Saturday, July 13, 2013

ஸ்ரீபிரதாப வீர அனுமார்







தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம் 
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம் 

இளம் சூர்யனைப் போன்ற  சிவந்த முகமுள்ளவர், 
கருணைததும்பும் கடைக்கண்கள் கொண்டவர், 
உயிர்நாடியைத் தூண்டும் பெரும் பெருமையுடையவர். 
அஞ்ஜனாதேவியின் அதிர்ஷ்டமான 
அருமைப்புதல்வர். 
அனுமனை வாழ்த்துகிறேன். 

ஆஞ்சநேயருக்கு என்று கொடி மரத்துடன் உருவாக்கப்பட்ட பெரிய புராதன கோவில், தஞ்சை மேலவீதியிலுள்ள உள்ள மூலை அனுமார் கோவிலிலுள்ள 
தஞ்சாவூரில் மேல ராஜவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில் வாயுவின் மைந்தனுக்கு வாஸ்துப்படி தஞ்சை மன்னனால் கட்டப்பட்டது ஸ்ரீபிரதாப வீர அனுமார் திருக்கோயில்.

இக்காரணத்தினாலேயே பக்தர்கள் பலகாலமாக "மூலை அனுமார் கோயில்' என்று அழைத்து அப்பெயரே நிலைத்துவிட்டது.

அனுமார் வாலில் நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். 
அதனால் நவக்கிரக தோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. 

 வாயு மைந்தனான அனுமான் வட மேற்கு மூலையில் (வாயு மூலை) அமைந்த கோவில் என்பதால், வாஸ்து தோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது.

ஆனி மாத அமாவாசை லட்ச ராமநாம வழிபாடும்,  சிறப்பு தேங்காய் துருவல் பூஜை , தேங்காய் துருவல்களை கொண்டு அபிஷேகமும் வறுமை கடன் தொல்லைகளை மூலை அனுமார் நிவர்த்தி செய்து,  துன்பங்களை நீக்குவார் என்பது நம்பிக்கை

1,008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி, தீபாராதனை கண்கொள்ளாக்காட்சி..18 முறை பக்தர்கள் வலம் வந்து, தங்களது அல்லல்களை போக்க பிரார்த்தனை செய்வது விஷேசம்...!

மூலை அனுமாரின் இதயக்கமலத்தில் ராமபிரான் வாசம் செய்வதால், இங்கு அவருக்கு தனி சன்னதி கிடையாது.
பகவத்கீதையில் உள்ள 18 அத்தியாயங்களை நினைவுபடுத்தும் விதமாக கோவில் 18 தூண்கள் உள்ளன. 

குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடு மற்றும் வாஸ்து தோஷம் உள்ளவர்கள், வாஸ்து தீபம் ஏற்றுவதோடு, மூலை அனுமாருக்கு 
18 அமாவாசைகள் தோறும் 18 எலுமிச்சை பழ மாலைகள் சாற்றி வழிபடும் வழிபாட்டால் வாஸ்து தோஷம் நீங்கும் என்கிறார்கள். 

 மனை, வீடு அமைய வேண்டும் என்று விரும்புகிறவர்கள், இக்கோவிலுக்கு ஓர்  அமாவாசை அன்று வந்து வழிபடுவது நல்லது.

சனிதோஷ நிவர்த்தி காணிக்கையாக 18 ரூபாயை உண்டியலில் செலுத்தி, சிதறு தேங்காய் உடைத்தால் சனி தோஷம் விலகும் என்பதால், ஆவணி அமாவாசையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
ஜிலேபி அலங்காரம் 

தேங்காய் துருவல் அபிஷேகம்.



16 comments:

  1. எங்கள் தஞ்சைக் கோயிலைப் பற்றிக் படிக்கப் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறை, மூலை அனுமார் கோயிலைக் கடந்து செல்பவன் நான்.இருப்பினும் தாங்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் இதுவரை அறியாதவை. நன்றி

    ReplyDelete
  2. எப்போதும்போல இப்போதும் இருக்கும் சிறப்பானப் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  3. பல்வேறு அலங்காரங்களில் காட்சி தரும் ஆஞ்சநேய தரிசனம் மனதுக்கு இதமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. அலங்காரங்களின் கலை நேர்த்தி பிரமாதம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் உள்ள சிறப்புகளை சிறப்பாக எமக்குத் தருவது தங்கள் சிறப்பு.

    ReplyDelete
  5. ஜிலேபி அலங்காரம் உட்பட அனைத்து படங்களும் அற்புதம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இன்று சனிக்கிழமைக்கு "ஸ்ரீ பிரதாப வீர ஹனுமார்” ஆ? வெரி குட்.

    >>>>>

    ReplyDelete
  7. படங்கள் யாவும் வழக்கம் போல அருமையோ அருமை.

    >>>>>

    ReplyDelete
  8. தஞ்சை மேல வீதியில் உள்ள மூலை ஹனுமார் கோயில் பற்றிய சிறப்பான தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.

    கோயில் அமைந்துள்ள இடம், பெயர்க்காரணம், வேண்டுதல்கள் நிறைவேற்ற வேண்டிய முறைகள், அதனால் ஏற்படும் பலன்கள் என அனைத்தும் அருமையாக உள்ளன,

    >>>>>

    ReplyDelete
  9. வெல்லம் கலந்த தேங்காய்த்துருவல் போன்ற இனிபான பகிர்வுக்கும், ஜாங்கிரி போன்ற படங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவு + பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ஜெய் ஹனுமான் !

    ooooo 969 ooooo

    ReplyDelete
  10. அபூர்வமான ஆஞ்சநேயர் தரிசனங்கள்! நன்றி!

    ReplyDelete
  11. வடைமாலை அலங்காரம் (வடம் வடமாக எத்தனை வடைமாலைகள்!) ஜிலேபி அலங்காரம் (ரொம்பவும் புதிய தகவல்!) தேங்காய் துருவல், பழங்கள் என்று விதம் விதமாக அனுமனின் பல்வேறு கோலங்கள் அருமை!

    ReplyDelete
  12. அலங்காரங்கள் அனைத்தும் அழகு. அதிலும் அந்த காய்களால் ஆன அனுமார் தோற்றம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. ரசித்து ரசித்து அலங்காரங்கள் செய்திருக்கிறார்கள். நல்ல படங்கள்.

    இன்னுமொரு புராதன கோவில் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  14. ஆஞ்சநேயரின் அழகிய பல்வேறு தோற்றங்கள் மிகவும் அருமை.

    எங்களுக்கு அருகிலும் ஆஞ்சநேயர் கோயில் இருக்கின்றது. சனிக்கிழமைகளில் விசேடம்.

    ReplyDelete
  15. எல்லா அலங்கரங்களும் மிக அருமை.
    மூலை அனுமன் கோவிலுக்கு தெரிந்தவர்கள் அழைத்தார்கள் நான் போக முடியவில்லை , உங்கள் பதிவில் பார்த்து மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  16. ஆஞ்சநேயர் ப்டங்கள் மிகமிக அழகாக இருக்கு.புதுத்தகவல்கள்.உங்கள் பதிவின் மூலமாக நிறைய தமிழ்நாட்டுக்கோவில்கள்,சிறப்புக்கள் அறியதருகிறீங்க. மிக்க நன்றிகள் சகோதரி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete