நாடியது கை கூடும் நன்மை யாவுஞ் சேரும்
தனமானது தானே சேரும் தன் எண்ணமெல்லாமீடேறும்
பகைவர் பயந்து ஓடுவர் பாவங்களும் தோஷங்களும் கருகும்
முன்னை வினையும் இம்மை ஏவலுஞ் சூனியமும் தவிடு பொடி
யாகுமே சாலக்ராம மலையடி நிற்கும் அவ் வாயு மைந்தரை கூடிடவே’’
பூவுலகில் தவறாது பக்தியும் சகிப்புத் தன்மையும் கொண்டு யார் வாழ்கின்றனரோ அவர்கள் அருகே அவர்கள் கேட்காமலேயே சென்று அவர்தம் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப காரியங்களை வெற்றியாக்கு’ என்று ராமபிரான் சிரஞ்சீவியான அனுமனுக்கு அருளினார்..
எல்லோருக்கும் முக்தியும் மோட்சமும் கிட்ட, ஆஞ்சநேயர் உழைக்கின்றார்.
விபத்து ஏற்படாமல் காப்பார் மாருதி என்கிறது நாடி சாஸ்திரம். ‘
வல்வில் ஓரி என்ற கடையேழு வள்ளல்களில் ஒருவர். தனக்கு வந்த புற்று நோய்க்கு நாமக்கல் ஆஞ்சநேயரை தொழுது நிவாரணம் பெற்றார்.
மகேந்திர பல்லவன் என்ற மன்னர் வெற்றி மேல் வெற்றி பெறவும்
பல்லவ சாம்ராஜ்யம் நிலை பெறவும் அனுமன் மீதான பக்தியே காரணம்.
பேய், ஏவல், சூன்யம் போன்ற தொந்தரவு நீங்கிட, ஆஞ்சநேயருக்கு இளநீர், வெண்ணெய், வடை, வாழைப்பழம், நைவேத்யம் செய்து,
18 அமாவாசைகளில் விநியோகம் செய்தால்நிவாரணம் கிட்டும்.
திருமணத் தடை நீங்கிட மார்கழி அமாவாசையில் பானக நைவேத்யம் செய்து அதிகாலையில் பஜனை பாடி வருவோர்க்கு விநியோகம் செய்ய தடை நீங்கும் என்கிறார் அகஸ்தியர்.
ஆஞ்சநேய மூர்த்தி, வளர்ந்து வருகின்றார் என்பது உண்மை.
தாமரைப் பாதங்களை உடைய இவரை அமாவாசையன்று அபிஷேகம் செய்து ஆராதிப்பவர்களுக்கு குறைவிலா செல்வம் சேரும். வாணிபம் விருத்தி அடையும்.
, ‘ஓம் நமோ அனுமதே நமஹ’ என 1008 முறை நாள் ஒன்றுக்கு ஜபம் செய்து வந்தால் நல்ல வேலை ,சுகமான ,ஆரோக்யமான வாழ்வு மகிழ்ச்சிகிடைக்கும்..
வாயு மைந்தன், சிந்தையில் பெரியோன்,
சமயோசித புத்தியில் இமயம்,
நவ வ்யாகரண பண்டிதன்,
நித்ய சிரஞ்சீவி என்றெல்லாம் அயோத்தி அரசன், ராமச்சந்திர மூர்த்தியால் புகழப்பட்டவர்,
அனுமனுடைய உடல் வஜ்ரம்போல் உறுதி மிக்கது.
அவருடைய மனஉறுதியும் அத்தகையதே.
நித்ய ப்ரம்மச்சாரி,
பக்திக்கு இருப்பிடம்,
சேவைக்கு உறைவிடம் என்றெல்லாம் இந்திரனாலேயே புகழப்பட்ட மகான்
இன்றும் நம் கண்ணிற்கு தெரியாது நம்முடனேயே சஞ்சரித்து வரும் திவ்ய மூர்த்தியாம் ஆஞ்சநேயர் முனிவர்களினாலும் சித்தர்களினாலும் தொழப்படும் புண்ணிய க்ஷேத்திரங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ரிஷிகளினிடையே பேசப்படுவது நாமக்கல் க்ஷேத்திரம்..
நேபாளத்தில் இருந்து ஆஞ்சநேயரால் எடுத்துவரப்பட்ட சாளக்கிராம மலைதான் நாமக்கல் மலை.
பட்டாபிஷேகம் முடிந்தபின், ராமர் அனுமனை அழைத்து, தன் வெற்றிக்காக அனுமன் உழைத்ததை பாராட்டி பல அன்பளிப்புகள் தந்தார்.
அவருடைய பற்றற்ற உள்ளத்தை உணர்ந்து, மான் தோலை இடையில் தரிக்கச் செய்தார்.
திருமகள் அம்சமான ஜானகி தேவியின் அருள் பெற்றமையால், பொன் ஆபரணங்களையும் கைவிரல்களில் மோதிரங்களையும் அணிவித்தார்.
தாமரை மலர்களால் மக்கள் அவருடைய திருவடிகளை வணங்கினர்.
ஸ்ரீராமபிரான், ‘‘ஆஞ்சநேயா, இப்படியே நீ சென்று, வடதிசையில் இருக்கும் சாளக்கிராம மலையை எடுத்து, எனது வெற்றிக்கு உறுதுணையான, எனது உபாசனா மூர்த்தியான லட்சுமி நரசிம்மனுக்கு, புனித பாரதத்தின் புண்ணிய தெற்கு பகுதியில் ஒரு கோயில் எழுப்பு’’ என்றபடியே அனுமன் நாமக்கல்லில் இருக்கும் லட்சுமி நரசிம்ம மலைக் கோயில் தோன்றிற்று.
திருமகள் நித்யவாசம் செய்வதால் தங்கத்தினும் அதிக மதிப்பு வாய்ந்த பிளாட்டினம் தாதுக்கள் நிறைய அளவில் படிமங்களாக கிடக்கின்றன. வைரம், தங்கம், செம்பு போன்ற ரத்தினங்களும் உலோகத் தாதுக்களும் ஏராளமாக இருக்கின்றன என்கிறது நாடி சாஸ்திரம்.
ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மரை தரிசித்தபடியே நின்றுகொண்டு தியான பரவச கோலத்தில் இருக்கின்றார். இந்த ஆஞ்சநேயர், 18 அடி உயரஅனுமன் தானே உருவான ஸ்வயம்பு என்கிறார் அகஸ்தியர்.
அனுமனுடைய விழிகள் அழகாக விரிந்து நேராக அனுமனின் பார்வை லட்சுமி நரசிம்மரின் பாதங்களில் பதிந்து இருக்கிறது.
ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மரை 250 அடி தொலைவில் இருந்து பாத தரிசனம் செய்து ஆனந்த கோலத்தில் நிற்கின்றார்.
கமலாலய புஷ்கரணி படிகளில் அனுமன் பாதம் இன்றும் விளங்குகிறது.
பெரிய ஆபத்து, பேரிடர், பேரழிவு என ஏதும் பூமியை தாக்காமல் காத்துக்கொண்டு நிற்கிறார். இவருக்கு திகம்பர ஆஞ்சநேயன் என்றும் பெயர். வானமே கூரை என்பதும் கூரை என்பது இல்லாத ஆஞ்சநேயர் கோயில் என்றும் பொருள்.
அனுமனின் சிறப்புகள், படங்கள் அருமை.. நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்று சனிக்கிழமை, இராஜராஜேஸ்வரியிடமிருந்து அனுமன் பதிவு வரும் என்று நினைத்தேன், வந்தேன், அருள்மழை பொழிந்தான் அனுமன்.
ReplyDeleteநன்றி.
வாழ்த்துக்கள்.
வாயுகுமாரனை பல்வேறு திருவுருவங்களில்
ReplyDeleteதங்கள் பதிவால் தரிசித்து மகிழ்ந்தோம்
படங்களுடன் சனிக்கிழமை சிறப்புப் பதிவு
அருமையிலும் அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
காலையில் எல்லா ஊர்களில் இருக்கும் அனுமன்களையும் தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்குக் கொடுத்துவிட்டீர்கள்!
ReplyDeleteஜெய் பஜ்ரங்க்பலி!
”கண்டேன் ..... [ஸீதையை] பதிவினை”
ReplyDeleteஓம் நமோ ஹனுமதே நம:
சனிக்கிழமைக்கு ஏற்ற மிகவும் பொருத்தமான பதிவு.
>>>>>>
நாமக்கல் மலையே ஹனுமன் கொண்டுவந்த ஓர் சாளக்கிராமமா?
ReplyDeleteஆச்சர்யமான தகவலாக உள்ளது. !!!!!
தங்கமான எந்தன் ’தகவல் களஞ்சியம்’ சொன்னால் தப்பேதும் இருக்காது.
>>>>>
/பூவுலகில் தவறாது பக்தியும் சகிப்புத் தன்மையும் கொண்டு யார் வாழ்கின்றனரோ அவர்கள் அருகே அவர்கள் கேட்காமலேயே சென்று அவர்தம் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப காரியங்களை வெற்றியாக்கு’ என்று ராமபிரான் சிரஞ்சீவியான அனுமனுக்கு அருளினார்.. //
ReplyDeleteஆஹா, இதைக்கேடகவே, அதுவும் தங்கள் வாயிலாகக் கேட்கவே, மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சந்தோஷம்.
>>>>>>
ReplyDelete//பேய், ஏவல், சூன்யம் போன்ற தொந்தரவு நீங்கிட, ஆஞ்சநேயருக்கு இளநீர், வெண்ணெய், வடை, வாழைப்பழம், நைவேத்யம் செய்து, 18 அமாவாசைகளில் விநியோகம் செய்தால்நிவாரணம் கிட்டும்.//
மிகவும் பயனுள்ள தகவல்.
>>>>>
நம் அன்புத்தங்கை மஞ்சுவுக்கு, நான் என் கையால் வரைந்த ஆஞ்சநேயர் படம் ஒன்றும் என் பரிசுப்பொருட்களுடன் சேர்த்துக் கொடுத்திருந்தேன்.
ReplyDeleteஅந்த ஆஞ்சநேயருடன் புறப்பட்டுச்சென்ற மஞ்சு + குடும்பத்தினர், மிகவும் பத்திரமாக குவைத் போய்ச்சேர்ந்து விட்டதாக இப்போது [இதை டைப் அடிக்கும் போது JUST NOW] மகிழ்ச்சியான தகவல் தொலைபேசி மூலம் கிடைக்கப்பெற்றேன்.
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>>
ReplyDelete//வாயு மைந்தன், சிந்தையில் பெரியோன், சமயோசித புத்தியில் இமயம், நவ வ்யாகரண பண்டிதன், நித்ய சிரஞ்சீவி என்றெல்லாம் அயோத்தி அரசன், ராமச்சந்திர மூர்த்தியால் புகழப்பட்டவர், //
;))))) இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ஹனுமனுக்கு என் நமஸ்காரங்கள்.
>>>>>>
ஸ்ரீ ராம பக்க ஹனுமானின் திருவருட் கடாட்சம் எங்கும் நிலவ வேண்டுகிறேன்.
ReplyDeleteஅழகிய சிறந்த படங்களுடன் அற்புத தகவல்களும் தந்தனை சகோதரி!
மனம் மகிழ்ந்தேன். தொழுதேன்.
பகிர்வினுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!
மிக அழகான பட்ங்கள் + மிக அற்புதமான தகவல்களுடன் இன்றைய பதிவு வெகு ஜோர்.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
ooooo 962 ooooo
அழகான படங்களுடன், சிறப்பான பகிர்வு.
ReplyDeleteஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ராம்...
சீரும் சிறப்பும் நல்கும் சிறப்பானதொரு ஆலயப் பகிர்வும், இராம பக்தனின் பெருமையை பறை சாற்றுமொரு அற்புதப் பதிவு. பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteஅனுமனின் சிறப்புக்களுடன் அழகிய படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியும் தந்தன! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநாமக்கல் ஆஞ்சனேயரின் தரிசனம் திவ்யமாகக் கிடைத்தது....
ReplyDeleteமிக்க நன்றி.
'நேபாளத்திலிருந்து ஆஞ்சநேயரால் எடுத்து வரப்பெற்ற சாளக்கிராம மலை தான் நாமக்கல் மலை' என்கிற விஷயம் இது நாள் வரை தெரியாது.
ReplyDeleteஉங்கள் பதிவுகளைப் படிக்கும் பொழுது ஒவ்வொரு பதிவுக்கும் ஏதாவது புதுத் தகவல் கிடைத்து விடும். அது தான் விசேஷம்.
ரொம்ப நன்றி.
superb pictures
ReplyDelete