
பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..!

வேம்பும் எலுமிச்சையும் கூழும் அம்மனுக்குப் விருப்பமானவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவற்றையே அம்மனுக்குப் படைத்து பிரசாதமாக அளித்து மழைக்கால நோய்கலைத் தவிர்க்கும் முன்னேற்பாடான அறிவியல் ஏற்பாடாகும் ..


ஆடி மாத முதல் நாளில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.. தேங்காயில் கண் திறந்து, பச்சரிசி, வெல்லம், கடலை, எள், தூளாக்கிய ஏலக்காய் ஆகியவற்றை உள்ளே வைத்து, அடைத்து, தீயில், வைத்து சுட்டு எடுக்கப்படும் ..
குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அதிக நன்மை தரும். அதனால் திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாக. சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள்.

இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர்மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். சிறப்பு கண்கொள்ளாக்காட்சியாகத்திகழ்கிறது ..!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.


சேலம் ஏழு பேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம்.
ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும்.

அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத வித மாக செருப்படித் திரு விழா நடக்கும்.
வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும்.
உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர்.
அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.

மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் , திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்திலும் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்த சக்திகளாய் மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.




ஆடியின் அற்புதம் அறிந்தேன். நன்றி
ReplyDeleteகண்கொள்ளாக் காட்சிகள்...! நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDelete’ஆடி மாத அமர்க்களம்’ என்ற தலைப்பில் தங்களின் இன்றையப்பதிவும் அமர்க்களமாகவே உள்ளது.
ReplyDelete>>>>>
2] ஊர் ஊராக இருக்கும் பல்வேறு கோயில்களைப்பற்றியும், அங்கு நடைபெறு அம்மனின் சிறப்பு வழிபாடுகள் பற்றியும் மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
3] அதுவும் தாங்கள் பிற்ந்த ஊர் மாவட்டச் செய்திகள் ’மாங்கனி’ போல இனிப்பாக இருக்கும் என்று எதிர் பார்த்தேன்.
ReplyDeleteசேலத்து அம்மன் படங்கள் எல்லாமே அட்டகாசமாக உள்ளன.
ஆனாலும் செருப்படி, துடைப்பம், முறம், சேத்துமுட்டி என ஏதேதோ சொல்லி பயமுறுத்தியுள்ளீர்களே!
’அழகு அம்மனின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம்’ எனப்பாட வேண்டியது தான் போலிருக்கு. ;)
>>>>>
4] மஞ்சள் ஆடை உடுத்தி ஒரு மண்டலம் மகிழும் மேல் மருவத்தூர் திருநின்றவூர் பக்தைகள் பற்றியும்,
ReplyDeleteமதுரை முளைக்கொட்டு விழாபற்றியும்
திருச்சி திருநெடுங்குளநாதர் கோயிலின் சிறப்புகள் பற்றியும்
தேங்காய் சுடுவது பற்றியும்
வேம்பு எலுமிச்சை அறிவியல் ஆரோக்யத்தகவல்கள் பற்றியும்
எனக் குற்றால அருவி போல பலவிஷயங்களைக் கொட்டித் தீர்த்து விட்டீர்கள்.
சந்தோஷம்.
>>>>>
5] இன்று ஆடிப்பண்டிகைக்கு பொண்ணு, மாப்பிள்ளையை, மாமியார்கள் தன் வீட்டுக்கு அழைத்து ஸ்பெஷ்ல் விருந்து அளிப்பது வழக்கம்.
ReplyDeleteமுதன்முதலாக அதுபோல இன்று செய்யும் வாய்ப்புப்பெற்ற அனைத்து மாமியார்களுக்கும் அவர்களின் பொண்ணு, மாப்பிள்ளைக்கும் என் அன்பான நல்வாழ்த்துகள்.
புதுக்கல்யாணம் ஆன சில ஜோடிகளை இந்த ஆடிக்கு அழைப்பதற்குள் பேரனோ / பேத்தியோ கூட பிறந்திருக்கும் வாய்ப்பும் சிலருக்கு அமைந்து விடுவது உண்டு.
அந்த மாமியார்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தான். ;)))))
>>>>>>
6] வழக்கம் போல அருமையான படங்களுடன் அசத்தலான பதிவு.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
>>>>>
தாங்கள் நாளை வெளியிட இருக்கும் இந்த 2013ம் ஆண்டின் வெற்றிகரமான 200 ஆவது பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ReplyDeleteவரும் வெள்ளிக்கிழமை வெளியிட இருக்கும் தலைப்பான “ஆடி வெள்ளி அம்மன் அழகு தரிசனம் .. ” என்ற தங்களின் வெற்றிகரமான 975 ஆவது பதிவுக்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
ooooo 973 ooooo
ஆடி அமர்க்களம் என்ற தலைப்பைப் பார்த்ததும்.... ஜவுளிக் கடைக்காரங்க ஆடித் தள்ளுபடின்னு வெச்சு அட்டகாசம் பண்றதையோ, கோவில் திருவிழான்னு ஸ்பீக்கர்களை அலற வெச்சு காதைக் கிழிக்கறதையோ சொல்லப் போறீங்களோன்னு நினைச்சு வந்தேன். இஙக அரிய விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க! செருப்படித் திருவிழா...! வித்தியாசமான, நான் இதுவரை கேள்விப்பட்டிராத தகவல்! ஆடியின் மகிமைகளையும், சிறப்புகளையும் வழக்கம் போல உங்களின் அருமையான படங்களுடன் ரசித்துப் படித்தேன்.
ReplyDeletenice post with pictures about aadi month
ReplyDeleteஆடி என்றாலே ஊர் முழுக்க அம்மன் பாடல்கள்தான். ஆன்மீக பதிவரான உங்கள் பதிவுகளைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. ஆடியை அமர்க்களமாக தொடங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆடியின் அமர்க்களம் ஆனந்தம் தந்தது!
ReplyDeleteஅத்தனையும் அருமை!
பகிர்விற்கு நன்றியும் இனிய வாழ்த்துக்களும் சகோதரி!
ஆடி மாதம் நடக்கும் விழாக்களை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
ReplyDeleteஅமர்க்களமாய் விழா நடக்கும் இடங்களுக்கு போய்ப் பார்க்க வேண்டியது தான்.படங்கள் எல்லாம் அற்புதம், அழகு.
ஆடி மாத தகவல்கள் அற்புதம்! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteதேங்காய் சுடும் தகவல் எனக்கு புதியது இப்போதே தெரிந்து கொண்டேன். கொட்டும் அருவி காண கண்ணிரண்டு போதாது. மற்ற படங்களும் சிறப்பு. சற்று உடல் நலம் சரியில்லை அதனால் எங்கும் செய்ய இயலவில்லை. இனி தொடர்கிறேன்.
ReplyDeleteஆடி மாதத்தில் பல்வேறு திருத்தலங்களில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் பற்றி விவரமாகச் சொல்லி நிஜமாகவே அமர்க்களம் செய்துவிட்டீர்கள்!
ReplyDeleteஎங்களுக்கும் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் சென்று அம்மன் தரிசனம் செய்த மகிழ்ச்சி, திருப்தி!
ஆடி அமர்க்களம் - நல்ல தகவல்கள்......
ReplyDeleteஅருவி கொட்டும் படம் மிகவும் பிடித்தது!
About this seruppadi is a new to me.
ReplyDeleteIs it so?
as usual nice and great pictures.
Me too started to collect bangles to make mala for all ammankoil near our place.
viji
புதுமையான விழாக்களைப் பற்றிய செய்தி
ReplyDeleteஅறிந்து வியப்புற்றேன் .
நீங்கள் ஒரு ஆன்மீக தகவல் களஞ்சியம் !
இலவச தரிசனம் ... இவ்வளவு விரைவாக கிடைப்பது இங்கு மட்டும்தான்...
ReplyDeleteநன்றி
ஆடிமாதச்சிறப்பு அம்மனின் அருள்,முளைகொட்டு திருவிழா என ஆடிமாதத்து அமர்க்களை தந்தது சிறப்பு.நன்றி.
ReplyDelete