Tuesday, July 2, 2013

வரம் வழங்கும் வாராகி அம்மன்




நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே..

அம்பிகை, நான்கு திருமுகங்களை உடையவள். 
நாராயணனின் தங்கை என்பதால் நாராயணி. 
தாமரை போன்ற கரத்தில் ஐந்து மலரம்புகளை ஏந்தியவள். 
சம்புவின் துணைவி என்பதால் சாம்பவி. 
இன்பங்களைத் தருபவளான சங்கரி, 

பச்சை (சாமள) நிறம் பொருந்தியவளாதலால் சாமளை, 

வாயிலே நஞ்சைக் கொண்ட பாம்பை மாலையாக அணிந்தவள். 

ஒரு சமயம் வராகத் தோற்றத்துடன் தரிசனம் தந்ததால் வாராகி, 

சூலத்தை ஏந்தினவள் என்பதால் சூலினி, 

மதங்க முனிவரின் திருமகளாதலால் மாதங்கி என்ற பல திருநாமங்களால் அழைக்கப்படும் புகழையுடைய அபிராமியின் திருவடிகள் என்றும் நமக்குப் பாதுகாப்பாயிருந்து காக்கவல்லவை.

என்று அபிராமி அந்தாதியில் அபிராமிபட்டர் அபிராமியை போற்றுகிறார்..
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு அருகே அமைந்துள்ளது வாராகி அம்மன் ஆலயம்.
51 சக்தி பீடங்களில், எட்டாவது பீடமாக விளங்குகிறது.

அம்மனின் உடற்கூறுகளில் கீழ் பற்கள் விழுந்த இடமாக கருதப்படுகிறது.
 அன்னை வாராகி என்ற பெயரிலும், இறைவன் மஹாருத்ரர் என்ற பெயரிலும் எழுந்தருள்கின்றனர்.

நேபாளத்தில் அன்னையை, பராகி என்று அழைக்கின்றனர்.

ஆலயத்தின் உள்பிராகாரத்தில் உள்ள பாதாள குகையில் எழுந்தருளியுள்ள அம்மன், தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தண்டை, கலப்பைஆகியவற்றைத் தாங்கி அபயம், வரதம் காட்டி அருள்புரிகிறார்.

 நள்ளிரவில்தான் அன்னையைக் காண முடியும்.

 தினமும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது.

12 மணி முதல் சூரிய உதயம் வரை கோயில் நடை திறந்திருக்கும்.

விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் அதாவது சூரிய உதயத்துக்கு முன்பு கோயிலின் நடை சாத்தி விடுவது வழக்கம்.
தற்போது வாராகி தேவி அருள்புரியும் இந்தக் கருவறையில் முன்னோரு காலத்தில் மந்திரகாளியம்மன் வீற்றிருந்தாள்.

அந்த ஊரில் இருந்த ஒரு மந்திரவாதி,  தபோ வலிமையைக் கொண்டு காளியம்மனை மந்திரத்தால் கட்டுப்படுத்தி சக்தியை ஒடுக்கி வைத்ததோடு . தேவர்களையும், மக்களையும் வதைத்து, பல இன்னல்களை செய்து வந்தான்.
ஒருநாள் அவ்வூரில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அன்னை, விஷ்ணுவின் அவதாரமான வராக அவதாரம் எடுத்து, கடல் வழியே இந்த ஆலயத்தை வந்தடைந்தாள்.

மந்திரவாதியை வதம் செய்து, காளியம்மனை மந்திரக் கட்டுக்குள் இருந்து காப்பாற்றினாள். மந்திர காளியம்மன் நன்றி தெரிவித்ததோடு இங்கேயே தங்கும்படி கேட்டுக்கொண்டதால், மக்களைக் காத்தருள வாராகி அம்மனாக எழுந்தருளினாள்.
 தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரன் மற்றும் ரத்தபீக்ஷசுரன் என்னும் அசுரர்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர்.

கோபம் கொண்ட ஈசன் அசுரர்களை அழிப்பதற்காக, விஷ்ணுவின் அம்சமான வராக அவதாரத்தில் அன்னையை உருவாக்கினார்.

அன்னையும் அசுரர்களை வதம் செய்து தேவர்களைக் காத்தாராம்.
இத்தகைய பெருமை வாய்ந்த வாராகி அம்மனை பில்லி, சூன்யம் போன்ற மாந்திரீக சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்கினால் அனைத்து தொல்லைகளும் நீங்கப்பெற்று சுகம் பெறுவர்.
Maa Varahi


29 comments:

  1. சிறப்பான படங்களால் அம்பாளது தரிசனமும் கிட்டியது. பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழி ........

    ReplyDelete
  2. வாராகி அம்மன் படங்கள் தகவல்கள் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் அருமையான தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  4. தகவல்களுடன், படங்களும் அருமை... அம்மன் அருள் பெருகட்டும்...

    ReplyDelete
  5. திருமாலின் அவதாரங்கள் பத்து. அவற்றுள் ஒன்று “வராக அவதாரம்” என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பன்றி முகம் கொண்ட வராக அம்மன் பற்றி இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். வாராகி அம்மன ஆலயம் குறித்த தகவல்கள் படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!


    ReplyDelete
  6. வாராகி அம்மன் புதிய தகவல்கள்...

    ReplyDelete
  7. வாராகி அம்மன் பற்றிய தகவல்கள்,அம்மனின் படங்கள் எல்லாமே அருமை,அழகு. முதல்படம் நன்றாக இருக்கு.பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. விசித்திரமான முகத்தோற்றம் கொண்ட வாராஹி / பராஹி அம்மனைப்பற்றிய வித்யாசமான பகிர்வு.

    நள்ளிரவு ஆரம்பித்து விடியும் வரை மட்டுமே கோயில் திற்ந்திருக்கும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆச்சர்யமான தகவல்.

    >>>>>

    ReplyDelete
  9. பெண்களின் முகத்தோற்றம் இதுபோல வராஹ வடிவில் இருந்தாலும், ஆடை ஆபரணங்கள், பத்மாசனம் போன்ற மேக்-அப் செய்வதால் குறைகளை ஓரளவு மறைத்து நிறைவாகவே காட்டிட முடியும் என்ற தத்துவமும் இதில் அடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.

    பணமிருந்தால் போதும் .... எந்த ஒரு உருவமும் மார்க்கெட்டில் ... சுலபமாக விலை போய்விடும் தானே ?

    >>>>>

    ReplyDelete

  10. வாராஹி அம்மன் அவ்விடம் எழுந்தருளிய வரலாற்றுக்கதையை நன்கு விளக்கியுள்ளீர்கள்.

    >>>>>>

    ReplyDelete
  11. //நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே//

    அரணாக நிற்கும் உந்தன் பொற் பாதங்களை சரண் அடைந்தேன் ...

    ReplyDelete
  12. ஆதி உடையாளின் அரிய பல பெயர்கள் அறிந்தேன்.
    மிக மிக நன்றி.
    படங்களும் அருமை. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. படங்கள் 4, 6, 8 முதல் 11 [அழகாகக் ????? ] கொடுத்துள்ளீர்கள்.

    பன்றிகள் சார்பில் நன்றிகள் கூறுவோமா? . ;)

    சிலருக்கு உருவம் பன்றிபோல அசிங்கமாக இருந்தால் உள்ளம் மிக மிக அழகாக இருக்கும்.

    முட்கள் மிகுந்த முழு பலாப்பழத்தின் வெளித்தோற்றமும், அதன் உள்ளே உள்ள ருசிமிக்க பலாச்சுளைகளும் போலவே.;)


    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார்...

      Delete
    2. Thank you, Sir.

      You may also like to read the following:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html
      எட்டாக்க[ன்]னிகள்

      http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
      மறக்க மனம் கூடுதில்லையே [Especially Part 3 of 4]

      Delete

  14. கடைசியில் காட்டியுள்ள ஆறு படங்களும் அருமை + புதுமை.,

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ooooo 958 ooooo

    ReplyDelete
  15. வாராஹி அம்மனைப் பற்றிய தகவல்களும், படங்களும் அருமை.

    ReplyDelete
  16. வராகி அம்மனை வணங்கி
    வாழ்வில் பெறுவோம் உயர்வே!

    அருமையான புதிய தகவல்கள் படங்கள்.
    பகிர்விற்கு மிக்க் அநன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  17. nice pictures and information

    ReplyDelete
  18. வராகி அம்மன் குறித்த தகவல்களும் படங்களும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. நீங்கள் முதலில் கொடுத்திருக்கும் ஸ்லோகத்தில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை. //கை நளின பஞ்ச சாயகி; சாதிநச்சு வாயகி; ....ஆயகி..//
    வாராகி கோவில் புதிய தகவல். தகவல்களுக்கும், அழகழகான படங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி வணக்கம் ,
      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      ஸ்லோகத்தில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் :

      கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்

      சாதி நச்சு வாய் அகி - கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்

      என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.

      அம்மையின் திருப்பெயர்கள் பலவற்றைக் கூறி அவளைத் துதித்து அவள் திருவடிகளே நமக்குக் காவல் என்கிறார் அபிராமி பட்டர்.

      Delete
    2. சரியாகச் சொன்னீர்கள்....

      Delete
    3. வணக்கம் சகோதரி.

      ஸ்லோகத்தின் விளக்கத்திற்கு நன்றி. எல்லாமே அம்மையின் திருபெயர்கள் என்றும் அவற்றின் பொருளையும் அறிந்து கொண்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்!

      உங்களது இந்த ஆன்மீகப் பனி தொடரட்டும்! வாழ்த்துகள்!

      Delete
  20. காசி வராகி கோவில் பார்த்தது இல்லை.
    அருமையான விளக்கம். படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  21. காசி சென்றிருந்தாலும் வாராகி அம்மன் கோவில் சென்றதில்லை.....

    தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  22. என்ன ஒரு அற்புதமான படைப்பு அக்கா அதை விட படங்கள் மிகவும் அருமையாக இருந்தது நான் பதிவிடாத பதிவு என்றால் அது பக்கதி பதிவு தான் முயற்ச்சிக்கிறேன்

    ReplyDelete
  23. we have varaahi amman temple in tanjore big temple also.mention this location to all in your blogspot. so that all of our people can visit to the temple and get rid of their pains due to black magic etc...

    ReplyDelete
  24. அற்புதமான பதிவு .
    தச மஹா வித்யாக்களைப் பற்றிக் கூற முடியுமா ?

    ReplyDelete