ஐராவ தம்யானை ஆசைக்குக் காட்சிதந்து
மெய்யென நின்றார் சிவபெருமான்-தெய்வம்
பெயரே கஜாந்திக மூர்த்தி எனவாம்
செயல்தடை நீங்கும் நினை!
சூரபத்மன் பெரிய அசுரன். அவனுடைய புதல்வன் பானுகோபன் என்ற அசுரன். பானுகோபனுடன் இந்திரலோகத்து யானையான ஐராவதம் போர் புரிந்தது. அப்போரில் ஐராவதத்தின் கொம்பு ஒடிந்தது.
திருவெண்காடு சென்று ஐராவதம் சிவனைத் துதித்தது..
ஐராவதத்தின் வழிபாட்டில் மகிழ்ந்த ஐயன் ஐராவதத்திற்குக் காட்சியளித்த கோலம் -விந்தை விளக்கி விளம்பும் கஜாந்திகம் திருக்கோலம் ...!
கஜாந்திக மூர்த்தி
சூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் மறைவாக வசித்து சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான்.
தேவர்கள் கொடுமை தாங்காததால் இந்திரனைத் தேடி சீர்காழி வந்து இந்திரனையும் அழைத்துக் கொண்டு திருக்கயிலை அடைந்தனர்.
இந்திராணி ஐயப்பனின் பாதுகாப்பில் இருந்தார்.
கயிலையில் சனகாதி முனிவர்கள் யோகத்தினைப் பற்றி சிவபெருமானிடம் அளவளாவிக் கொண்டிருந்ததால் இவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்த சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அசுமுகையும் அவளது தோழியான துன்முகியும் சீர்காழி சென்று இந்திராணியை சூரபத்மனை மணம் செய்து கொள்ளச் சொன்னார்கள்.
இதற்கு மறுத்த இந்திராணியை இழுத்துக்கொண்டு சென்றதைப்பார்த்த ஐயப்பன் அவர்களுடன் கடுமையான போர் நடத்தினார்.
அவர்கள் இந்திராணியை கொடுமைப்படுத்தியதற்காக அவர்களின் கையையும் வெட்டி அனுப்பிய செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் அவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டான்.
சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான்.
பானுகோபன் இந்திராணியையும், இந்திரனையும் தேடி இந்திரலோகம் அடைந்து இந்திரனின் புத்திரனாகிய ஜெயந்தனிடம் போரிட்டு அவர்களது ஐராவதத்துடன் கிளம்பினான்.
அப்போரில் ஜெயந்தன் மயங்கினான். இதனால் ஐராவதம் பானுகோபனுடன் சண்டையிட்டது. அதுவும் அடிவாங்கி பின்வாங்கியது.
பின் அனைத்து தேவர் குழாமையும் அமர்த்தினான். இதனால் மனம் வருந்திய ஐராவதம் திருவெண்காடு சென்று முப்பொழுதும் நீராடி இறைவனைத் துதித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு காட்சிக்கொடுத்தார்.
அதன்பின் அதன் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த கொம்புகளை புதுப்பித்தார். பழையபடி இந்திரனின் வாகனமாக்கினார்.
அதற்குப்பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான்.
ஐராவதமும் அவனுடன் சென்றது,
தேவர்குழாம் மீட்கப்பட்டனர்.
ஐராவதமாகிய ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி காட்சிகொடுத்து வேண்டும் வரம் கொடுத்து கஜாந்திக மூர்த்தி என வணங்கப்படும் சிவபெருமானை சீர்காழியருகே அமைந்துள்ள திருவெண்காட்டில் இறைவனின் திருநாமம் திருவெண்காட்டுநாதர் என்றும் இறைவி திருநாமம் பிரம்மவித்யா நாயகி என்றும் வணங்கப்படுகிறது.
திருவெண்காட்டில் அமைந்துள்ள அக்னி, சூர்ய, சந்திர தீர்த்ததில் அடுத்தடுத்து நீராடி இறைவனை வழிபட இந்திரலோக வாழ்வு தித்திக்கும்.
மகாவில்வார்ச்சனையும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க, தடைவிலகி எடுத்தக் காரியம் ஜெயமாகும் என்பது ஐதீகம்.

எப்போதும்போல இப்போதும் எல்லா படங்களும் உங்கள் விளக்கமும் அருமை
ReplyDeleteஅறியப்படாத பல சிறப்பான தகவல்களை வழங்கும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தோழி .படங்கள் மிக மிக அழகாக உள்ளது .
ReplyDeleteஅருமையான படங்கள்.. நன்றி...
ReplyDeleteசிறப்பான விளக்கங்களுடன் படங்கள் மிகவும் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDelete7 வருடங்கள் திருவெண்ட்டில் இருந்தோம் இறைவனை வணங்கும் பாக்கியம் பெற்றோம். இப்போதும் மாசி மாதம் திருவிழாவுக்கு போய் விடுவோம்.
ReplyDeleteகதைகள், படங்கள் எல்லாம் அருமை.
pictures are so great
ReplyDeleteதிருவெண்காட்டுறை சிவனை மனத்தில் ஏற்றி வேண்டுகிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும் அனைத்திலும் ஜெயம் கிடைக்கட்டும்.
அழகிய படங்களும் அற்புத வரலாறும்.
பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
"கஜாந்திக மூர்த்தி" பற்றியும், ஐராவதம் என்ற யானை பற்றியும் பல தகவல்களை அறிய முடிந்தது. சந்தோஷம்.
ReplyDelete>>>>>>
பாவம் அந்த ஐராவதம் என்ற யானை.
ReplyDeleteஅதை மீண்டும் மீண்டும் மனம் வருந்திடச்செய்து, வெறுப்பேற்றிக்கொண்டே அல்லவா இருக்கிறார்கள்?
அதில் ஓர் மட்டில்லா மகிழ்ச்சி அரக்க குணம் படைத்தவர்களுக்கு. ! ;(
எப்படியோ இறைவன் அருளால் மட்டுமே யானைக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எல்லோருக்குமே இறைவன் அருளால் நல்லது நடக்க வேண்டும். நல்ல புத்தி ஏற்பட வேண்டும்.
வாயில்லாப்பிராணியான யானையால் தன் வருத்தங்களைச் சொல்லிக்கொள்ளக்கூட முடியவில்லை ;( பாவம் அது.
>>>>>>>
பதிவுக்கு மிகவும் சம்பந்தமான ;))))) யானை முயலை விழுங்குவதும், முசல்குட்டி யானையை விழுங்குவதுமான கடைசி அனிமேஷன் ப்டம் மிகவும் பிடித்துள்ளது. பதிவை விட அது மிகவும் ஜோராக உள்ளது. ;)
ReplyDelete>>>>>>>
புரியாத புதிரான புராணக்கதைகளை நல்லாவே சொல்றீங்கோ.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்ள், நன்றிகள்.
ooooo 957 ooooo
சிறப்பான பதிவுடன்,அழகிய படங்கள்.நன்றிகள்.
ReplyDeleteஅறியாத பல தகவல்கள். படங்களும் வழமை போல அருமை...
ReplyDelete
ReplyDeleteவெற்றிலைக் குவியல் அரிய காட்சி.
படங்களும் அருமை.
பல இனிய தகவல்களிற்கும் நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் ..
Deleteகருத்துரைக்கு இனிய நன்றிகள்..
அவை வில்வ இலைகள்..
வில்வ அர்ச்சனை சிவபெருமானுக்கு மிகவும் விஷேசமானது...