டால்பின்கள் , திமிங்கலங்களை போல இல்லாமல் அரிய கடல்வாழ் பாலூட்டியான வேகமாக நீந்தத் தெரியாதவை..
கடல் பசுக்கள் மனிதர்களுக்கு அரிதாகத்தான் காணமுடிகின்றன..!
டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்கு
முதுகு துடுப்புகள் இல்லை.
கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிப்பதில்லை.
மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன.
எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுப்படுவதில்லை.
குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில்,
சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும்.
உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது.
கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான்.
நிலத்தில்வாழும் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள்
கடல் அடியில் வளரும் புல்வகைகளை மேய்ந்து கொண்டிருக்கும்.
கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதை கடல் பசுக்கள் விரும்புகின்றன,,!
தாய்லாந்தில் நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக்களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது.
தாய்லாந்தில் நகரின் நினைவாக கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகக்கிடைக்கின்றன..!.
தாய்லாந்து மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும்,
அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது.
மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை..
கடல் பசுக்களின் பற்களில் உள்ள வளையங்களைக் கொண்டு அவற்றின் வயதைக் கணிக்க முடியும்.
சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டையாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்யாத இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது.
அசைவ பிரியர்களுக்காக பல நாடுகளில் பல காலமாகவே வேட்டையாடபட்டு வருகின் றன.
நம் பகுதி மீனவர்கள் பொதுவாக கடல் பசுக்களை வேட்டையாடச் செல்வதில்லை.
ஆனால் மீன்களுக்காக கடலில் போடபடும் வலைகளில் சில சமயம் கடல் பசுக்கள் வந்து சிக்கி கொள்ளும்போது பிடிக்கப்படுகின்றன.
அற்புதமான படங்கள் அனைத்துமே அருமை.வாழ்த்துக்களுடன் தொடருங்கள்
ReplyDeleteகடல் பசுக்கள் பற்றி நான் இதுவரை அறிந்ததில்லை. இப்போது விவரமாக விரிவாக அறிய முடிந்தது படங்களும் ஒவ்வொன்றும் அருமை. மிக்க நன்றி!
ReplyDeleteபடங்கள், தகவல்கள் அனைத்தும் அருமை... நன்றி அம்மா...
ReplyDeleteஆங்கிலத்தில் seal என்று சொல்வது தான் கடல் பசுக்களா?
ReplyDeleteஅறிய ஆவல்...
கருத்துரைக்கு நன்றிகள்..
Deletehttp://en.wikipedia.org/wiki/Elephant_seal
கடல்பசுக்கள் பற்றி இதுவரை அறியாத பல தகவல்களை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
கடல் பசுக்கள் சுத்த சைவம் என்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteஆனால் அவற்றையும் வேட்டையாடி கொன்று தின்றுவரும் மனிதர்களை நினைக்க வேதனையாக உள்ளது.
இதுவும் ஒருவித பசுவதை என்பது போல நினைத்தால் நெஞ்சு பதறுகிறது.
>>>>>
அழிந்து வரும் விலங்கினம் என்பதற்கான காரணங்கள் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளன.
ReplyDeleteமேலும் பல விபரங்களும் அறிய ஆவலாக உள்ளது. இதில் ஏராளமான சந்தேகங்களும் எனக்கு உள்ளன.
>>>>>
புதுமையான பதிவு.
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
தேடித்தேடி கொடுத்துள்ள படங்களும் மிகவும் அழகாக உள்ளன.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 956 ooooo
கடல் பசுக்கள் பற்றிய அரிய தகவல்கள் புதுமை, அருமை..
ReplyDeleteகடல் பசுக்கள் என்ற பெயரே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சீல் என்று சொல்வதுதான் இந்த விலங்கினமா? இல்லை இது வேறா? கடலுக்குள் ஒரு சாக பட்சிணி என்ற தகவல் வியப்பாக இருக்கிறது.
ReplyDeleteமனிதனைப் போலவே அது செய்யும் சாகசங்கள் வேடிக்கையாக இருக்கின்றன!
கடல் பசுக்கள் அறிந்திராத அரிய தகவல். ஆச்சரியம்.
ReplyDeleteபசு என்றவுடன் எம்மையுமறியாமல் அவற்றில் ஓர் அனுதாபம்.
அழகிய படங்கள். அனைத்தும் மிகச்சிறப்பு.
பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
உங்கள் பதிவின் மூலம் கடல் பசுக்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. உடற்பயிற்சி செய்யும் கடல் பசு.... கவர்ந்தது.
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு நன்றி.
அழகான பதிவு!!! ஆனா இவ்ளோ படத்தையும் எங்கேருந்து சுட்டீங்கன்னுதான் தெரியல ஹ ஹா....
ReplyDeleteகடல் பசு செய்தி அருமை. படங்கள் எல்லாம் மிக அழகு.
ReplyDeleteகடல் பசுக்களா ?..........!!!!!
ReplyDeleteஇதுவரை அறிந்திராத தகவல் அருமை ! வாழ்த்துக்கள் தோழி
மிக்க நன்றி பகிர்வுக்கு .
கடல் பசுக்கள் பற்றி இதுவரை அறிந்திராத தகவல்களை தந்ததற்கு நன்றி..
ReplyDeleteஅரிதான கடல் பசுக்களை எளிதாக காண வைத்த பதிவைத் தந்தமைக்கு நன்றிகள்...
ReplyDelete