கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும்.
சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.
இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம்.
விரத மகிமை அதை சொன்ன விதம் ரொம்ப நல்லாருக்கு..மிக்க நன்றி.
ReplyDeleteபழனி இரவுக்காட்சி அருமை.
ReplyDeleteஅருமையான படங்கள்...
ReplyDeleteபடங்களும் பகிர்வும் நல்லா இருக்கு நன்ரி வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை... தரிசனம் கிடைத்தது...
ReplyDeleteமுருகனின் அழகும், சௌந்தர்யமும் தாங்கள் பகிர்ந்த படத்தில் காணமுடிந்ததுப்பா....
ReplyDeleteகந்தர் சஷ்டி வருடத்திற்கு ஒருமுறை வரும் பக்திமுறை விரதமும்.... சூரசம்ஹாரம் செய்து அரக்கனை அழித்து சுபிக்ஷம் கொண்டு வந்தது போல.. நம்மில் இருக்கும் நம்மை சுற்றி இருக்கும் தீயவைகளை அழித்து காக்கும் கடவுளாக முருகனைப்பற்றி சொல்லி இருப்பது மிகவும் அருமை...
சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு செய்யும் பாலபிஷேக பாலை குழந்தை இல்லாதவர் அருந்தினால் புத்திர பாக்கியம் உண்டு என்ற அற்புதமான விவரமும் அறிய தந்தமை நன்று இராஜேஸ்வரி....
அழகிய கண்கொள்ளா படங்களும் சஷ்டி முறை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா....
படங்கள் ரொம்பவே அழகு. கடற்கரை ஒட்டி யானை., பழனி.....
ReplyDeleteThank you very much sir
ReplyDeleteசிக்கல் முருகன் வேல் வாங்கும் போது முகமெல்லாம் முத்து முத்தாக வேர்வை துளிகள் தோன்றுமாம். அது பற்றிய படத்தினை இன்று எதிர்பார்த்தேன்.{என்ன சிக்கலோ]
ReplyDeleteபழனிப் படம் சுப்பர், பதிவு போன்று.
ReplyDeleteகந்தப் பழம் இனிக்கிறது.
மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
எல்லாமே அழகு. திருச்செந்தூர் சூரன்போர் நேரடி ஒளிபரப்புப் பார்த்தோம்... திருச்செந்தூர் முருகனுக்கு.. அரோகரா!!!!
ReplyDeleteஅசத்தலான படங்கள் அருமை.
ReplyDeletewww.arivu-kadal.blogspot.com
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
”சகல சக்தி தரும் கந்தசஷ்டி”யில்
ReplyDeleteசகல சமாச்சாரங்களும் மிகச்சிறப்பாகவே தந்திருப்பீர்கள்.
எனினும் எனக்கு மிகவும் பிடித்தது கடைசி இரண்டு படங்களுமே.
Very Very Excellent view ! ;)))))
ooooo
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete”சகல சக்தி தரும் கந்தசஷ்டி”யில்
சகல சமாச்சாரங்களும் மிகச்சிறப்பாகவே தந்திருப்பீர்கள்.
எனினும் எனக்கு மிகவும் பிடித்தது கடைசி இரண்டு படங்களுமே.
Very Very Excellent view ! ;)))))/
வணக்கம் ஐயா..
சிறப்பான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..