு நீளமானதால் எடுத்து தனியாக வைத்திருக்கிறேன் ..

    கருத்துரைக்கு ம்னம் நிறைந்த இனிய நன்றிகள்..

    //அம்மா ரெண்டு நாளைக்கு முன்பு தான் சொன்னார்கள்.. //

    தாயாருக்கு அன்பு நமஸ்காரங்கள் .

    ReplyDelete
  13. அம்மாக்கிட்ட உங்களுடைய வலைப்பூவை காண்பித்துவிட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்ததாய் சந்தோஷப்படுவார்கள்பா... அத்தனை அற்புதமான விஷயங்கள் இருக்கு...

    சாலிக்ராமம் இங்கு மூன்று இருந்ததை பார்த்தேன்பா...

    அம்மாவீட்டு பூஜையறையில் அப்பா வழிபட்டதை பார்த்திருக்கிறேன்..

    சாலிக்ராமத்தின் விசேஷத்தையும் சொல்வீங்களாப்பா?

    அம்மாவிடம் தங்களின் அன்பு நமஸ்காரங்களை தெரிவித்துவிடுகிறேன்பா....

    ஆமாம்பா உங்கள் தளத்திற்கு வந்து ரொம்ப நாட்களாகிறதுப்பா...

    எல்லாருடையதும் படித்து பகிர ஆசை... ஆனால் கைவலி தான் என்னை அமிழ்த்திவிடுகிறது :( இனி கண்டிப்பா தினமும் வர முயல்கிறேன்பா....

    மிக நேர்த்தியுடன் நீங்கள் ஒவ்வொரு பகிர்வும் பகிரும்போது அதை படித்து கருத்திட நான் ஓடி வருகிறேன்பா இனி....

    பகவானின் அத்தனை திவ்ய ஸ்வரூபங்களை படங்களாக ஸ்தலவரலாறு எல்லாம் தேடி தேடி நீங்கள் பார்த்து பார்த்து பதிவிடும்போது அந்தந்த இடங்களுக்கு போய் பகவானை தரிசித்த மன திருப்தி கிடைக்கிறதுப்பா....

    ஆஹா 24 அவதாரங்களும் ஏற்கனவே தொகுத்து வெச்சிருக்கீங்களாப்பா... ரொம்ப சந்தோஷம்பா.. 24 அவதாரங்களும் கொஞ்சம் கொஞ்சமா போடுங்கப்பா ப்ளீஸ்..

    ReplyDelete
  14. பல புதிய தகவல்கள் .
    பகிர்விற்கு நன்றிகளும் பாராட்டுக்களும் .!

    ReplyDelete
  15. I never miss your single post Rajeswari.
    The photos are nice.
    Thanks for the sloka.
    viji

    ReplyDelete
  16. ஸ்ரவாணி said...
    பல புதிய தகவல்கள் .
    பகிர்விற்கு நன்றிகளும் பாராட்டுக்களும் .!//

    கருத்துரைக்கு ம்னம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  17. viji said...
    I never miss your single post Rajeswari.
    The photos are nice.
    Thanks for the sloka.
    viji //

    நீண்ட நாட்களுக்குப் பிறகான தங்கள் கருத்துரை மகிழ்வளித்தது..இனிய நன்றிகள்..

    மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள் ...

    ReplyDelete
  18. தன்வந்திரி மருத்துவத்துக்கான தெய்வம். படித்துப் பாருங்கள். மிகவும் பயனுள்ள பதிவு.
    தன்வந்திரி ஸ்தோத்திரம் சொல்லி சொல்லி எனது உடல் நலன் சீரடைந்தேன்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் திருமதி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  19. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - தன்வந்திரி பற்ரிய பதிவு அருமை - எத்தன படங்கள் - எவ்வளவு விளக்கங்கள் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. ”ஸ்ரீ தன்வந்தரி ஜெயந்தி” பற்றிய பதிவு அருமை.

    படங்களும் விளக்கங்களும், தன்வந்தரிக்கான கோயில்கள் உள்ள இடங்கள் பற்றியும் சொல்லியுள்ளது சிறப்பு.

    பாற்கடலிலிருந்து கொண்டு வந்து அளித்த அமிர்தம் போன்ற ஒள்ஷதமாக இந்தப்பகிர்வு அருமையாய் உள்ளது.

    கடைசிப்படம் மிகவும் ப்ரும்மாண்டம்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இன்று இத்துடன் முடித்துக் கொள்ள நினைக்கிறேன். முடிந்தால் பிராப்தம் இருந்தால் நாளை தொடர்ந்து சந்திப்போம்.

    -oOo-

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”ஸ்ரீ தன்வந்தரி ஜெயந்தி” பற்றிய பதிவு அருமை.

    படங்களும் விளக்கங்களும், தன்வந்தரிக்கான கோயில்கள் உள்ள இடங்கள் பற்றியும் சொல்லியுள்ளது சிறப்பு.

    பாற்கடலிலிருந்து கொண்டு வந்து அளித்த அமிர்தம் போன்ற ஒள்ஷதமாக இந்தப்பகிர்வு அருமையாய் உள்ளது.

    கடைசிப்படம் மிகவும் ப்ரும்மாண்டம்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    வணக்கம் ஐயா..

    அருமையான கருத்துரைகளால் ஆசீர்வதித்ததற்கு மனம் நிறைந்த இனிய ந்ன்றிகள் ஐயா..

    ReplyDelete
  22. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ ராஜேஸ்வரி - தன்வந்திரி பற்ரிய பதிவு அருமை - எத்தன படங்கள் - எவ்வளவு விளக்கங்கள் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    வணக்கம் ஐயா..

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  23. Rathnavel Natarajan said...
    தன்வந்திரி மருத்துவத்துக்கான தெய்வம். படித்துப் பாருங்கள். மிகவும் பயனுள்ள பதிவு.
    தன்வந்திரி ஸ்தோத்திரம் சொல்லி சொல்லி எனது உடல் நலன் சீரடைந்தேன்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் திருமதி ராஜராஜேஸ்வரி.

    வணக்கம் ஐயா..

    அருமையான கருத்துரைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அனுபவப்ப்கிர்வுகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete