Friday, July 19, 2013

ஆடி வெள்ளி - சௌந்தர்ய தரிசனம் ..


பகவதி தேவி பர்வத தேவி  பலமிகு தேவி துர்க் கையளே 
ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே  சங்கரி யுன்னைப் பாடிடுமே 

ஹந ஹந தகதக பசபச வெனவே  தளிர்த் திடுஜோதி யான வளே | 
ரோக நிவாரணி சோக நிவாரணி  தாப நிவாரணி ஜெய துர்க்கா 
---ரோக நிவாரண அஷ்டகம்

நம்மை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை நமக்குள் காண்பதே பிறந்ததன் பயன்' என்பதுதான் ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமாகத்ம்திகழ்கிறது ..!
 ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். 

ஆடிவெள்ளிக்கிழமைஅம்மன் ஆலயங்களில்   பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து  சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன ..!
ஆடிமாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், நேர்த்திக்கடன் செலுத்துவதும்
 அம்மனைத் தரிசித்து, கூழ் படைத்து, ஏழைகளுக்கு தானம் செய்வது சிறப்பாகும்.
ஆடிப்பிறப்பில் ஆடிக்கூழ் காச்சி ஆடிப் பாடி உண்ணும் வழக்கம் உண்டு ..
ஆடி முதல் வெள்ளி. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது.ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.  ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும்.

ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
 aadi friday special pooja amman temple
ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. 

ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள்.
பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும்.





ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.


தன்வந்திரி ஆரோக்ய பீடம்..!






15 comments:

  1. கண் நிறைக்கும் மனம் நிறைக்கும் அற்புத தரிசனம்!

    ReplyDelete
  2. சிறப்பான தரிசனம் கிடைத்தது... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தங்களின் வெற்றிகரமான 975வது பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  4. அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகியே !

    ஆடி வெள்ளியன்று தேடி வந்து உன்னை

    தரிஸிக்கும் பாக்யம் கிடைத்ததே !!!!

    அனைத்து அம்பாள் படங்களும் அருமையோ அருமை.

    தரிஸனம் கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    >>>>>>

    ReplyDelete
  5. ஆடி மாதத்தை சக்தி மாதமாக மாற்றும் சக்தி படைத்த தங்களுக்கும், தங்களின் எழுத்துத்திறமைக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    >>>>>>

    ReplyDelete
  6. 1000க்கு இன்னும் 25 மட்டுமே பாக்கியுள்ளது.

    நினைத்தாலே இனிக்கும் விஷயமாக உள்ளது. ;)))))

    ooooo 975 ooooo

    ReplyDelete
  7. அன்னையின் சிறப்புமிகு மாதத்தில் அன்னையின் புகழ் மனம் பரப்பும் தங்களின் கவின்மிகு வண்ணப் படைப்பு அருமை சகோதரி! வாழ்த்துக்கள். தொடருங்கள் சகோதரி!

    ReplyDelete
  8. good post with nice pictures of amman

    ReplyDelete
  9. சௌந்தர்ய தரிசனம் கிடைக்கப்பெற்றேன். நன்றிங்க.

    ReplyDelete
  10. அன்னை சக்தியின் அற்புதமாம் வெள்ளியில் என்னை நிறைத்த பதிவு!

    அழகு,அருமை அத்தனையும்!

    பகிர்விற்கு இனிய நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  11. ஆடிமாத தகவல்களும் அம்மன் தரிசனமும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. ஆடிவெள்ளி அம்மன் தரிசனம் - மனதுக்கு மகிழ்ச்சி!

    ReplyDelete
  13. அனைத்து அம்மன்களும் அழகு...

    ReplyDelete
  14. ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம்...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete