பாரதத்தின் பெருமையையும் இந்து தர்மத்தின் பெருமையையும் நாடு முழுவதும் பறைசாற்றிய சுவாமி விவேகானந்தரின் நினைவுதினம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒளிபடைத்த கண்ணோடும் உறுதி கொண்ட நெஞ்சோடும் எதையும் சாதிக்கவல்ல இளைஞர்களை உருவாக்குவதே விவேகானந்தரது லட்சியம்.
விவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்ல, உடல் வலிமையும் வேண்டும் என்கிறார்.
'நாள்தோறும் கால்பந்து விளையாடு; கீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்' என்று சொன்னவர் ..
இளைஞர்களைக் கால்பந்து விளையாடச் சொல்லும் அவர், தம் கல்லூரிக் காலத்தில், மல்யுத்தப் போட்டியில், வெற்றிப் பரிசாக ஒரு வெள்ளி நினைவுப்பரிசு பெற்றவர் ..!
விவேகானந்தரது சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை.
ஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றன.
இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது
பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.
விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, ராமகிருஷ்ண மடம் சார்பில், விவேகானந்தர் உருவம் தாங்கிய ரதம் பல ஊர்களுக்கு சென்று விவேகானந்தரின் அமுத மொழிகளை நினைவுகூர்ந்து வருகிறது...
சுவாமிஜியின் 150-வது பிறந்த ஆண்டு 2013-ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் நமது விழுமியங்கள், சிந்தனைகள், லட்சியங்கள் ஆகியவற்றில் மக்களின், குறிப்பாக இளைஞர்களிடையே ஆர்வத்தை தூண்டும் என நம்பிக்கையை விதைக்கிறது ...
துணிச்சலாகக் கருத்துகளைச் சொன்னதனாலும், மக்கள் துணிச்சலாக இருக்க வேண்டும் என்று சொன்னதனாலும் விவேகானந்தரை
‘வீரத் துறவி’ எனப் பெயர் பெற்றார்..
சமய ஒழுங்கு எல்லோருக்கும் தேவை. ஆனால், அந்த ஒழுங்கு வெறும் சடங்குகளுடன் நின்றுவிடக் கூடாது. தத்துவ ஞானத்தை ஊட்டுவது மனிதம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் உலகத்தையும் புரிந்துகொள்ள உதவும். தத்துவ ஞானத்தைப் பெற சமயச் சார்பு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், சடங்குகள் சாராத சமய ஒழுங்கு தேவை என்பதை விவேகானந்தர் சொற்பொழிவுகளில் உணர்த்தியிருக்கிறார்.
துணிச்சலும் வீரமும் மிக்கவர்களே இப்போது நமக்குத் தேவை. நம் தேவையெல்லாம் ரத்த வேகம், நரம்புகளில் வலிமை, இரும்பை ஒத்த தசைகள், எஃகை ஒத்த நரம்புகள். பலவீனப்படுத்துகின்ற கருத்துகள் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் தவிர்த்து விடுங்கள்; வலிமையாக இருங்கள்; சொந்தக் கால்களில் நில்லுங்கள். - என நூறு வருடங்களுக்கு முன்பே இன்று நாட்டுக்குத் தேவையான வலிமையை வலியுறுத்தினார் சுவாமி விவேகானந்தர்:
விவேகானந்தர் கண்ட நூறாயிரம் இளைஞர்களில் ஒருவராக மாற்றிக்கொள்வேன்” என்ற மாணவர்களின் உறுதிமொழி...
அனைவருக்கும் அவர் ஒரு பாடம்... சிறப்பித்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteதுறவிகள் என்றாலே உலகம் எக்கேடு கெட்டால் என்ன என்று தாங்கள் மட்டுமே தவம் செய்து வரம் பெறுபவர்கள் என்பதற்கு மாறாக உலகத்தோடு ஒட்ட வாழ்ந்து, இளைஞர்களுக்கு எழுச்சி தரும் கருத்துக்களை உதிர்த்து, தானே ஒரு முன்னுதாரணமாய் வாழ்ந்தவர் வீரத்துறவி விவேகானந்தர். அவரை ஒவ்வொரு நாளுமே நினைத்துப் போற்றிட வேண்டும். படங்களும், அவர்தம் வரிகளும் வெகு சிறப்பு! மிக்க நன்றிம்மா!
ReplyDeleteஅவரது கம்பீரமான தோற்றமும் கருணை ததும்பும் கூரிய பார்வையும் அனைவரையும் வசப்படுத்திவிடும். துறவியின் இலக்கணம் அவர். மகிழ்வாக உற்சாகம் பொங்க வைக்கும் பதிவுக்கும் படங்களுக்கும் நன்றி தோழி.
ReplyDeletegood post
ReplyDeleteவிவேகானந்தர் என்றாலே தன்னம்பிக்கை தான் . அவர் தினத்தன்று
ReplyDeleteஅவரைப்பற்றிய புகைப்டங்களுடன் கூடிய பதிவு அருமை.
நல்ல பதிவு... அனைவரும் அறிய வேண்டிய பதிவு...
ReplyDeleteவிவேகம் + ஆனந்தர் = விவேகானந்தர்.
ReplyDeleteமிகச்சிறப்பான படங்களுடன் தங்களுக்கே உரித்தான விளக்கங்கள் எல்லாமே அருமையாக உள்ளன.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 960 ooooo
இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொரு தம் வாழ்நாளில் நினைவு கொள்ள வேண்டிய மாமனிதர் விவேகானந்தர்.
ReplyDeleteஅருமையா புகைப்படங்களுடன், தெளிவான தகவல்கள்.
பாராட்டுக்கள்!
எனக்குப் பிடித்த துறவிகளில் ஒருவர் சுவாமி விவேகானந்தர்! படங்களும் தகவல்களும் அருமை! நன்றி!
ReplyDeleteநல்ல பகிர்வு.....
ReplyDeleteநல்ல தகவல்கள் மற்றும் படங்கள்.