
ஸ்ரீ நாமகிரி தாயார் ஸ்தோத்ரம்
ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்ன ப்ரகடித விபவா
ஸ்ரீ சுபலாபூர்ண காமசர்வேஸபிரார்த்திதா
ஸகலசுரநூதஸர்வ சாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மி ஸ்ரீ வேத கர்பாவிதுரது மதிஸாவிஸ்வ கல்யாண பூமா
விஸ்வ க்ஷேமாதம் யோக விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தல ஸ்தா
ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீசவராரோஹீஸ ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவீ மஹாலஷ்மீ ஸ ஸுந்தரீ

நாமக்கல் நகரம் தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய முப்பெருமையையும் உடையதால் மிகச் சிறப்புப் பெற்றது.
நாமகிரி என்ற நான்கு எழுத்துக்களும் மிகவும் புனிதமானது.
நாமகிரி என்ற சொல்லை உச்சரிப்பதே புனிதம்....நாமக்கல்லில் வீற்றிருப்பதாலே, நாமகிரி லஷ்மி என அழைக்கப்படுகிறார்.

இச்சா சக்தி (நாமகிரி அம்மன்),
கிரியாசக்தி (நரசிம்மர்),
ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே சிறப்புடன் அமையப்பெற்ற கோயில் நாமக்கல்..!
நலங்கள் அனைத்தையும் ,சகல செல்வங்களையும்,,அருள் மழை பொழிந்து, குழந்தை பாக்கியத்தையும்,நோயற்ற நீண்ட ஆயுளையும் தந்து,
ஆசி வழங்குகிறார் அன்னை ..!
ஸ்ரீ நாமகிரித்தாயார் கமலாலயம் திருக்குளத்தில் அவதரித்து ஸ்ரீ நரசிம்மமூர்த்தியை குறித்து தவமியற்றி அருள் பெற்ற சிறப்புடைய தலம்.....!
மஹாலஷ்மியின் வேண்டுகோள் படியும், பிரார்த்தனைகளின்படியும்,
ஸ்ரீ நரசிம்மர், கோபம் தணிந்து, சாந்தி அடைந்ததால், மஹாலஷ்மிக்கு நிறைய வரங்களை தந்து நாமகிரி அன்னை புகழும், அதீத சக்தியும், கிடைக்கப் பெற்றார்.
ஸ்ரீ நரசிம்மரை வேண்டியபடி தவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாமகிரி அம்மனை தரிசித்து வணங்கிய பிறகே ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வணங்க வேண்டும்.
.வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி, புத்திரப்பேறு, மனநிம்மதி என தம்மை நாடுவோருக்கு நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயரும், ஸ்ரீலஷ்மிநரசிம்மரும், ஸ்ரீநாமகிரிலஷ்மி தாயாரும், ஸ்ரீ ரங்கநாதரும்
அருள்புரிகின்றனர்.

சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் எடுத்த இடத்தில் வைத்து விட்டு திரும்பி வரும்போது நேபாளத்தில் கண்டகி நதியில் அபூர்வமான நரசிம்ம சாளக்கிரம மூர்த்தம் கிடைத்தது ...,
நாமகிரித்தாயாரிடம் சாளக்கிரமத்தைக் கொடுத்த விட்டு . ஆஞ்சநேயர் ஜெபம் முடித்து விட்டு வந்து பார்க்கையில் சாளக்கிராமம் பெரிய மலையாக மாறி அசைக்ககூட முடியவில்லை.


ஸ்ரீ நாமகிரியம்மன் மகிமையறிந்த இமயம் முதல் குமரி வரை உள்ள பக்தர்கள் வடதேசத்திலும் கூட நாமக்கல் என்று சொன்னால் வரப்பிரசாதியான
ஸ்ரீ நாமகிரியம்மனும் மிக உயரமான ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கும் ஊர் என வணங்குகிறார்கள்..!
கர்னாடக இசை வல்லுநர்கள் நாமக்கல் என்றதும் ‘பல்லவி நரசிம்ம அய்யங்கார்’ ஊர் எனவும் ,
கன்னட தேசத்தவர்கள் ஸ்ரீ நாமகிரி தாயார் மீது அபார பக்தி கொண்டு பாடல் பாடிய ‘நரஹரி ஆச்சார்’ தோன்றிய ஊர் என்றும் பெருமைப்படுத்துவார்கள்.
தேசபக்தர்கள் நாமக்கல் என்றதும் ‘நாமக்கல் கவிஞர்’ பிறந்த ஊர்தானே என்றும்
கணிதத்தில் பிரியமுள்ளவர்கள் கணிதமேதை ராமானுஜத்திற்கு கனவில் தோன்றி கடினமான கணிதத்தை புலப்படுத்திய நாமகிரியம்மன் எழுந்தருளியிருக்கும் ஊர் என்றும் பெருமையாக பேசுவார்கள்.
அவரவர் பக்தி சிரத்தைக்கு தகுந்தபடி ஸ்ரீ நாமகிரியம்மன் அருள் பாலிக்கிறாள்.

ஸ்ரீ நாமகிரியம்மன் திருநட்சத்திரமான பங்குனி உத்திரத்தில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி அம்மன் சந்நிதிக்கு எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் கண்டருளி திருக்கல்யாண திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார்கள்.
ஸ்ரீ நாமகிரியம்மன் திருமுக மண்டல சோயை பார்க்கப் பார்க்க திகட்டாத சிறப்பு வாய்ந்தது.
நவராத்திரி தினங்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள், பலவித ஆபரணங்கள் சமர்ப்பித்து திருவீதி உலா விசேஷமாக நடைபெறுகிறது.
ஸ்ரீ நாமகிரி அன்னை பக்தர்களின் சொப்பனத்தில் வந்து உத்தரவிடுவதாகச் சொல்லி இங்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கிறார்கள்.
கங்கையில் 5 நாடகள் தங்கி ஸ்நான ஜபம் செய்வதாலும்,
யமுனையில் மூன்று தினங்கள் தங்கி ஸ்நான ஜபம் செய்வதாலும் காவேரியில் ஓர் தினம் தங்கி ஸ்நான ஜபம் செய்வதாலும் தங்கள் பாவங்களை மனிதர்கள் போக்கிக் கொள்கிறார்கள்.
அப்படி சக்தி வாய்ந்த கங்கையும் காவேரியும் கூட நாமக்கல் தலத்திற்கு வந்து கமலாலயம் ஸ்ரீ நரசிம்ம புஷ்கரணி இவைகளில் ஸ்நாநம் செய்து ஸ்ரீ நாமகிரியம்மன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டார்கள் என்று புராணம் கூறுகிறது.

ஸ்ரீ மஹாலட்சுமியின் தவத்தின் பெருமையால்
ஸ்ரீ நரசிம்மருக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மன் என்றும்,
அம்மனுக்கு ஸ்ரீ நாமகிரி என்றும்,
திருநகருக்கு நாமகிரி என்னும் வடமொழிச்சொல் நாமக்கல் என்றும் தமிழிலும் பிரசித்தி பெற்றது ....
ஸ்ரீ நரசிம்மருக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மன் என்றும்,
அம்மனுக்கு ஸ்ரீ நாமகிரி என்றும்,
திருநகருக்கு நாமகிரி என்னும் வடமொழிச்சொல் நாமக்கல் என்றும் தமிழிலும் பிரசித்தி பெற்றது ....
முறைப்படி பூஜா கைங்கர்யம் சுவாமிக்கு முதலிலும் பிறகு அம்மன் முதலிய பரிவாரங்களுக்கும் நடைபெறுகிறது.
ஆனால் பக்தார்கள் தரிசித்து வழிபடுவது பிரார்த்தனை செலுத்துவது யாவும் ஸ்ரீ நாமகிரியம்மனுக்கே எல்லா விஷேசங்களும் முதலில் அம்மனுக்குத்தான்.
ஸ்ரீ நாமகிரித் தாயார் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி தாயாரை பூஜிக்க சகல
செல்வங்களும் வரும். பில்லி, சூனியம் போன்றவை ஒரு மண்டல
காலத்திற்குள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் மும்மூர்த்தி ஸ்தலமாகத் திகழ்கிறது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் மும்மூர்த்தி ஸ்தலமாகத் திகழ்கிறது.










ஐந்து துவஜஸ்தம்ப காட்சி ..(கொடிமரங்கள் )...
பெயர்க்காரணம் உட்பட சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅழகான படங்களுடன் அருமையான விளக்கங்கள்.. நன்றி...
ReplyDeleteஸ்ரீ நாமகிரிலஷ்மி தாயாரின் சிறப்புமிக்க தகவல்கள் அறிந்துக்கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபடங்களை பார்த்தபடி வெகு நேரம் நின்று விட்டேன். அவ்வளவு சிறப்பு. விளக்கங்களும் சிறப்பு. நன்றிங்க.
ReplyDeleteஸ்ரீ நாமகிரி லக்ஷ்மி தாயார் அவர்களுக்கு அடியேனின் அன்பு வந்தனங்கள்.
ReplyDelete>>>>>
அழகான படங்கள், அற்புதமான விளங்கள்.
ReplyDelete>>>>>
தாங்கள் தங்கிப்படித்த ஊர் என்பதால், இந்தப் பதிவு ஓர் தனிச்சிறப்பினைப் பெறுவதாக என்னால் உணர முடிகிறது. ;)))))
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றியோ நன்றிகள்.
ooooo 961 ooooo
எத்தனை சிறப்புகள்!
ReplyDeleteஇந்தப் பிறவியில் இப்படியாவது எனக்கும் அறியக்கிடைத்ததே...
அத்தனையும் அழகு! அருமை!
சிறப்பான பதிவுடன் பகிர்வும். மிக்க நன்றி சகோதரி!
படங்களுடன், தகவல்களும் அருமை.
ReplyDeleteஎங்கள் குடியிருப்பில் இருப்பவர் ஒருவரின் பெயர் நாமகிரி லஷ்மி...
ReplyDeleteகணிதமேதை சீனிவாச இராமானுஜனின் குலதெய்வம் நாமகிரித் தாயார்.
ReplyDeleteஅழகான படங்கள் அற்புதமானப் பதிவு நன்றி
ஒருமுறை நாமகிரி தாயாரை சேவித்திருக்கிறேன். உங்களின் இந்தப் பதிவு படித்து மறுமுறை சேவித்த ஆனந்தம் கிடைத்தது. நேரில் போகும்போது நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்களை கூடவே எடுத்துச் சென்று ஒன்றுவிடாமல் சேவித்து வரவேண்டும்.
ReplyDeleteபாராட்டுக்கள்!
படங்களும் தகவல்களும் மிக அருமை.....
ReplyDeleteநாமகிரி என்ற பெயர் என்றுமே எனக்கு மறக்காது - எனது முதல் வகுப்பு ஆசிரியர் பெயர் அது!
superb
ReplyDelete