Sunday, July 14, 2013

விசித்திரப் பறவை









நெருப்புக் கோழி , ஈமு வகை கோழியை போன்று உருவ அமைப்புடன் அளவில் மிகவும் பெரியதாக காணப்படும் “யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்ட்).  10 அடி உயரமும், அரை டன் எடையும் கொண்டது.
ஆப்ரிக்கத் தீவுகளில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறும் வரை, அங்கு வாழ்ந்துவந்தவை அவர்கள் குடியேறிய சில ஆண்டுகளிலேயே,
யானைப் பறவை இனம் இறைச்சி, முட்டைக்காக தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால், காலப்போக்கில் அழிந்து போயின. 

யானைப்பறவையின் முட்டை, சாதாரண கோழி முட்டையை விட 160 மடங்கு பெரிது. 
தற்போது காணப்படும் ஈமு கோழியை விடப் பெரியது.
மூக்கு குத்தீட்டி போல பெரியதாக இருக்கும்.

மடகாஸ்கரின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த இந்த பறவைகளின் பழைய கூடுகளில் காணப்பட்ட முட்டை ஓடுகளை, ஷெப்பீல்டு பல்கலைகழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அழிந்து போன பறவை இனங்களான மடகாஸ்கர் பகுதியை சேர்ந்த “யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்டு) போன்ற பறவையினங்களின் முட்டை ஓடுகளில் இருந்து அவற்றின் மரபணுவை பிரித்தெடுக்கும் முறையை, விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். 
 வெற்றிகரமாக டி.என்.ஏ.,வை பிரித்தெடுத்து அதன் மூலக் கூறுகளைக் கண்டறிந்ததால், அதன் மூலம் அழிந்து போன பறவை இனங்களை போன்ற தோற்றம் கொண்ட, ஒன்றை, குளோனிங் மூலம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

”முட்டை ஓடுகளில் இருந்து பழமையான டி.என்.ஏ.,வை பிரித்தெடுப்பது தான், தொல்பொருள் மற்றும் புதைபடிவ ஆராய்ச்சியில் இருக்கும் முக்கியமான ஒன்று. 
elephant bird, Eggs

பழமையான டி.என்.ஏ., படிவங்களை போதுமான அளவு பெறுவது, மிகவும் சவாலானது. 
பொதுவாக, அழிந்து போன இனங்களின் புதைபடிவங்கள்
ஆகியவை எங்காவது சில இடங்களில் சிறிதளவே கிடைக்கும் ..’ 
இந்த “யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்டு) மிகப் பெரிய கால்கள், கூர்மையான நகங்கள், நீண்ட சக்தி வாய்ந்த கழுத்து மற்றும் ரோமம் போன்ற இறகுகளால் மூடப்பட்டு காணப்படும். 
பார்க்க மிகவும் பெரிதாக பயமுறுத்தும் தோற்றுத்துடன் யானைப்பறவை காணப்பட்டாலும், இதன் உணவு தாவரங்கள் மட்டுமே..!

மடகாஸ்கர் பகுதியில் இந்த பறவை ஆறு கோடி ஆண்டுகள் வாழ்ந்துள்ளன.


Humming Bird  Elephant on a Cat








20 comments:

  1. படங்களும் தகவல்களும் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான, அறிந்திராத தகவல்கள். படங்கள் அருமையோ அருமை. நன்றி

    ReplyDelete
  3. அறியதொரு தகவல்கள் படங்களுடன். தேடல் சுகமானது. சுவாரசியமான தகவல்களுடன் கவின்மிகு படைப்பிற்கு நன்றி!

    ReplyDelete
  4. அழிந்துபோன இனம்பற்றி படங்களுடன் அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  5. அழிந்து போன ஒரு விசித்திரப் பறவை பற்றிய தகவல்கள் நன்று.

    ReplyDelete
  6. ”விசித்திரப்பறவை” என்ற தலைப்பில் இன்று தாங்கள் கொடுத்துள்ள பதிவு மிகவும் விசித்திரமான தகவல்களைக் கொண்டதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete

  7. யானை முகம் கொண்ட பறவைகளைப்பார்த்து அசந்து போனேன்.

    >>>>>>

    ReplyDelete
  8. எவ்வளவு படங்கள், எவ்வளவு தகவல்கள்.

    அடடா, அந்த ஆராய்ச்சியாளர்களை விட தாங்கள் மிகவும் கடுமையாகத்தான் உழைத்து வருகிறீர்கள்.

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>>

    ReplyDelete
  9. 500கிலோ எடை கொண்ட யானை உருவம், நீண்ட துதிக்கை + கொம்புகள் + அகன்ற காதுகளுடன் கூடிய ’பறக்கும் யானை’ என்றால் கற்பனை செய்து பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளதே!

    இறைவனின் படைப்புகளில் தான் எத்தனை அதிசயங்கள். ;)

    >>>>>>

    ReplyDelete
  10. எப்படித்தான் தகவல்களை சேகரித்து, படங்களைத்தேடிக் க்ண்டு பிடித்து, எங்களுக்காக இவ்வாறு விசித்திரப்பதிவுகள் தருகிறீர்களோ?

    பலவற்றையும் படிக்கப் பொறுமை வேண்டும், கோர்த்து ஒருங்கிணைத்துப் பதிவாகக் கொண்டுவர தனித்திறமை வேண்டும்,

    எல்லாமே ஒருசேர உங்களிடம் அமைந்துள்ளது. ;)))))

    அது தான் உங்களின் தனித்தன்மை, தனிச்சிறப்பு. நீடூழி வாழ்க!

    தங்களின் திருக்கரங்களை வாங்கிக் கண்களில் ஒத்திக்கொள்ள துடிக்குது என் மனது.

    >>>>>

    ReplyDelete

  11. மிகவும் ரஸிக்க வைத்த பகிர்வு.

    வித்யாசமான வியக்க வைக்கும் பதிவு.

    முதல் படத்தில் ஆனைக்குட்டியே மலரில் தேன் உறுஞ்சுவது போல காட்டியுள்ளது அருமையோ அருமை.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    தாங்கள் ஆயிரத்தை எட்ட இன்னும் முப்பதே முப்பது பதிவுகளே பாக்கியுள்ளன. அந்த நாளும் வந்திடாதோ என ஏங்கி வருகிறேன்.

    ஒரு மாதம் ..... இன்னும் ஒரே மாதம் ..... இன்பத்தின் எல்லையை அடைய.

    அன்பான அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ooooo 970 ooooo. .

    ReplyDelete
  12. அதிசயமான ஆச்சரியமான படங்கள் நல்லத் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  13. ஐஸ் ஏஜ் படத்தில் வரும் மாமூத் இறகு முளைத்துப் பறப்பது போல இருக்கிறது இந்த யானைப்பறவை.
    குறட்டை விட்டுத் தூங்கும் யானையார் அருமை!

    ReplyDelete
  14. யானை சைசில் ஒரு பறவையா? அதுவும் அத்தனை வெயிட்டைத் தூக்கிக்
    கொண்டு பறப்பது விந்தையிலும் விந்தையே! அழிந்து போன ஒரு உயிரினத்தைப் பற்றிய செய்தியை தேடிப் பிடித்ஹ்டு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  15. அத்தனை படங்களும் அழகு!

    ReplyDelete
  16. படங்கள் ஆச்சரியப்பட வைத்தன. புதிய தகவல்கள்!

    ReplyDelete
  17. அருமையான படங்கள்

    ReplyDelete
  18. புதிய தகவகல்கள்.பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  19. மிக அருமையான தகவல்

    ReplyDelete