Saturday, June 29, 2013

சுவர்ண ஆகர்ஷண பைரவர்



வணங்குவோர்க்கு வாழ்வு தரும் வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும் தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்

நினைத்தாலே நிம்மதி தரும் நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும் பைரவர் திருவடியே கதி

சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர் திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர் அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர் சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர் சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார்.
[Gal1]
அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.

மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி சிவபெருமானை வழிபட்டார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார்.
அதன்படி கொங்கனார் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றும் தங்கம் தயாரித்தார்.

அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்ற போது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்த சிவலிங்கமாக காட்சியளித்தது.

பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு ' என்றும் "சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டன.
[Gal1]
இலுப்பைக்குடி சுவர்ண ஆகர்ஷண பைரவர் இடது கையில் கபாலயத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் ஏந்தி அருள்கிறார்..

 சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலயத்தை அட்சய பாத்திரமாக வைத்திருக்கும்சுவர்ண ஆகர்ஷண பைரவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

 வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.

பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 தேய்பிறை அஷ்டமியில் விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட
"நாய்க்கடி பலகை'' இருக்கிறது.
நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,. தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அட்சய திருதியை தினத்தன்று சுவர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.

சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள சின்னஞ்சிறு விநாயகர்' சிற்பத்தில்  கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. 
[Gal1]
 தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது
வித்தியாசமான அம்சம். 
அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது. 
[Gal1]
 அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,
அரியக்குடி போஸ்ட்,
சிவகங்கை மாவட்டம்.
இலுப்பைக்குடி- 630 202, 


12 comments:

  1. தங்கமாக மாற்றும் சித்தர்கள் இப்போது இருக்கிறார்களா?

    ReplyDelete
  2. நல்ல விளக்கங்கள்...

    இங்கு தாடிக்கொம்பு கோவிலிலும் சிறப்பு உண்டு... சிறப்பான படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இலுப்பைக்குடி பைரவா போற்றி போற்றி.
    படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தெளிவான விளக்கங்கள்... படங்கள்.... ஆலய அற்புதங்கள்.... எல்லாம் அருமை...

    சொர்ண ஆகர்ஷன பைரவர் கோவில் வரலாறு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.....

    ReplyDelete

  5. காசியில் பைரவர் சந்நதியில் “ பண்டா” வால் முதுகில் தட்டி ஆசிர்வதிப்பதைப் பார்த்தபிறகு பைரவர் என்றாலே எனக்கு ஒரு மாதிரி..... ஆனால் என் மனைவியின் இஷ்ட தெய்வங்களில் ஒருவர் பைரவர்.வழக்கம்போல் அருமையான படங்களுடனான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அறியாத புதிதான தகவல்கள்.
    அழகிய படங்களும்.

    பதிவு பகிர்வு அனைத்தும் சிறப்பு!
    மிக்க நன்றியும் வாழ்த்துகளும்...

    ReplyDelete
  7. thanks for sharing your post is shared in my blog

    ReplyDelete
  8. அருமையான விவரங்களுடன் அழகான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  9. சொர்ண பைரவர்.... - புதிய தகவல்கள் மற்றும் படங்கள். பகிர்வுக்கு நன்றி,.

    ReplyDelete
  10. ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பற்றிய பதிவு, அழகான படங்கள் + அற்புதமான விளக்கக்களுடன் ஜோராக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.


    ooooo 955 ooooo

    ReplyDelete
  11. பைரவரில் இத்தனை பைரவர்கள் உண்டா? வியப்பான தகவல்கள், அருமையான புகைப்படங்கள் என்று பதிவு அருமை!

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு...

    ReplyDelete