
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

பாடும் பறவை கூடங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே

இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் ரெண்டும் ஒன்றுதான்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற நன்னாள் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது
அர்த்தநாரீஸ்வரர்


”எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்த நாளே தீபத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.


‘குன்றத்து உச்சிச் சுடர்’ என்று சீவக சிந்தாமணி விரித்துரைக்கும் சிறப்புப் பெற்ற திருநாள்..

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடும் கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உண்டாகும்.
பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது.

அந்தி நேரம். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். “எனக்குப் பிறகு யார் இந்த உலகிற்கு ஒளிதரப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான். நிலவு இருந்தது, நட்சத்திரங்கள் இருந்தன, எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு சிறு மண் அகல், அதன் சுடர் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தன் தலையை நிமிர்த்திச் சொன்னது “நான் இருக்கிறேன், சூரிய தேவா!”
- ரவீந்திர நாத் தாகூரின் கவிதை.


அகல் விளக்குகள் ஏற்றி அதன் ஒளியில் அகிலம் முழுதும் நிறைந்திருக்கும் பேரொளியை உணரும், வழிபடும் நம் தொன்மைத் திருநாள் கார்த்திகை தீபம்.






அருமையான பதிவு..தகவல்களுடன் அழகான படங்கள்..நன்றி.
ReplyDeletehttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/11/color-of-paradise-1999.html
அருமையான படங்கள்.... நன்றி...
ReplyDeleteஅருமையான படங்கள்...
ReplyDeleteவண்க்கம்.
ReplyDeleteஅரிய செய்திகளுடன் அருமையான புகைப்படங்கள்.
ராஜி
Very nice post dear. All are very well.
ReplyDeleteIt is my weekness to enjoy the glittering little akal vilakku.
So mindblowing.
viji
கார்த்திகைப்பேரொளி என்ற இந்தத் தங்களின் பதிவும் சிறியதாயினும் மிகச் சிறப்பாக உள்ளது.
ReplyDeleteஅகல் விளக்குகளின் அணிவரிசைகள் அழகோ அழகாக உள்ளன.
சென்ற 2011 கார்த்திகை புனர்பூசத்தன்று எனக்காக இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி, உதவியதை நினைவு கூர்ந்து, மானஸீகமாக மனதில் நன்றி கூறிக்கொண்டேன்.
>>>>>>
ரவீந்திர நாத் தாகூரின் கவிதையில் அந்த மிகச்சிறிய மண் அகல் விளக்கு, தலை நிமிர்ந்து, சூரியனைப்பார்த்து சொன்னது என்பது வெகு அழகாகவே சொல்லப்பட்டு உள்ளது.
ReplyDeleteநானும் அதே மிகச்சிறிய மண் அகல் விளக்கு போன்ற மிகச் சாதாரணமானவன் தாங்கோ.
எனக்கு நீங்கள் எப்போதுமே, மிகச்சிறந்த ஒளிகொடுத்து, உலகையே காத்துவரும், ஒரு நாளும், ஓய்வில்லாத, தொய்வில்லாத, துவண்டு விடாத, மிகச்சிறந்த சுட்டெரிக்கும் சூரியன் போன்றவரே.
தினமும் ஓர் பதிவு ஜொலிக்கும் படங்களுடன், அருமையான விளக்கங்களுடன் தருவது என்றால் என்ன சாதாரண விஷயமா?
தங்களின் அசராத இந்த ஆன்மீக உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.
எழுச்சியுடன் தொடருங்கள்.
மகிழ்ச்சியுடன் நான் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.
தங்களின் 1000 ஆவது பதிவுக்குள், என் பின்னூட்டங்கள் உங்களின் 1000 பதிவுக்ளிலும் இடம் பெற வேண்டும் என்பதே என் ஆசையும்.
பிராப்தம் எப்படியோ பார்ப்போம்.
ooooo
வை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDeleteஒளி மிகுந்த கருத்துரைகளால் பதிவை அணிசெய்தமைக்கு இனிய நன்றிகள் ஐயா...