


கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட - கற்பகவல்லி



வேதங்கள் நான்கும் அனுதினமும் வந்திருந்து மந்திரம் சொல்லி, ஆராதிக்கும் வேத புரியாம் சுக்கிரபுரி என்ற தலத்தில் பிரம்மா ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து உளமாற பூஜையில் ஈடுபட்டு கயிலாய மயிலை என பெயரும் சூட்டிய அற்புதத்தலம் மயிலை என்னும் மயிலாப்பூர்.
இந்த ஈசனின் கிருபையாலேயே பிரம்மா தான் இழந்தவற்றையெல்லாம் மீண்டும் பெற்றார்..
பார்வை இழந்த சுக்கிர பகவானே பார்வை பெற்ற தலம் இந்த கபாலீஸ்வர க்ஷேத்திரம்.
எப்படிப்பட்ட நோயாயினும் குணம் பெறும் என்பது, இன்றும் கண்கூடு.
கபாலீஸ்வரர் என்று போற்றப்படும் சிவபெருமானை இங்கே பிரதிஷ்டை செய்தபோது, பகவான் மகாவிஷ்ணு ரிஷிகள் புடைசூழ கலந்துகொண்டார்.
இப்பூவுலகில் இதற்கு சமமான ஒரு புண்ணிய தேசம் கிடையாது என்று விஷ்ணுவே கூறியிருக்கும் முக்கியத்துவமும் பராக்கிரமும் நிறைந்த தலம் ..

மகாலட்சுமி தேவியே கற்பகாம்பாளுக்கு ஆராதனை செய்தார் என்கிறது ஓலைச்சுவடி.
வெள்ளிக்கிழமைகளில், தங்க காசு மாலையிட்டு அம்பாள் கற்பகவல்லி வீற்றிருக்கையில், மகாலட்சுமியும் சரஸ்வதிதேவியும் எதிரே அமர்ந்து வழிபாடு செய்கிறார்கள்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அன்னை கற்பகாம்பாளை வழிபடுபவருக்கு கண்டிப்பாக மாங்கல்ய பலம் சேருவதுடன் சகல ஐஸ்வர்யங்களும் குவியும் என்கிறார், அகஸ்தியர்.


மயில் ரூபத்தில் பார்வதி பிராட்டியார் இந்த கயிலாய மயிலையில் தவமிருந்து சிவதரிசனம் பெற்றதால் மயிலை இறைவனின் அருளாகிய காந்த அலைகள் நிரம்பித் ததும்பும் அற்புதம் கபாலீஸ்வரன் சந்நதியில் வினாடி பிசகாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ராமர், லட்சுமணனுடன், தனது முக்கிய சேனைத் தலைவர்களுடன், குல குருக்களுடன், ஆராதித்த தலம் இந்த கபாலீஸ்வரர் சந்நதி. அப்போது அங்கு ‘ஜெய ஜெய ராமா, ஜெய ஜெய ரகுராமா, ஜெய ஜெய சீதாராமா,’ என அசரீரி முழங்கியது. பின் ராமர் ராவணேஸ்வரனை எளிதில் வென்று, சீதையை மீட்டார். ஜெயராமனானார். ‘இன்றளவும் என்றும் ஆஞ்சநேயர் இந்த ராமநாமத்தையே மந்திரமாக்கி பாடி வருகிறார்’

ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு முதல் அடியான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ என எடுத்து தந்து ஆசி ஈந்தது, இங்குள்ள கற்பகவல்லி நாயகி என்று நாடி கூறுகிறது.
இந்த மயிலை மாடவீதியில்தான், கற்பகவல்லி சந்நதிக்கு நேர் எதிராக இருந்த வீட்டில்தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பது அகஸ்தியர் வாக்கு.
கபாலீசன் அருளால், இறந்து போன சிவநேசரின் மகள் அங்கம் பூம்பாவை உயிர் பெற்று மீண்டார் என்றால், சிவனின் கீர்த்தியை, கபாலீஸ்வரனின் கிருபையை என்னென்பது!

வாயிலார் நாயனார் முக்தி பெற்ற தலம் .
ஞானசம்பந்தர் உள்ளிட்ட நால்வரால் போற்றிப் பூஜிக்கப்படுவது கபாலீஸ்வரன் ஆலயம்.

உற்சவ காலங்களில், அதிகார நந்தி மற்றும் கிளி வாகனங்களில் ஈஸ்வரன் வருகையில், தேவர்களும், சப்த ரிஷிகளும், சப்த மாதாக்களும், சித்தர்களும், இன்னபிற சித்தர்களும் அரூபமாக கலந்து கொண்டு சிவனை ஆராதிக்கின்றனர்.














கற்பகவதி நற்கதி அருளட்டும். நன்றி
ReplyDeleteஇன்று காலை எழுந்ததும் எனது முகப்புப் பலகையில் ( ) முதல் பதிவாக உங்களது ” அற்புதங்கள் அருளும் கற்பகவல்லி “ கண்டேன். கனகவல்லியின் தரிசனம். எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் எனது நினைவுக்கு வந்தது.
ReplyDeleteகற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,
விற்கோல வேதவல்லி விசாலாட்சி,
விழிகோல மாமதுரை மீனாட்சி,
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே
வெள்ளிக்கிழமை காலை கற்பகாம்பாள் தரிசனம்.... இந்த நாள் இனிய நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.... நன்றி...
ReplyDeleteதினந்தோறும் கற்பகாம்பாள் , கபாலீசவரர் கோவில் அருகிலேயே பணிபுரியும் பாக்கியம் ஆறு வருடம் முன்ப வரை இருந்தது.
ReplyDeleteமீண்டும் உங்கள் பதிவால் கயிலையாம் மயிலைக்கு மனம் பறந்து சென்றது.
கற்பகாம்பாள் அற கிடைக்க பிரார்திப்போமாக!
வெள்ளிக்கிழமை கற்பகாம்பாளை வழிபட மகாலட்சுமியும்.சரஸ்வதியும் வருவதால் மூன்று தேவிகளின் அருளும் கிட்டிவிட்டது.
ReplyDeleteமிகவும் நன்றி.
படங்கள் எல்லாம் அழகு.
வாழ்த்துக்கள்.
thanks for sharing. your page is shared in my blog.
ReplyDeleteசிறப்பான தலத்தைப் பற்றிய தகவல்களும் படங்களும் அழகு... அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிரு.தி. தமிழ் இளங்கோ அவர்கள் சொன்ன பாடல் நினைவிற்கு வந்தது...
பதிவும் படங்களும் அருமை. கற்பகாம்பாளை வழிபட்டோருக்கு என்றுமே நல்ல வழிதான். நன்றி...
ReplyDeleteஇறுதியான படம் அடடா எத்தனை எத்தனை அழகு அது என்னங்க தெப்பக்குளமா ?
ReplyDeleteகற்பகவல்லித்தாயாரின் தரிசனம் இன்று. மிகவும் அழகான படங்களுடன் தகவல்கள் இன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteகற்பூரநாயகி காட்டும் கருணை மழைநமக்கு
ReplyDeleteபொற்பூவென பொலியட்டும் பொழிந்து.
மனம் நிறைந்த படங்களும் பதிவும் சகோதரி!
அற்புதம்!
பகிர்விற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
நல்ல தரிசனம்...
ReplyDeleteவழக்கம் போல படங்கள் அருமை...
ReplyDeleteகற்பகவல்லி நின் பொற்ப{பா]தங்களுக்கு என் அன்பான வந்தனங்கள்.
ReplyDelete>>>>>
கோபுரங்கள், தேர்கள், தெப்பங்கள் என அனைத்துப்படங்களும் அழகோ அழகு.
ReplyDelete>>>>>
அகஸ்தியர் சொல்லியுள்ள மாங்கல்ய பலமும், சகல ஐஸ்வர்யங்களும் தங்களின் இந்தப்பதிவினைப் பார்ப்போருக்கும், படிப்போருக்கும் கூட நிச்சயமாகக் கிட்டும்.
ReplyDeleteஊக்கத்துடன் ஆக்கம் கொடுத்துள்ள தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நலங்களும் வளங்களும் தருவாள் அந்த அன்னை கற்பகவல்லித்தாயார்.
>>>>>>
அற்புதப்பதிவாக அருளியுள்ள கற்பகவல்லிக்கு அடியேனின் ம்னமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 954 ooooo
கற்பகவள்ளியின் பொற்பதங்களை புகைப்படத்தில் கண்டு சரண் அடைந்தேன். மயிலாபூரின் தெப்பக்குளம், நிலவொளியில் மின்னும் கோபுரங்கள், தெப்பத்திருவிழா என்று புகைபடங்கள் கண்ணுக்கு விருந்து!
ReplyDelete