Tuesday, July 16, 2013

அருள் மழை பொழியும் அம்மன் மாதம்..



அன்னை பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்

அம்மனுக்கு உரிய மாதமாக  போற்றப்படும் ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதமாக சிறப்பிடம் பெறுகிறது..

ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.

ஆடி மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் ஆடி மாதத்தில் பல பண்டிகை களைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது ..!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து  விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்

கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

நடுவே மகாலட்சுமியும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர்.

தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும்.
பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம்.

ஆடி மாதம் முழுதும் ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள்.
நான்காவது வாரம் காய்கறி களால் அலங்காரம் செய்வர்.
ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள்.
கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழாவில்  மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து, வரும் பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.

அளவில்லாத சிறப்பு பெற்ற ஆடி மாதம் அனைத்து நலன்களையும் வழங்குவது!


19 comments:

  1. ஆடி மாத அருள் மழையில் நனைந்தேன். நன்றி

    ReplyDelete
  2. ம்... ஆடி மாதம் ஆரம்பித்து விட்டது....

    ReplyDelete
  3. மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படம் தகவல் உட்பட படங்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்.....

    கையிலுள்ள நீரில் அம்மன் முகம் தெரிவது போல இருக்கும் படம் மனதைக் கவர்ந்தது....

    ReplyDelete

  5. ”அருள் மழை பொழியும் அம்மன் மாதம்”

    தக்ஷிணாயன புண்யகாலம் ஆரம்பம.

    ’ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’

    ’ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து அடி’

    என்றெல்லாம் ஏதேதோ பழமொழிகள் சொல்லுவார்கள். ;)

    >>>>>

    ReplyDelete
  6. ஆடி மாதம் பிறக்கிறது.

    ஆடி மாதத்தில் அனைத்து பிஸிநெஸ்களும் டல்லாகும்.

    ஆடித்தள்ளுபடியெல்லாம் அறிவிப்பார்கள்.

    ஆனால், தெய்வீகப் பதிவராகிய உங்கள் காட்டில் இனி மழை தான்.

    >>>>>

    ReplyDelete
  7. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.

    அச்சா! பஹூத் அச்சா !!

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்குமா?

    அம்மனின் 1000 மாவது பதிவு இதே ஆடி மாதத்தில் தான் வெளியாகப்போகிறது என்பதிலிருந்தே தெரிகிறதே! ;)))))

    >>>>>

    ReplyDelete
  8. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்குமா?

    அம்மனின் 1000 மாவது பதிவு இதே ஆடி மாதத்தில் தான் வெளியாகப்போகிறது என்பதிலிருந்தே தெரிகிறதே! ;)))))

    அந்த நாளும் வந்திடாதோ என்ற ஏக்கத்துடன் ........ நான்.



    >>>>>

    ReplyDelete
  9. அகிலமெல்லாம் போற்றும் அம்மன் அருள்.
    ஆடி மாதம் அம்மனுக்கு சிறந்தது அதை அழகாய் சொன்ன பதிவு.
    மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    எல்லோர் வாழ்விலும் மூன்று தேவியரும் அருள் மழை பொழியட்டும்

    ReplyDelete
  10. நாளை ஆடிமாதம் துவங்கும் ஒருநாள் முன்பே, இன்றே ஆடிமாதப்பிறப்பு தக்ஷிணாயன புண்யகால தர்ப்பணம் செய்ய வேண்டுமாம்

    அதுபோல இன்றே ஆடி மாதச்சிறப்புக்களைச் சொல்லும் அழகான பதிவினைக்கொடுக்க ஆரம்பித்துள்ளீர்கள்.

    இன்னும் ஆடி மாதத்தில் என்னென்ன பதிவுகள் கொடுத்து அசத்தப்போகிறீர்களோ !!!!!

    நினைத்தாலே இனிக்கிறது..

    மொத்தத்தில் நாங்களும் ’ஆடி’ப்போய் உள்ளமாக்கும்.;)

    நிறைய பின்னூட்டங்கள் இட அம்மனே எனக்கு சக்தியும் ஆர்வமும் அளிக்க வேண்டுகிறேன்..

    >>>>>

    ReplyDelete
  11. படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல அழகோ அழகு.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் துணை.


    ooooo 972 ooooo

    ReplyDelete
  12. good pictures nice post

    please write about pithru tharpanam in aadi amavasai -

    is there any way of removing pithru dosha except going to temples like rameswaram as in some families , giving tithi is not accepted hurting youngsters like us.please write if there is any home remedy.

    ReplyDelete
  13. படமும் தகவலும் அருமை...

    ReplyDelete
  14. ஆடி மாத அருள் மழை காரணம் அறிந்து கொண்டேன்... மகிழ்ச்சி...

    ReplyDelete
  15. Aha,
    kaiyil ulla neerill amman mugam..........
    Ethu ethu ethuthan Rajeswarien special......
    Adi kalaikatta thodanivittau
    neeraya neeraya ethirparkiroom....
    viji

    ReplyDelete
  16. ஆடி வந்தால் அம்மன் நினைவு உடனே வரும். கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலக்ஷ்மி மந்திருக்கு எங்களைக் கூட்டிப் போய் மூன்று தேவியர்களையும் வேறு வேறு அலங்காரங்களில் தரிசனம் செய்வித்ததற்கு நன்றி!

    ReplyDelete

  17. அம்மன் பெயரால் இந்த மாதத்தில்தானே ஏழைகளுக்கு கூழ் ஊற்றுவார்கள்.? விழாக் காலங்களில் இம்மாதிரி கோயில்களுக்குப்போக வேண்டும். . படங்களும் பதிவும் அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. ஆடி மாத அம்மன் தரிசனம்

    அற்புதம் ஆனந்தம் நெஞ்சில் நிறைந்தது.

    ReplyDelete
  19. ஆடி மாதச்சிறப்புப் பற்றிய பதிவு மிக நன்று.
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete