Saturday, July 27, 2013

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்






ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.


 மாதுளம் பூவையொத்த சிவந்த நிறத்தினளை, 
எங்கள் தாயை, அபிராமவல்லியை, 
அனைத்துலகங்களையும் ஈன்றருளியவளை,
உலகங்களையெல்லாம் காத்து ரட்சிப்பவளை, 
அழகிய நான்கு திருக்கரங்களில் அங்குசம், பாசம், மலர்ப்பாணம், கரும்பு வில் ஆகியனவற்றை ஏந்தியிருப்பவளைத் தொழுபவர்களுக்கு எப்போதும் எந்த ஒரு துன்பமும் நேராது.

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 
10 வாரம் தொடர்ந்து விழா நடைபெறும்.
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
 வெள்ளிக்கிழமை கோ பூஜையும், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கணபதி ஹோமமும், 108 பால்குடம் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும் ..
அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் நவகலச பூஜை சிறப்பம்சம் ..!

பெரியபாளையத்தில் ஆரணியாற்றங்கரையில் வீற்றிருந்து கேட்ட 
வரம் தரும் பவானி அம்மன் புற்றுக்குள் சுயம்புவாக தோன்றிய அற்புதம் ..! 

பெரியபளையம் அன்னை பவானி அம்மன் பரமசிவனின் அட்டமூர்த்திகளில் ஜலமூர்த்தியான `பவர்' என்ற அம்சத்தின் தேவி என்று கருதப்படுகிறார்.

வாழ்வின் வடிவமாய், வாழ்விற்கு மூலமாய், வாழ்வினை அளிப்பதாய் உள்ள தண்ணீருக்கு அத்தன்மையை அளித்து, திகழும் அன்னை பவானி, தன்னை வழிபடும் அன்பர்கட்கு வாழ்வினை அளிப்பவளாகத்திகழ்கிறாள்..!

இவ்வுலகில் எது பொய்த்தாலும்,  பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள்.
 “மகமாயி! தாயே!” பெரியபாளையத்தாளே! ‘பாடைக்கட்டி’ எடுத்து வந்து போடுகிறேன். பொங்கலிடுகிறேன். இளநீர் கண்திறக்கிறேன்” என்று பலவிதமாக பிரார்த்தனைகள் செய்யும் தலம் இது.

எது பொய்த்தாலும் பெரியபாளையத்தாள் அருள் பொய்க்காது.
 
அம்மனுக்கு பிரியமான வேப்பிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வேப்பிலை சரத்தை உடம்பில் கட்டிக்கொண்டு ஆலயத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் ...

பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள்.

இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி,  உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.

சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது.

அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள்.

பாளையம் என்றால் படை வீடு என்று பொருள்..

பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும்.

முதலில் விநாயகரை வணங்கி விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும்.

சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. 

 பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதி உள்ளன.

ஆந்திரா வளையல் வியாபாரிகள் சென்னைக்கு வளையல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி கால்நடையாகவே வந்து பெண்களின் கையில் வளையல் போட்டு விட்டவுடன் மங்களகரமாக  வாழ்த்துவதற்கு அறிகுறியாக, வளையல் அணிந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பதற்காகவே  பொட்டலங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு வருவார்கள்.

ஆந்திராவுக்குத் திரும்பி கொண்டிருந்த வளையல் வியாபாரி,  ஒருவர் பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார். சிறிது நேரம் கழித்து கண் விழித்தார்.

அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து  தேடினார். அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட்டது. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டை அங்கு கிடந்தது.

ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முஅவரால் முடியவில்லை. நீண்டநேரம் போராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை. ஆந்திராவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பி சென்றுவிட்டார்.

அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது,  கனவில் பவானி அம்மன் தோன்றினாள். ``நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா.  தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு'' என்று உத்தரவிட்டாள்.


கடப்பாரை எடுத்து வந்து புற்றை இடித்து அகற்ற பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் ``ணங்'' என்று ஒரு சத்தம் கேட்டது. கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது.  புற்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து போனது.

புற்றுக்குள்  இருந்த  சுயம்பின் மேல் பகுதியில் இருந்து தான் ரத்தம் குபுகுபு என்று வந்து கொண்டிருந்தது. உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது.அந்த இடத்தில் சுயம்புவை மூலமாகக் கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது.

கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

தற்போதும் அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவைக் காணலாம்.

Periyapalayam Temple inside
periyapalayam Shops - Children's attraction

22 comments:

  1. வணக்கம
    அம்மா
    படித்தேன் ரசித்தேன் பதிவு மிக மிக அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    பெரியபாளையம் பவானியம்மன் ஆலயம் தோன்றிய வரலாற்றுக் கதை மிக அருமை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  3. GOOD MORNING !

    பெரியபாளையம் பவானி அம்மனுக்கு வந்தனங்கள்.


    >>>>>>



    ReplyDelete
  4. கடப்பாறை பட்ட இடத்தின் வடுவை இன்றும் காணலாம் என்ற தகவல் பிரமிக்க வைக்கின்றது.பாவனி அம்மனை வணங்குவோம். நன்றி

    ReplyDelete
  5. ஆத்தாளை,
    எங்கள் அபிரமவல்லியை,
    அண்டம் எல்லாம் பூத்தாளை,
    மாதுளம்பூ நிறத்தாளை .........
    என்ற அருமையான பாடலுடன் கூடிய
    துவக்கம் அழகோ அழகு. ;)

    >>>>>>

    ReplyDelete
  6. நவகலச பூஜை

    ’ந டை பெ று வ து’

    என்று மாற்றம் செய்தால் சிறப்பம்சமாக இருக்குமே!

    [‘நடெறுவது’ என்று ஏதோ இடறுவது போல இப்போது இருக்குதுங்க]

    >>>>>

    ReplyDelete
  7. ’எது பொய்த்தாலும், பெரியபாளையத்தாள் அருள் பொய்க்காது’

    ஆஹா, எப்படியாவது அம்பாள் அருள் பொய்க்காமல் எனக்குக் கிடைக்கட்டும். மகிழ்ச்சியே.

    >>>>>

    ReplyDelete
  8. படங்கள் + பட விளக்கங்கள் எல்லாம் வழக்கம் போல் அருமை.

    >>>>>

    ReplyDelete
  9. ஆந்திரா வளையல் வியாபாரி, பாம்புப்புற்று, கனவு, கடப்பாரை, தலை, இரத்தம், மஞ்சள் காப்பு எனச்சொல்லியுள்ள கதை கேட்க சுவாரஸ்யமாக இருக்குதுங்கோ.

    >>>>>

    ReplyDelete
  10. எல்லாவற்றிற்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ooooo 983 ooooo [ Only 17 more ;) ]

    ReplyDelete
  11. பெரியபாளையம் பவானியம்மன் கோவிலின் சிறப்புகள் + தகவல்கள் அனைத்தும் அருமை அம்மா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. i have heard about this temple through my friends thanks for sharing info about it with pictures

    ReplyDelete
  13. பெரியபாளையம் பவானியம்மன் தரிசனம் மிகச்சிறப்பு.
    பதிவும் படங்களும் அற்புதம் சகோதரி!

    பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete

  14. நம்மை நாமே வருத்திக்கொண்டு பிரார்த்தனைகள் செய்வோரை என்னவென்பது. ...அன்னை அருள் புரிபவள். யாருக்கும் வேதனை ஏற்பட வேண்டும் என்று நினைக்க மாட்டாள். பல கதைகளில் கேட்டதுபோல் இதிலும் கடவுளுக்கு காயம் , வடு... முதல் படம் வெகு அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. சின்ன பிள்ளையா இருக்கும்போது போனது! கனவு கண்ட மாதிரி இருக்கு. பகிர்வுக்கு நன்றி அம்மா!

    ReplyDelete
  16. அழகிய படங்களின் தரிசனமே மன நிறைவாய்...

    ReplyDelete
  17. எங்கள் பக்கத்து ஊரான பெரியபாளையம் பவானி அம்மனை பற்றி விரிவாக படங்களுடன் எழுதி மகிழ்வித்து விட்டீர்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  18. படங்களுடன் பகிர்வும் அருமை...

    ReplyDelete
  19. பெரியபாளையத்தம்மன் கதை நம்பமுடியவில்லை. இது போன்ற நிறைய கதைகளில் அம்மனோ அய்யனோ கனவில் வந்து கோவில் எழுப்பச் சொல்வதேன், நேரில் சொல்லாமல் போனதேன் என்ற சந்தேகம் வரும். இருந்தாலும் அதை நம்பி வருகிறவர்களை வியாக்காமலும் இருக்க முடியவில்லை.
    கதையும் படங்களும் சுவாரசியம்.

    ReplyDelete
  20. நல்ல படங்கள்......

    ரசித்தேன்.

    ReplyDelete
  21. பெரியபாளையத்து அம்மன் பற்றிய தகவல்களை,(தெரிந்துகொண்டேன்)அழகான படங்களுடன் அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  22. பவானிஅம்மன் புற்றுக்குள் சுயம்புவாக தோன்றிய அற்புதம் தெரிந்துகொண்டோம்.

    ReplyDelete