

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
![[01_andal_kalyanam.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBIvzD9U3BILt2iz2N5gVqWhCpesPkWZJngbWr_SA35VGdidZkTqk8OAlisc2GkTlUucljUmwjbq3Djh7jRBhp7CCdbEVPtEnxfNZ7MRMFeZmmD5vS_fcX0oAPlCHWikNAoVKuUdRXxvI/s400/01_andal_kalyanam.jpg)
அவனி மாது அவதரித்தாள் அந்தமான குழந்தையாகவே
ஆழ்வார் திருமகளாராய் அழகிய மணவாளர்க்காய்
நந்தவனத்தில் வந்து பைந்துளவின் பாலுகந்து
நன்னயமாம் தன்னடி தர மன்னுயிர்க்காயிந்நிலத்தில்
புவனம் வாழ புதுவை வாழ பொன்னரங்கன் புகழும் வாழ தவ
முயர்ந்த செந்தமிழும் வாழ தகுந்த பகவதனுபவம் மிகுந்து
முதிர்ந்து கனிந்தே கலியுகாதி தொண்ணூற்றெட்டில் கன
நள வருஷ காலத்தில் நலிவிலாத நான்காமாதம்
நலமிகு மங்களவாரம் நற்கலை மதி தவழ் பூரம்
நட்சத்திரமதில் ஆனந்தமாகவே அவத்ரித்தாள் பூங்கோதை ..!

ஸ்ரீ ஆண்டாளின் ஜனன மாதமான ஆடி மாதத்தில் திருவாடிப் பூர பிரமோற்சவம் பன்னிரு நாட்களுக்கு மிகச் சிறப்பாக கோலாகலமாக
ஸ்ரீ வில்லிபுத்தூரில் கொண்டாடப் படுகிறது ...
ஆடி மாத பிரமோற்சவத்தில் ஒன்பதாம் திருநாளான திருத்தேர் திருவிழா ஆண்டாளின் திரு அவதார தினமான ஆடி பூரத்தன்று அதிகாலையிலேயே ஆண்டாளும் ,மன்னாரும் பெரிய திருத்தேரில் எழுந்தருளுகிறார்கள்..!

அலங்காரம் செய்த பிறகு தேரின் மொத்த உயரம் 75 அடியாகும்.
ஆண்டாளும் மன்னாரும் திருத் தேரேறி வீதி வலம் வந்து மக்களுக்கு அருள் மழை பொழிகிறார்கள் .
ஆண்டாளின் திருத்தேர் புறப்பட்டு மீண்டும் நிலையம் சேர குறைந்தது 2 நாட்கள் ஆகிறது
இந்த திருவிழாவின் போதும் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் முழுவதும் சேவையாகிறது . வேத பாராயணமும் செய்யப்படுகிறது.



மதுரை ஆடி திருவிழாவில் தேர் பவனியில் மீனாக்ஷி அம்மன் :


தேர் திருவிழா கிராமத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான மழை பொழிய வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் நோய், நொடி இன்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
பண்பாட்டுத் திருவிழாவாகத்திகழும் அழகர்கோயில் ஆடித்தேர்திருவிழா சற்று வித்தியாசமானது. தேர் கோயிலைச் சுற்றி வருவதில்லை. கோயிலுக்கு வெளியேயுள்ள அழகாபுரிக்கோட்டையைச் சுற்றி வருகிறது.
தேர் முன்பு கருப்பசாமியாடிகளும், கண்ணன் பாடல்களைப் பாடி கோலாட்டம் ஆடி வருபவர்களையும் கொஉ மகிழ்வளிக்கும் ..!
கனத்த வடம் பிடித்து பெரிய தேரை ஊர் கூடி இழுக்கும் காட்சி அருமையானது....!

திருப்புல்லாணியில் தேர் உத்ஸவம்
தேரில் சீதா லக்ஷ்மண ஸமேத ஸ்ரீராமன்.

தரிசித்து மகிழ்ந்தோம்
ReplyDeleteபடங்களும் பதிவும் மிக மிக அருமை
வாழ்த்துக்கள்
படங்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...
ReplyDelete
ReplyDeleteபடங்களும் பதிவும் மிக மிக அருமை
வாழ்த்துக்கள்
வணக்கம்
ReplyDeleteஅம்மா
ஆடிவரும் அழகுத் தேர் திருவிழா பதிவு மிக அருமையாக உள்ளது படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
1]
ReplyDelete”ஆடிவரும் அழகுத்தேர் திருவிழா”
மிகவும் நல்லதோர் தலைப்'பூ’.
தலைப்புத் தேர்வு செய்வது தங்கத் தலைவியல்லவா !
அது எப்போதுமே தங்கம் போல [கொங்கு நாட்டுக்கோவைத் தங்கம் போல] ஜொலிக்கத்தான் செய்யும்..
>>>>>
3]
ReplyDelete//மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் //
ஆஹா நம் பக்கத்து விவாஹங்களில் இந்தப் பாடல்கள் பாடும்போது, எவ்வளவு ஓர் சந்தோஷமான உணர்வுகளையும், மலரும் நினைவுகளையும் கிளறி விட்டு மகிழ்விக்கும். ;)))))
என் அக்காக்கள் இருவர். இதுவரை அவர்களின் குழந்தைகளை நான் தான் என் தோளில் அமர்த்தி, மாலை மாற்றச் செய்துள்ளேன்.
இதுவரை 8 மறுமான்கள் + 3 மறுமாள்கள் என 11 பேர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
ஒவ்வொருவரின் கல்யாண வீடியோக்களைப் போட்டுப்பார்க்கும் போதும், இந்தப்பாடல் இடம் பெறும் காட்சிகளில் நான் இருப்பேன்.
நினைக்க நினைக்க மகிழ்ச்சிப்பெருக்கெடுக்கும்.
சிறிய அக்காவின் ஒரே ஒரு பிள்ளை இன்னும் பாக்கி இருக்கிறான்.
பிராப்தம் எப்படியோ. அவனையும் என் தோளில் சுமந்து மாலை மாற்றச் செய்து விட்டால், தாய் மாமாவாகிய என் கடமை நிறைவேறிய திருப்தி ஏற்படும்.
இந்தப் பதினோரு பேர்களில் இருவர் நல்ல குண்டு ஆசாமிகள்.
அப்போது எனக்கும் நல்ல தெம்பு இருந்தது, ஒரே ஆளாக பிறர் உதவியின்றி தோள்தூக்க முடிந்தது.
இந்த நிலுவையில் உள்ள பையன் நல்ல ஒல்லி தான். அவனையும் அலாக்காகத் தூக்கிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
>>>>>
4]
ReplyDeleteஇன்றைய தங்களின் பதிவினில் நல்ல பல விஷயங்கள் அற்புதமான படங்களுடன் அருமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 980 ooooo
படங்களும் பகிர்வும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான படங்களுடன் நல்ல அற்புதமான விஷங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteஆஹா!
ReplyDeleteஇன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்துப் போயிருக்கிறீர்களா? இன்றுதான் அங்கிருந்து உத்சவ பத்திரிகை வந்தது.
அங்கு போகாமலேயே ஆண்டாள் ரங்கமன்னார் தரிசனம் ஆயிற்று!
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!
அருமைப்படங்கள் கண்கொள்ளாக்காட்சிகள் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteAha....
ReplyDeleteRajeswari.......
I cannot move out to these pplaces. You made me see all the divine places. Thanks thanks a lot dear. I enjoy all the pictures. Sing the song malaimarrinal.... and ungal pattu...
Very good and pleasent start of this day.
Thanks.
viji
ஆடித்தேர் படங்கள் பாடல்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteதரிசனம் செய்வித்தமைக்கு நன்றி.