Wednesday, July 3, 2013

வரம் தரும் வரதராஜப்பெருமாள்..






 சாய்வான  தோற்றத்துடன் காட்சியளுக்கும் நைனாமலையின் உயரம் 3 கிலோ மீட்டர்.
 மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட 3,700 படிகள் உள்ளன.   மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, கோவில் கட்டப்பட்டுள்ளது சிறப்பம்சமாகத் திகழ்கிறது ..!

.மலை மீது திருத்தலம் நான்கு யுகமாகக் கொண்டு
இந்திரஜாலம்,
பத்மஜாலம்,
யாதவா ஜாலம்,
நைனா ஜாலம் ஆகிய பெயர்களுடன் திகழ்கின்றது.

மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. இவற்றில் காலப்போக்கில் பராமரிப்பின்றி மறைந்து தற்போது கடும்பஞ்சத்திலும் என்றென்றும் வற்றாத தீர்த்தங்கள் மூன்று மட்டும் உள்ளன.

வரதராஜப் பெருமாள் குவலயவல்லியுடன் காட்சியளிக்கிறார்.

மலை மீது மகா மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், வெண்ணை தாழ் கிருஷ்ணன், நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், மன்மதன், ரதி, அய்யப்பன், தசாவதார சிலைகளும் உள்ளன.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆனி முதல் தேதி முதல் ஆடி 30ந் தேதி வரை சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி சுவாமி மீது விழுவது விசேஷம்

மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, கட்டப்பட்டுள்ளது

 வரலற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாப்படுகிறது...

புரட்டாசி மாதத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும், லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வார்கள்...
 மூன்றாவது வாரம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரிக்கும்.

 நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை அருகே நைனாமலை உள்ளது.
2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

மலையின் அடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கியபடி நிற்கும் ஆஞ்சநேயர் ஸ்வாமியை வணங்கலாம் ...!

நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்





21 comments:

  1. ஆஹா.சொந்த ஊருக்கு அருகில் இருந்தும் இன்னும் சென்றதில்லை .இனி பார்க்கத் தூண்டி விட்டீர்கள்

    ReplyDelete
  2. வரம்தரும் வரதராஜப் பெருமாள் உறையும் நைனமலை பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. படங்களும் விளக்கங்களும் பெருமாளை தரிசனம் செய்யத் தூண்டுகின்றன

    ReplyDelete
  3. செல்ல வேண்டும்... சிறப்பிற்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தங்கள் தயவால் பதிவில்
    தரிசித்து மகிழ்ந்தோம்
    நேரடியாக சந்திக்க உறுதி பூண்டுள்ளோம்
    படங்களுடன் பகிர்வு மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. 108 therrthangal - this info in new to all of us. thanks for sharing information about nainamalai

    ReplyDelete
  6. சிறிய பதிவாகினும் சிறப்பான பதிவு,

    அதுவும் பெரிய பெருமாளைப் பற்றிய்து.

    >>>>>

    ReplyDelete
  7. பிறந்தாலோ, வளர்ந்தாலோ, படித்தாலோ, கல்வி மாவட்டமாகிய நாமக்கல்லில் மட்டுமே நடைபெற வேண்டும்.

    எல்லா நைனாக்களுக்கும் அந்த பாக்யம் கிடைப்பதில்லையே !

    நைனா மலையைப்பற்றி தங்கள் பதிவினில் படிக்கும் பாக்யமாவது கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே !!

    >>>>>

    ReplyDelete
  8. சென்ற வாரம் பெங்களூர் நந்தி ஹில்ஸ் உச்சிக்குச்சென்றிருந்தேன். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் என்று சொன்னார்கள்.அருமையான இயற்கைக்காட்சிகளைக் கண்டு களித்தேன்.

    இந்த நைனா மலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் ப்ற்றி ப்டித்ததும் ஏனோ அந்த ஞாபகம் வந்தது.

    >>>>>

    ReplyDelete
  9. oh! puthiya thakaval.Nanry.
    இந்திர,பத்ம, யாதவா, நைனா ஜாலம்.
    புதிய பெயர்கள். பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. அருமையான பதிவு. அற்புதமான படங்கள்.

    தொடர்ச்சியாக பின்னூட்டமிடுவதற்குள் பேரன், பேத்தியின் வ்ருகையால் நிறைய குறுக்கீடுகள். இந்தக் குறுக்கீடுகள் ஆயிரமாவது பதிவு வரைகூட நீடிக்கும் சூழ்நிலையும் உள்ளது.

    பாராட்டூக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo 959 ooooo

    ReplyDelete
  11. அருமையான இடமும், படமும்...

    ReplyDelete
  12. எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!

    அழகான அருமையான பிரமிக்கும் பதிவு!
    அற்புதம்!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  13. புதிய தகவல்கள்! சிறப்பான பதிவு!!

    ReplyDelete
  14. Really?
    I came to know about this place from here only.
    Nice post dear. Thanks for sharing.
    viji

    ReplyDelete
  15. சிறிய பதிவில் சிறந்த தகவல்கள். அழகாக மலையில் வீற்றிருக்கும் பெருமாள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. நாமக்கல் சென்றிருந்தேன்! இந்த கோயில் இருப்பதை அறியவில்லை! பகிர்வுக்கு நன்றி! அடுத்த முறை செல்லும்போது தரிசிக்க உதவியாக இருக்கும்! நன்றி!

    ReplyDelete
  17. நேரில் செல்ல இதுவரை இயலவில்லை, உங்கள் உதவியில் தரிசித்து மகிழ்ந்தோம். நன்றி.

    ReplyDelete
  18. நாமக்கல் சென்று இருக்கிறேன், நைனாமலை சென்றது இல்லை.
    வரதராஜ பெருமாளை உங்கள் பதிவில் சேவித்துக் கொண்டேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. அருமையானதொரு பகிர்வு. பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  20. நாமக்கல் தெரியும். அதன் அருகே இத்தனை சிறப்பு வாய்ந்த கோவில் நைனா மலையில் இருப்பது தெரியாது. பகிர்வுக்கு நன்றி!
    அடுத்தமுறை போய் வரம் தரும் வரதராஜனை குவலயவல்லியுடன் சேவித்துவிட்டு வரவேண்டும்.

    ReplyDelete
  21. இதுவரை கேள்விப்படாத கோவில். படங்களும் பதிவும் நன்று.

    ReplyDelete