
சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!
என்று திருநாவுக்கரசு சுவாமிகள் அருள் பொழியும் தீபத்தை பாடியுள்ளார்..
கார்த்திகை விளக்கு திரு கார்த்திகை விளக்கு
கம்பன் நீலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு
நெஞ்சில் கருணைக்கொண்டு ஏற்றிவைக்கும் கார்த்திகைவிளக்கு
பார்க்கும் இடமெல்லாம் சுடரும் தீபஜோதிகள் ஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற தீய குணங்களை பொசுக்கி, ஞானம் எனும் அறிவொளியை ஏற்படுத்துவதாக ஐதீகம்.
தீபஜோதி வழிபாடு இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமசனி போன்வற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறைவனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக அருளும் திருக்காட்சியை கிரிவலம் வரும்போது தரிசிக்கலாம்


திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்று புராணம் கூறுகிறது.

கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்கள் உள்ளன.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையே சிவபெருமான் என்பதால் அனைத்து நந்திகளும் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன.









எனக்கு மிகவும் பிடித்த கோவில்....
ReplyDeleteஅண்ணாமலையானுக்கு அரோகரா...
படங்களும் பகிர்வும் இங்கியே கட்டிப்போடுது.வச்சகண்ண எடுக்கவே முடியல்லே. நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteThiruvannamalai is one place on my list to visit and your post is very informative, the photos are excellent!
ReplyDeleteபடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு..பதிவும் அருமை..நன்றி.
ReplyDeleteWow...this is amazing...I could not visit this time for Deepam :(
ReplyDeleteபடங்களும், பகிர்வும் வழக்கம் போல் அருமை.
ReplyDeleteபருப்பு தேங்காய் பிரமாதம்....
விளக்கங்கள் அருமை...
ReplyDeleteபடங்கள் மிகவும் அருமை... அதிலும் அந்த கோன் வடிவ பொரிகள் சூப்பர்...
வாழ்த்துக்கள்... நன்றி அம்மா....
திருவண்ணாமலை ஜோதியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. தொலைக்காட்சியிலேயே பார்த்தேன். படங்கள் மிக அருமை.
ReplyDeleteஅப்பர் சுவாமிகளின் தேவாரத்தில் தொடங்கி ஒரு அருமையான பதிவு. குன்றில் இட்ட விளக்கு என்பார்கள். அதனை நினைவுறுத்தும் அண்ணாமலை ஜோதிப் படம்.
ReplyDeleteகார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துகள்... படங்களுடன், பதிவும் அருமை...
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை. உட்கார்ந்த இடத்திலேயே அண்ணாமலை தீபம் தரிசிக்க வைத்த உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.
ReplyDeleteபல முறை பார்த்து பார்த்து ரசித்தேன்.
திருக் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு! படங்கள் அருமை! நன்றி!
ReplyDeleteகல்யாணம் ஆனபுதிதல் ஒருதடவை மட்டுமே இங்கு வந்து தரிசனம் செய்தேன்...உங்க படங்களை பார்த்த பிறகு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு....
ReplyDeleteAha!!!!!!!!!!!!
ReplyDeleteNice very nice.
viji
தீப ஜோதி வழிபாடு.
ReplyDeleteமிகச்சிறந்த பகிர்வு.
அழகழகான படங்கள்.
கீழிருந்து 1, 2 + 7 மேலிருந்து 2 சூப்பர்.
அதுவும் கீழிருந்து ஏழில், ஏழு பொரு உருண்டைகளும், 2 பொரி உருண்டையிலேயே செய்த பருப்புத் தேங்காய்களும் பார்க்கவே பரவசமாக.
ஒவ்வொரு ஆண்டும் படத்தில் காட்டுவதோடு சரி.
எப்போது தான் ருசிப்பது?
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதீப ஜோதி வழிபாடு.
மிகச்சிறந்த பகிர்வு.
அழகழகான படங்கள்.
கீழிருந்து 1, 2 + 7 மேலிருந்து 2 சூப்பர்.
அதுவும் கீழிருந்து ஏழில், ஏழு பொரு உருண்டைகளும், 2 பொரி உருண்டையிலேயே செய்த பருப்புத் தேங்காய்களும் பார்க்கவே பரவசமாக.
வணக்கம் ஐயா..
பரவசமான கருத்துரைகளுக்கு
இனிய நன்றிகள்..