

மரகதவல்லி மீனாட்சி மதுரை நகரில் வாழுகின்றாள்
மங்களம் வழங்கிடும் மகிமை கொண்ட கிளி திருக் கரத்தினிலே
பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் மீனாட்சி உமையே
உயிர்களில் உள்ள உன்னருள் உண்மை உலக மகாசக்தியே
சரண்உனை அடைந்தேன் மீனாட்சி தாயே சக்தி தேவி நீயே
அரண் எனக் காப்பாய் அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே
மங்களம் வழங்கிடும் மகிமை கொண்ட கிளி திருக் கரத்தினிலே
பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் மீனாட்சி உமையே
உயிர்களில் உள்ள உன்னருள் உண்மை உலக மகாசக்தியே
சரண்உனை அடைந்தேன் மீனாட்சி தாயே சக்தி தேவி நீயே
அரண் எனக் காப்பாய் அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்மனுக்காக பிரத்யேகமாக நடைபெறும் விழாக்களில் ஆடி முளைக்கொட்டு விழா.அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி.தீபாராதனை நடைபெறும்...!


விழா நாட்களில் காலை, மாலை இரண்டு வேளையும் அம்மன் கோயிலுக்குள் ஆடி வீதிகளில் உலா வந்து அருட் காட்சி அளிப்பார்..!


அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு, குதிரை, ரிஷபம் என ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வலம் வருவது சிறப்பான விழா.

புஷ்பப் பல்லக்கில் அம்மன் ஆடி வீதிகளில் வலம் வருவார்.
உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும்
நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சி நடைபெறும்.


மீனாட்சி அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவார். ஆடி வீதிகளில் புஷ்ப விமானத்தில் வலம் வருகிறார்.



மல்லாரி' இசை வடிவத்துடன் ஆடி முளைக்கொட்டு உற்சவம் பத்து நாட்கள் திருவிழாவில், ஆடி வீதிகளில் அம்பாள் வலம் வர, இசைக் கலைஞர்கள் கூடவே இசைத்து மகிழ்வார்கள்..
ஒவ்வொரு நாளும், மாலை 6 மணிக்கு, ஒவ்வொரு தாளத்தில் நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் வாசிப்பர்.
மேற்கு கோபுர வாசலில், வெவ்வேறு கலைஞர்களின் தவில் தனி ஆவர்த்தனம் நடக்கும்.
தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத, இந்த பாரம்பரிய இசை நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு ரசிக்கலாம்.

கனக தண்டியல் வாகனத்தில் சயனக் கோலத்தில் வருவது சிறப்பம்சமாகும்.
கனக தண்டியல் வாகனத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன்.

கோலாட்ட அலங்காரத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன்





மதுரை அரசாளும் மீனாக்ஷி என்ற சீர்காழி கோவிந்தரஜனின் பாடல் நினைவுக்கு வந்தது
ReplyDeleteகண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைகிறது படங்கள்
அட...! எங்க ஊர் சிறப்பு... படங்கள் பிரமாதம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeletesuperb post with pictures
ReplyDeleteஅருமையான படங்களுடன் மதுரை மீனாட்சியின் அழகை கண்டேன்.
ReplyDeleteமீனாட்சி மதுரை மட்டும் அல்ல நம் அனைவரையும்
ReplyDeleteஆட்சி செய்கிறாள் தெய்வீகத் திருவதனத்தால் .
அரிய தகவல் . நன்றி !
நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே
ReplyDeleteமீனாட்சி என்ற பெயர் எனக்கு...
என்னும் பாடல் என் நினைவுகளில் நிழலாடுகிறது.
அழகான அருமையான படங்களும் பதிவும்.
மிக்க மகிழ்வாயிருக்கிறது சகோதரி!.
மனம்நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!
1] இந்த நடப்பு 2013ம் ஆண்டின் வெற்றிகரமான தங்களின் 200வது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDelete>>>>>
2] நாளை வெற்றிகரமாக வெளியாகவுள்ள தங்களின் 975வது பதிவுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
3] ’மதுரை அரசாளும் என் அன்புத்தாய் மீனாக்ஷி’ ப்ற்றிய இன்றைய பதிவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் வழக்கம் போல அழகோ அழகு.
முதல் படத்தில் காட்டியுள்ள ’பசுமை மிகுந்த மீனாக்ஷி’ தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளவள்.
>>>>>
4] //புஷ்பப் பல்லக்கில் அம்மன் ஆடி வீதிகளில் வலம் வருவார். உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். //
ReplyDeleteஆடி மாதம் ஆடிஆடிப் பாடிப்பாடி அம்மன் வருவதை கற்பனையில் கண்டுகளித்தேன்.
சுவாமியுடன் மாலை மாற்றும் காட்சியை நினைக்க நினைக்க சந்தோஷமாக ’ஆனந்தமாக’ உள்ளது.
>>>>>
5] //மேற்கு கோபுர வாசலில், வெவ்வேறு கலைஞர்களின் தவில் தனி ஆவர்த்தனம் நடக்கும். தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத, இந்த பாரம்பரிய இசை நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு ரசிக்கலாம்.//
ReplyDeleteதவில் தனி ஆவர்த்தனம் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.
>>>>>
6] கோலாட்ட அலங்காரத்தில் மதுரை மீனாக்ஷி அம்மனும், கடைசியாகக் காட்டப்பட்டுள்ள மூன்று படங்களும் சூப்பர் கவரேஜ்.
ReplyDeleteஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>>
7]
ReplyDelete/கனக தண்டியல் வாகனத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன்/
என்ற வரிகளுக்குக் கீழ் உள்ள படம் திறக்கப்படவே இல்லை. அதன் கீழ் காட்டப்பட்டுள்ள கருப்பு-வெள்ளைப்படம் வித்யாசமாக அழகாக உள்ளது.
>>>>>>
8] இங்கு என்னுடன் இப்போது தங்கியுள்ள என் பேத்தி பவித்ராவின் பிறந்த நாள் என அமர்க்களப்படும் இன்று, அவளின் மற்றொரு பெயரான [என் தாயாரின் பெயரான] மீனாக்ஷி பற்றிய மிகச்சிறப்பான பதிவாகக் கொடுத்துள்ளது, என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteபதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
நன்றியோ நன்றிகள்.
ooooo 974 ooooo
அருமை!
ReplyDeleteமதுரை மீனாட்சியின் ஆடி சேவையை அழகுற பகிர்ந்தைமிக்கு மிக்க நன்றி!
ReplyDeleteAha
ReplyDeleteadiarputham.....
Maduraikku poi Meenakshiyai parthathupol errukku....
Arumai mika arumai....
thanks dear for the very nice pictures and informations.
viji
//7] /கனக தண்டியல் வாகனத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன்/ என்ற வரிகளுக்குக் கீழ் உள்ள படம் திறக்கப்படவே இல்லை. அதன் கீழ் காட்டப்பட்டுள்ள கருப்பு-வெள்ளைப்படம் வித்யாசமாக அழகாக உள்ளது. //
ReplyDeleteஇப்போது தரிஸிக்க முடிகிறது. இரண்டும் ஒன்றே தான் போலிருக்கிறது. முதல் படம் சற்றே சிறியதாக கலரில், அடுத்தது சற்றே அதைவிட பெரியதாக ப்ளாக்+ஒயிட்டில்.
அம்பாள் ஒய்யாரமாகச் சாய்ந்து சயன கோலத்தில். நன்றி, மகிழ்ச்சி. ;)
இப்போதுதான் 'எங்கள் ப்ளாக்'கில் மதுரை பற்றி படித்தேன். இங்கு வந்தால் மதுரை அரசாளும் மீனாட்சி!
ReplyDeleteஅங்கு கற்பனையில் மதுரைக்குப் போனேன். இங்கு உங்கள் படங்களைப் பார்த்து மீனாட்சியையும் தரிசித்தேன்.
என்னவொரு பாக்கியம்!
நல்ல பகிர்வு. ரசித்தேன்.....
ReplyDeleteஅழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteமதுரை மீனாட்சி அம்மனை நாள்முழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.நான் 3தடவை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். தகல்களும் அருமை.நன்றி
ReplyDelete