

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'
என பெரிதும் போற்றப்படுவது திருவாசகம்
மாணிக்கவாசகர் திருவாசகம் சொல்ல நடராஜர் கைப்பட எழுதியதாக புராணம் உண்டு.


திருவாசகம் இயற்றிய மாணிக்கவாசகப் பெருமான், சிதம்பரத்திலுள்ள தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோயிலில் குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். மாணிக்கவாசகரே கட்டிய கோயில் இது.

ஸ்ரீ மாணிக்கவாசகர் தில்லையில் தங்கியிருந்த பர்ணசாலைக்கு அந்தணர் உருவில் எழுந்தருளினார் ஸ்ரீநடராஜப் பெருமான். ‘தாங்கள் பாடிய பாடல்கள் அந்தந்த தலங் களில்தான் பிரதி எடுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, உங்களிடம் பிரதி எதுவும் இல்லை எனக் கேள்விப்பட்டேன். எனவே அந்தப் பாடல்களை எல்லாம் தாங்கள் மறுபடியும் பாடினால், அவற்றை நான் அழகாக ஓலைச்சுவடியில் எழுதிக் கொடுக்கிறேன்...’ என்றார் அந்தணர் உருவிலிருந்த இறைவன்!
வந்திருப்பது இறையென்றறியாத ஸ்ரீ மாணிக்கவாசகர், தான் இயற்றிய திருவாசகப் பதிகங்களை ஒவ்வொன்றாகப் பாடப் பாட, அம்பலத்து அரசன் அவையனைத்தையும் ஓலைச்சுவடியில் படியெடுத்துத் தந் தருளினார்.
ஸ்ரீ மாணிக்கவாசகர் பாடிய பதிகங்கள் அனைத்தையும் தன் கைப்பட எழுதிய இறைவன், ‘மாணிக்கவாசகர் சொற்படி அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது...’ எனத் திருச்சாத்திட்டு (கையொப்பம்) தில்லை சிற்றம்பலத்தின் வாயிற்படியில் (பஞ்சாட்சரப் படி) வைத்தருளினார். வந்தவர் இறையென்பதை அறிந்த மாணிக்கவாசகர், இறைவன் திருவருளை எண்ணி எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ந்தார்.
. வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர்.
அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய மாணிக்கவாசகர், "இவரே இதற்கான பொருள்' என்று சொல்லி அவருடன் இரண்டறக் கலந்தார்.
இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சன்னதி முகப்பில் சிவன், அடியார் வடிவில் காட்சியளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.
திருப்பெருந்துறையை பல வகையிலும் ஒத்திருக்கிறது. மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. இந்த லிங்கம் முழுமையானதாக இல்லை.

அம்பாள் சன்னதியில் பாதம் மட்டும் இருக்கிறது.
சிவனுக்கு புழுங்கல் அரிசி சாத ஆவி, பாகற்காய் நிவேதனம் செய்கின்றனர்.
மாணிக்கவாசகர் சின்முத்திரை காட்டி குரு அம்சத்துடன் காட்சியளிக்கிறார்.

எல்லா தலங்களிலும் நின்ற நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர், இங்கே அமர்ந்திருக்கிறார்.
மாணிக்கவாசகர் குருபூஜையன்று ஆத்மநாத சுவாமிக்கு விசேஷ பூஜையுடன்
மாணிக்கவாசகர், ஆத்மநாதர் சன்னதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டறக்கலக்கும் வைபவம் நடக்கும்.
யோக தட்சிணாமூர்த்தி, இருகால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மூவரும் லிங்கத்தின் பாண வடிவில் காட்சி தருவது சிறப்பான அமைப்பு.
யோக விநாயகர், அகோர வீரபத்திரர், பைரவர் அருள்கின்றனர் ..

கோயில் அருகில் தில்லைக்காளி மற்றும் குருநமச்சிவாயர் கோயில்கள் உள்ளன.
மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர்,

புதுக்கோட்டை மாவட்டம் - திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலில்சிவனிடம் உபதேசம் பெற்றார்.
மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார்.
மாணிக்கவாசகர் சிதம்பரம் வந்தார். முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும், திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்க முடியவில்லை.
எனவே, சிதம்பரத்திலும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம்பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம்"தில்லை திருப்பெருந்துறை' என்றழைக்கப்பட்டது.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு வடக்கே, தில்லை ஸ்ரீ காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் வேங்கான் தெருவில் அமைந்துள்ளது தில்லை திரு ப்பெருந்துறை திருக்கோயில்.
அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில்,
திருப்பெருந்துறை,
சிதம்பரம்-608 001, கடலூர் மாவட்டம்






தங்கள் பதிவினைக் கண்டவுடன் தில்லை திருப்பெருந்துறைக் கோயிலைக் காண வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது சகோ.
ReplyDeleteநடராசர் கோயிலுக்கும் சென்றிருக்கின்றேன், காளியம்மன் கோயிலுக்கும் சென்றிருக்கின்றேன். ஆனால் இடையில் உள்ள, இப்பெருமை மிகு கோயிலை காணாதிருந்திருக்கின்றேன். நன்றி
இப்படி ஒரு கோவில் இருப்பதை அறிய வைத்ததற்கு நன்றி . சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும், காளி கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக் கோவில் பற்றி இப்பொழுது அறிந்து கொண்டேன்.
ReplyDeleteநன்ற்.
'இறைவனோ தொண்டர் தம் உள்ளத்தொடுக்கம்' என்ற தமிழ் மூதாட்டி வாக்குக்கிணங்க, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீமாணிக்க வாசகப் பெருமானின் சிறப்புகளை அழகாகத் தந்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteபடங்களும் ஸ்ரீ மாணிக்க வாசகர் சிறப்புகளும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்றைய பகிர்வும் குருவைப் பற்றியதே...
லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html
அருமையானதோர் கோயில் பற்றி இனிமையானதோர் அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
திறக்கப்பட்டுள்ள [பாதிப்படங்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன] படங்கள் யாவும் அழகாக உள்ளன.
ReplyDelete>>>>>
மாணிக்க வாசகர் பற்றிய சரித்திர புராணக்கதைகளை அழகாக உங்கள் பாணியில் சொல்லியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteசிவபெருமானோடு அவர் கலந்த காட்சி இனிமை.
>>>>>>
சிறப்பான இந்தப் பதிவுக்கு
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
ooooo 971 ooooo
Aha....
ReplyDeleteMy father daily narrate stories about nalvar and taught to sing devaram, thiruvasakam,
Our daily night food is along with these stories. Pranam to my father.
You made me think about my childhood days.
very nice post dear.
viji
“ எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் “ என்று பாடிய மாணிக்கவாசகர் பற்றி ஒரு நல்ல பதிவு.
ReplyDeleteதில்லை சென்று பல காலம் ஆகிவிட்டது. பார்க்கலாம் எப்போது செல்ல முடிகிறதென!
ReplyDeleteதிருவாசகம் பிறந்த கதையும், திருத்தலம் பற்றிய தகவல்களும் சிறப்பாக இருந்தன.
ReplyDeleteஸ்ரீ மாணிக்க வாசகர் தீட்சை பெரும் காட்சி அருமையிலும் அருமை.
//ஆத்மநாத சுவாமி கோயிலில் குரு அம்சமாகத் திகழ்கிறார். மாணிக்க வாசகரே கட்டிய கோயில் இது... //
ReplyDeleteதெரியாத தகவல். இப்படி நிறைய. மனசில் குறித்துக் கொண்டு மாளவில்லை. மிக்க நன்றி.
மேலிருந்து கீழாக படம் 6 முத்ல் 12 வரை + 14 அகிய 8 பட்ங்களும் இதுவ்ரை [அதாவது நள்ளிரவு 11.45 வரை] திற்க்கப்படாமல் உள்ளது. ;(
ReplyDeleteகண்டு களிக்க பிராப்தம் இல்லாதது வருத்தமாக உள்ளது.
ஏதோ காட்டியவரை கொஞ்சமாவது பார்க்க முடிந்தவரை மகிழ்ச்சியே. ;)))))
10 படங்கள் [அதாவது 10 வரிசைகள் மட்டுமே] மட்டுமே பார்க்க முடிகிறது] மீதி 8 வரிசைப்படஙகள் பார்க்க முடியவில்லை.
REVISED COMMENT WITH CORRECT SPELLING:
ReplyDeleteமேலிருந்து கீழாக படம் 6 முதல் 12 வரை + 14 ஆகிய 8 படங்களும் இதுவ்ரை [அதாவது நள்ளிரவு 11.45 வரை] திறக்கப்படாமல் உள்ளன. ;(
கண்டு களிக்க பிராப்தம் இல்லாதது வருத்தமாக உள்ளது.
ஏதோ காட்டியவரை கொஞ்சமாவது பார்க்க முடிந்தவரை மகிழ்ச்சியே. ;)))))
10 படங்கள் [அதாவது 10 வரிசைகள் மட்டுமே] மட்டுமே பார்க்க முடிகிறது]
மீதி 8 வரிசைப்படங்களைப் பார்க்க முடியவில்லை.
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அருமையான படங்களைத் தேர்வு செய்துள்ளீர்கள் தோழி !
ReplyDeleteசிறப்பான படைப்பிதற்க்கு வாழ்த்துக்கள் .
மாணிக்கவாசகர் பதிவு நன்று.
ReplyDeleteபழைய பாடங்கள் மறுபடி நினைவு வந்தது
யோகதட்சிணாமூத்தி படம் அழகு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.