ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும்
ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே.
பல நதிகளையும் அனேகமாயிருந்த தடாகங்களையும்
பல பூஞ்சொலைகளையும் உடைய மலை.அழகர் கோவில்
அழகர்கோவிலில் தான் மஹா லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்து
கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னை.
அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயேஅழகர்கோவிலில்
உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல்
மிகவும் அழகாக இருப்பார்.
தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில்
பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி வந்துவிட்டாள்.
மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என்ற வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள்.
இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் "கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், "வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.
அழகர் கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.
ஷேச வாகனம்
மோகினி அலங்காரம் ..!
அழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவம் சிம்ஹ வாகனம்
அழகர் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடித் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம் ..!
அழகர்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள்
ஆடித் தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க
வடம் பிடித்து இழுக்க அசைந்தாடி வரும் அழகுத்தேர் மனம் கரும் ..
"கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து நிலைக்கு வந்த தேரிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், தேரோடிய பாதையில் வலம் வருவார்..
சுந்தரராஜ பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்து அருள் காட்சி அளிக்கிறார்.
ராஜகோபுரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமிக்கு, சந்தன குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செய்வது விஷேசம்..
தங்கப்பல்லக்கு
கருட சேவை ..!
VERY VERY GOOD MORNING !
ReplyDeleteஇரவு முழுக்கத்தூக்கம் இல்லை. பல்வேறு சிந்தனைகள் + வேலைகள். இனிமேல் தான் கொஞ்சம் தூங்கப்போறேன்.
அதனால் அழகர் கோயிலுக்கு நேராக வந்து பிறகு சந்திக்கிறேன்.
ஆடி பிரும்மோற்சவம் ஆரம்பிப்பதற்குள் வந்துவிட முயற்சிக்கிறேன்.
>>>>>
ஒவ்வொரு படமும் அவ்வளவு அழகு... அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅத்தனை படங்களும் அருமை......
ReplyDeleteஅத்தனையும் அருமை.வாழ்த்துக்கள்
ReplyDelete//அழகர் கோயிலில் தான் அன்னை மஹாலக்ஷ்மி, பெருமாளைக் கைப்பிடித்து
ReplyDelete”கல்யாண சுந்தரவல்லி” என்னும் பெயர் பெற்றாள் //
மிகவும் சுந்தரமான திருநாமம். ;)
”கல்யாண சுந்தரவல்லி” அம்பாளுக்கு அடியேனின் வந்தனங்கள்.
>>>>>
//தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளைக் காணாமல் மஹாலக்ஷ்மி பெருமாளைத்தேடி வந்துவிட்டாள்.//
ReplyDeleteஆஹா, அருமை.
”உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ..........
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல ...........
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல .................
நீ இல்லாமல் நானும் நானல்ல ...........................”
எனப் பாடிக்கொண்டே வந்திருப்பார்களோ என்னவோ!
மகிழ்ச்சியான தகவல். ;)))))
>>>>>
ReplyDelete//இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் "கள்ளழகர்' ஆனார். //
அனைவர் மனத்தையுமே திருடிக்கொண்ட ஜோடிகள். நல்ல கற்பனை. ;))))
கள்ளழகரையும், கல்யாண சுந்தரவல்லி அம்பாளையும் நானும் போய் நேரில் தரிஸித்துள்ளேன்.
>>>>>
//அழகர் கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.//
ReplyDeleteஅடடா, நான் இன்னும் இந்த தோசையைச் சாப்பிட்டதே இல்லையே. ;(((((
தோசைக்காகவே இன்னொரு முறை மதுரைக்குப் போகணும்போல உள்ளதே ! ;)))))
தோசை ’சுட்டு’க் கொடுப்பதைப்பற்றிய விளக்கம் என் மனதைத் ’தொட்டு’ விட்டது. ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>
//அழகர்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள்
ReplyDeleteஆடித் தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க
வடம் பிடித்து இழுக்க அசைந்தாடி வரும் அழகுத்தேர் மனம் கரும் ..//
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
மனதால் சொல்லும்போதே மனதைக் கவருகிறதே! ;)
தங்கள் பதிவினில் படிக்கையில் மேலும் பரவஸம் ஆகுதே ! ‘))
>>>>>
தங்கப்பல்லாக்கு, சிம்ஹ வாகனம், கருட சேவை, யானை, தேர் என அனைத்துப்படங்களும் அழகோ அழகு.
ReplyDeleteஅருமையான பதிவு.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 987 ooooo
Aha aha.......
ReplyDeleteWhat a fentastic pictures and write up. I dontknow how to tell Thanks dear. By sitting at home, you made me visit all the functions. Great work dear.
Keep doing but for me..../
viji
ஆடி மாதம் அழகரை சேவித்தாயிற்று - எல்லா அலங்காரங்களிலும், எல்லா வாகனங்களிலும் - நன்றி!
ReplyDeleteஅழகரைப் பற்றி அழகான செய்திகள்! அருமை! நன்றி!
ReplyDeleteஆடி மாதம் அழகர் திருவிழா கண்டேன். படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteஅழகர் பிரமோற்சவ தர்சனம் பெற்று மனம்குளிர்ந்தது. நிறைந்த படங்கள் கண்டு மகிழ்ந்தோம்.
ReplyDeleteநேரில் கண்டால் கூட இவ்வளவு மகிழ்ச்சி இருக்காது!
ReplyDeleteஎங்கள் குலதெய்வம் அழகரை நேரில் தரிசித்த மகிழ்வைக் கொடுத்தது உங்கள் பகிர்வு...
ReplyDeletekallalagar pictures are superb thanks for sharing
ReplyDeleteஅழகிய தரிசனம் .மிகவும் மனம் கவர்ந்த பகிர்வு இதற்க்கு
ReplyDeleteவாழ்த்துக்கள் தோலும்.