



கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அருமறை தேடிடும் கருணையின் கடலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன்கனிமொழியாலேகாண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்

குமரன் சினம் தணிந்து, தன் தேவியருடன் குன்றில் அமர்ந்த
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பம் என, ஐந்து நாட்கள் திருவிழா நடைபெறும் ...!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருப்பதி திருமலை அருள்மிகு
ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள் தேவஸ்தானத்தில் இருந்தும்,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் இருந்தும் சீர்வரிசைகள் எடுத்து வரப்படுகின்றன...!

ஆடி அஸ்வினியுடன் துவங்கி ஆடி பரணி, ஆடிக் கிருத்திகை என விழாக்கோலம் களைகட்டுகிறது ...!
வெள்ளிவேல் விமானத்தில் முருகன் வீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சி ..!
சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுக்கும் முருகப் பெருமானுக்கு தங்க கவசம், பச்சை மரகத கல் அணிவிக்கப்பட்டிருக்கும் ஆனந்தக்காட்சி அருமையானது ..!
சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், தீப ஆராதனை மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும் ..!.
‘முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷம் மலையில் எதிரொலிக்கும்
பால், பன்னீர், புஷ்ப காவடிகளை பக்தர்கள் எடுத்துவருவார்கள்..!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை
விழாவுக்காக சரவணப் பொய்கை குளத்தில் தயார் செய்யப்படும் தெப்பம்

சரவணப் பொய்கையில் இரண்டு தெப்பங்கள் அமைக்கப்பட்டு ஒன்றில் இன்னிசை கச்சேரியும், இன்னொரு தெப்பத்தில் வள்ளி தெய்வானை சகிதமாக முருகப் பெருமான் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்

மூன்று நாள் நடைபெறும் தெப்பத் திருவிழாவில் உற்சவ பெருமான் வள்ளி,தெய்வானை உடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, திருக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.





திருத்தனித் தெப்பத் திருவிழாக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன்
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteசிறப்பான படங்கள்... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteகண் கண்ட தெய்வமான திருத்தணி முருகன் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். மனம் மகிழ்கிறது.
ReplyDeleteநன்றி உங்கள் தயவால் இந்த தரிசனம்.
அத்தனையும் அருமை! அருமையான தரிசனம்!
ReplyDeleteமுருகனருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
ReplyDeleteவிழாக் காலங்களில் அந்தந்த கோயில்களில் இருக்க முடியவில்லையே என்ற குறையை உங்கள் பதிவுகள் ஓரளவு போக்கிவிடுகிறது. பகிர்வுக்கு நன்றி.
முருகனின் முக்கியத்துவ விழாவான ஆடிக்கிருத்திகை பற்றிய தகவல்களை அழககான படங்களுடன் தந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteவழக்கம்போல் அருமையான படங்களுடன் அற்புதமான பகிர்வு. சந்தோஷம்.
ReplyDelete>>>>>
திருத்தணி தெப்பத்திருவிழா, ஆடிக்கிருத்திகை என அனைத்தையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. ;)
ReplyDelete>>>>>
நீ கற்பனை என்றாலும்
ReplyDeleteகற்சிலை என்றாலும் ................
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே //
அதே ..... அதே !
மனம் கவந்த அருமையான வரிகள். ;)))))
>>>>>
மனமார்ந்த பாராட்டுக்கள்,
ReplyDeleteஅன்பான இனிய நல்வாழ்த்துகள்,
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
இரேழு பதினான்கு நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளன.
அந்த நாளும் வந்திடாதோ ...... என்ற ஆவலில் நான்.
வாழ்க!
oooo 986 ooooo
சிறப்பானதொரு பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteதெப்பத்திருவிழா கண்டு களித்தேன்
ReplyDeleteதிருத்தணிகை நேரடியாக தர்சிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ReplyDeleteஉங்கள் பகிர்வில் தர்சனம் கிடைத்தது நன்றி.