Saturday, July 20, 2013

ராமாயண மாதம்




கேரளாவில் மலையாள மாதமான கற்கடக மாதம் -தமிழில் ஆடி மாதம் -ராமாயண மாதமாக கொண்டாடப்படுகிறது. 

ஆடி மாதம் முழுவதும் வீடுகளிலும், கோயில்களிலும்
ராமாயண பாராயணம் நடப்பது வழக்கம். 

  16ம் நூற்றாண்டில் வாழ்ந்த, துஞ்சத்து எழுத்தச்சன், வால்மீகி ராமாயணத்தை, மலையாள மொழியில் மொழி பெயர்த்து, "ஆத்யாத்ம ராமாயணம்' 
என பெயரிட்டார்.
எழுத்தச்சன், எழுதிய ராமாயணம், மாதத்தின், 30 நாட்களும், பக்தியுடன் வாசிக்கப்படுகிறது.

ஆடி மாதம் முழுவதும்  எல்லா பகுதிகளிலும் ராமாயணம் எதிரொலிக்கும். ராமாயண பாராயணம். ஆன்மிக உரையாடங்கள், சத்சங்கங்கள் என்று மாதம் முழுவதும் ஆன்மிகத்தில் மக்கள் ஊறி திளைப்பார்கள். 

ஆடிமாதம் முழுவதும் ஆன்மிக ஆரோக்கியம் குறித்து சிந்திக்கும் விதத்தில் அமையும். 

 ராமாயண மாதத்தில் மக்கள் தங்கள் வழக்கமான உணவு முறை,
வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வருவார்கள்..!

ஏராளமான கேரள மக்கள் இந்த ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பர். 

மழை பெய்து சுற்றுச்சூழல் குளிர்ச்சியாக இருப்பதால் ஆயுர்வேத சிகிச்சைகளைத்துவக்குவதற்கு இந்த காலநிலை சிறந்ததாக கருதப்படுகிறது. 

நோய் இல்லாவிட்டாலும் சுக சிகிச்சைக்காக இந்த மாதத்தில் ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளை நாடுவோர் ஏராளம். 

ஆடி மாதத்தில் மருந்து கஞ்சி குடிப்பது கேரளாவில் விசேஷமான அம்சம். 

உடலை தூய்மைப்படுத்தும் சக்தி உள்ளதாக நம்பப்படும் கற்கடக கஞ்சியை ராமாயண மாதத்தில் அருந்துவார்கள்..

 தசபுஷ்பம், தழுதாமை, கைதோநி, முயல் செவியன், முக்கூட்டு, விஷ்ணுகாந்தி, கீழாநெல்லி போன்ற30க்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய், கிராம்பு, சுக்கு, கிராம்பு, சீரகம் ஆகியன சேர்த்து  மருந்து கஞ்சி தயாரிக்கப்படுகிறது. 

சர்க்கரை நோயாளிகளுக்கு என தனி கஞ்சியும் தயாரிக்கப்படுகிறது.
ராமாயண நாயகன் ராமனின் இளவல் பரதன்  கூடல்மாணிக்கம் 
கோவில்  கொண்டிருக்கிறார்..கோவிலின் தெய்வம் பரதன் ...

திரிபரையாரில் ராமன் 
இரிஞ்சலகுடா கூடல்மாணிக்கம் கோவிலி்ல் பரதன் 
மூழிக்குளத்தில் லட்சுமணன் 
பையமாளில் சத்ருக்கனன் கோவில்கள் உள்ளன.
ஒரே நாளில் நால்வரது கோவில்களையும் சென்று தரிசிப்பது 
நாலம்பல யாத்திரை "என அழைக்கப்படுகிறது.  

கேரள மக்களின்  வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும்  யானைகளை 
"மேற்கு மலைத்தொடரின் குழந்தைஎன்றே  அழைக்கிறார்கள்.  
யானைகளின்றி கேரளத்தில் எந்த ஒரு விழாவும் கொண்டாடப்படுவதில்லை
குறைந்தது ஒரு யானையாவது கட்டாயம் இடம் பெற்றிருக்கும் 
யானைகள் நெற்றிப்பட்டம் ,கழுத்தாபரணம்மணிகள் அணிந்து வெண்சாமரம் வீசிஆலவட்டம் சுழற்றிபஞ்ச மேளம் ஒலிக்க திருவீதி ஊர்வலம் காண்பது அழகு திருச்சூர் பூரத்திருவிழா இதற்கு ஒரு சான்று 

பொதுவாக கோவில்களில் ஒவ்வொரு நாளும் ஐந்து கால பூஜை
மூன்று முறை சிவேலி(சுவாமி ஊர்வலம்நடத்துவது வழக்கம்
இதற்கு மாறாக உள்ளது கூடல்மாணிக்கம் கோவில்
இக்கோவிலில்,மூன்று கால பூஜை மட்டுமேசிவேலி இல்லை
திருச்சூர் பூரத்திருவிழாவிற்கு மறுநாளான சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தன்று பத்து நாள் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கும் போது மட்டுமே காலைமாலை இரு நேரமும் நடைபெறும் சிவேலியில் பங்கேற்கும் பதினேழு யானைகளில் ஏழு பிரதான யானைகளின் முகப்படாம் சுத்தமான தங்கத்தாலும்மற்றவை  வௌ்ளியாலும் செய்யப்பட்டவைவேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு...
செண்டைதாளம்,கொம்புகுழல் வாத்தியங்கள் முழங்க வரும் திருவீதி உலாவில்இறைவனை சுமந்திருக்கும் யானையின் இருபுறமும் குட்டியானைகள் நடந்து வருவது மற்றுமொரு சிறப்பு.

23 comments:

  1. VERY GOOD MORNING !

    நேற்று நீண்ட நேரம் உங்களைக்

    காணாத கண்ணும் கண்ணல்ல ...........
    ................................................................
    ................................................................

    எங்கிருந்தாலும் வாழ்க !

    >>>>>

    ReplyDelete
  2. ராமாயண மாதம் என்ற இன்றைய தலைப்பும் செய்திகளும் புதுமை + அருமை + இனிமை + WHAT NOT !

    SUPERB !

    >>>>>

    ReplyDelete
  3. மிக அழகான படங்களுடன், கேரளப்பாணியில் அற்புதமான தகவல்கள் அளித்து அசத்தியுள்ளீர்கள்.


    >>>>>

    ReplyDelete
  4. இந்தப்பதிவினைப் படித்தாலே உங்கள் திருக்க்ரங்களாலேயே அன்புடன் தயாரித்து அளித்த ’கற்கடகக் கஞ்சியை’ அண்டா அண்டாவாக அள்ளிப்பருகிய திருப்தி ஏற்படுகிறதே ! ;))))))

    >>>>>

    ReplyDelete
  5. 5]

    //தசபுஷ்பம், தழுதாமை, கைதோநி, முயல் செவியன், முக்கூட்டு, விஷ்ணுகாந்தி, கீழாநெல்லி போன்ற 30க்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய், கிராம்பு, சுக்கு, கிராம்பு, ஜீரகம் ஆகியன சேர்த்து மருந்து கஞ்சி தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிளுக்கு என தனி கஞ்சியும் தயாரிக்கப்படுகிறது.//

    ஆரோக்யம் அளிக்கும் தகவலாக உள்ளது.

    உடனே அந்தக் கஞ்சியைக் குடிக்கணும் போல எழுச்சி ஏற்படுகிறது.

    //நோய் இல்லாவிட்டாலும் சுக சிகிச்சைக்காக இந்த மாதத்தில் ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளை நாடுவோர் ஏராளம். //

    ஆஹா, வரும் முன் காப்போர்கள் வாழ்க !

    >>>>>

    ReplyDelete
  6. 6]

    //ஒரே நாளில் நால்வரது கோவில்களையும் சென்று தரிசிப்பது " நாலம்பல யாத்திரை "என அழைக்கப்படுகிறது.//

    எதையாவது சொல்லுங்கோ. ;)

    ஆனால் எங்களையெல்லாம் ஒரு தடவையாவது உங்களுடன் கூடவே இதுபோன்ற புனித யாத்திரைக்க்குத் தலைமை தாங்கிக் கூட்டிப்போகாதீங்கோ. ;(

    >>>>>

    ReplyDelete
  7. 7]

    //யானைகள் நெற்றிப்பட்டம் ,கழுத்தாபரணம், மணிகள் அணிந்து வெண்சாமரம் வீசி, ஆலவட்டம் சுழற்றி, பஞ்ச மேளம் ஒலிக்க , திருவீதி ஊர்வலம் காண்பது அழகு . திருச்சூர் பூரத்திருவிழா இதற்கு ஒரு சான்று.//

    உங்கள் பதிவுகளிலாவது அடிக்கடி இந்த யானைகளின் அழகினைக் காணமுடிகிறதே.

    அதுவரை ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.

    >>>>>

    ReplyDelete
  8. 8]

    //திருச்சூர் பூரத்திருவிழாவிற்கு மறுநாளான சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தன்று பத்து நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் போது மட்டுமே காலை, மாலை இரு நேரமும் நடைபெறும் சிவேலியில் பங்கேற்கும் பதினேழு யானைகளில் ........

    ஏழு பிரதான யானைகளின் முகப்படாம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டவை. வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு...//

    தங்கமான தகவல்கள் ...... கோவை சொக்கத்தங்கமான தகவல் களஞ்சியத்திடமிருந்து. ;)))))

    >>>>>

    ReplyDelete
  9. 9]

    //செண்டைதாளம்,கொம்பு, குழல் வாத்தியங்கள் முழங்க வரும் திருவீதி உலாவில், இறைவனை சுமந்திருக்கும் யானையின் இருபுறமும் குட்டியானைகள் நடந்து வருவது மற்றுமொரு சிறப்பு.//

    குட்டிகள் என்றாலே எப்போதுமே அழகோ அழகு தான். ;)))))

    அதுவும் யானையில் குட்டிகள் என்றால் கேட்கவே வேண்டாம். காணக்கண்கோடி வேண்டுமே

    இந்தத்தகவலுக்கு அருகே உள்ள படமும், அதன் மேல் உள்ள படமும் திறக்க மறுக்கின்றன.

    அதனால் அந்தக் குட்டிகளின் அழகை தரிஸிக்க முடியவில்லை. ;(

    >>>>>

    ReplyDelete
  10. 10]

    முதல் படம் அந்த காலத்து அருமையான ஓவியம்.

    பதிவு முழுக்கப் படிக்கப்படிக்க எல்லாமே ஜோராக உள்ளன.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 976 ooooo

    ReplyDelete
  11. தகவல்கள் + படங்கள் அனைத்தும் அருமை...

    அப்பாடா...! இன்று ஐயா அவர்களின் கருத்துரையும் ரசிக்க முடிந்தது... அவருக்கும் நன்றி...

    ReplyDelete
  12. Yes. This is Ramayanamasam.
    I am having old, very old Ramayana book from my motherinlaw in Malayalam. I dontknow to read Malayalam. So from 1st of adi I place it very carefully on an wooden stand and read Tamil Ramayana one sargam a day on these days.
    I wish i could visit nalambalam in my lifetime. But dontknow it will happen or not.
    Nice post.
    viji

    ReplyDelete
  13. ராமாயண மாதம் கற்கடகக் கஞ்சி இவை பற்றி அறிய முடிந்தது., எப்படி இவ்வளவு ஆன்மீக தகவல்களை சேகரிக்கிறீர்கள்?ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  14. ராமாயண மாதம் கற்கடகக் கஞ்சி இவை பற்றி அறிய முடிந்தது., எப்படி இவ்வளவு ஆன்மீக தகவல்களை சேகரிக்கிறீர்கள்?ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  15. படமும் பதிவும் அருமை ரசிக்க வைத்தது

    ReplyDelete
  16. அருமையான பகிர்வு. படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  17. நாங்கள் குடியிருக்கும்பகுதியில் அமைந்துள்ள ஜலஹள்ளி ஐயப்பன் கோயிலிலும் இந்த கர்கடக மாதம் ராமாயண பாராயணம் தினமும் நடைபெறுகிறது. வழக்கம்போல் பதிவும் படங்களும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. நான் பிறந்த மாதம் ஆடி மாதம் ,விரும்பிப் படிக்கும் கதை ராமாயணம் .
    ஆடி மாதத்தில் இத்தனை அருமையாக பல சிறப்பம்சங்கள் நிகழும்
    என்று தெரிந்துகொண்டதில் பெருமையடைகின்றேன் .படங்களும்
    பகிர்வும் மனத்தைக் கொள்ளை கொண்டது .வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  19. பயனுள்ள தகவல்கள்.. நன்றி

    ReplyDelete
  20. இராமாயண மாதம் - நாம் கூட கடைபிடிக்கலாம் போலிருக்கிறதே!
    நாலம்பல யாத்ரா, மேற்குமலைதொடரின் குழந்தைகள் பற்றிய தகவல்கள் சிறப்பு!

    ReplyDelete
  21. இராமாயண மாதம்.... புதிய செய்திகள்....

    படங்களும் ரசித்தேன்...

    ReplyDelete
  22. good pictures of elephants - ramayana month is a new information

    ReplyDelete
  23. அருமை...
    படங்களையும் ரசித்தேன்.

    ReplyDelete