
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்
ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய லோகேஸ்வராய
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய மமதாரித்ரய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!
ஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள்.
செந்நிற மேனியையும் அல்லது மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச்சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரியும் குடத்தை ஒரு கரத்தால் தாங்கி, ஸ்வர்ணாகர்ஷண பைவர மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலிப்பார்.
பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் அம்பிகை மகா ஸ்வர்ண பைரவி. பொன் சொரியும் குடம் ஏந்தியவள். அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள்பாலிக்கிறார்.
வாழ்க்கையில் துன்பம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்கும் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.
தனச் செழிப்பைத் தரும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.
ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் தன வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை..!
ஒன்பதாவது பவுர்ணமியன்று அவல் பாயசம் நைவேத்தியம் செய்வது சிறப்பு ..
தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னக சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்தனமழை பெய்திடுவான்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு படையலாக அவல் பாயாசம் தயார் செய்து படையலிட வேண்டும்.வழிபாட்டின் முடிவாக அவல் பாயாசத்தை பாதி எடுத்து நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ள வற்றாத செல்வச் செழிப்பை அடையலாம்.

நிறைந்த நன்றிகள் : ஆன்மீகக்கடல்
”ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு” என்ற தலைப்பில் தாங்கள் இன்று கொடுத்துள்ள பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteஸ்வர்ணம் போல ஜொலிக்கிறது.
>>>>>>
”ஸ்வர்ணாகர்ஷண “ என்றால்
ReplyDeleteஎளிதில் கவரக்கூடிய என்ற பொருளா?
அச்சா! பஹூத் அச்சா!!
உங்களின் அன்றாடப்பதிவுகள் எல்லாமே என்னைப்பொறுத்தவரை ”ஸ்வர்ணாகர்ஷணம்” உள்ளவைகள் தான்.
சாதாரண ஆக்ரஷண சக்தி அல்ல.
விட்டு விலகவேமுடியாத, படுவேகமான HIGHEST POWERFUL காந்த சக்தியாக்கும்!
இதை நான் இங்கு சொல்லியுள்ளதற்கே எனக்கு நீங்க அவல் பாயஸம் தரணுமாக்கும்.
ஹுக்க்க்க்கும். ;))))))
ஆஹா .... இதென்ன பிரமாதம், தந்துட்டாப்போச்சுன்னு ஒரு ஆறுதல் வார்த்தை சொன்னா என்னவாம்?
>>>>>
நீங்களே ஒரு ஆன்மிகக்கடல்.
ReplyDeleteதகவல் களஞ்சியமும், கடலுமாகிய உங்களுக்கே தகவல் அளிக்க இன்னொரு ஆன்மிகக்கடலா?
OK .... OK ஆச்சர்யம் தான்.
ஏற்கனவே தாங்கள் இதே தலைப்பில் எழுதியிருந்ததைவிட இதில் மேலும் சில புதிய தகவல்கள் உள்ளன, சந்தோஷ்ம்.
>>>>>
படங்கள் யாவும் வழக்கம் போல அருமை.
ReplyDeleteஆங்காங்கே கொடுத்துள்ள ஸ்லோகங்களும் பயனுள்ளவைகள்.
எல்லாவற்றிற்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 977 ooooo
தேய்பிறை அஷ்டமி அன்று..சொர்ண ஆகர்சன பைரவர்..வழிபாடு, தற்போது பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது..முக்கியமாக திண்டுக்கல் தாடிக்கொம்பு, சவுந்திரராஜ பெருமாள் கோவிலில்!
ReplyDeleteநன்று...வாழ்த்துக்கள்!
ரமேஷ் வெங்கடபதி அவர்கள் சொன்னது போல் தேய்பிறை அஷ்டமி அன்று இங்கு சிறப்பாக நடைபெறுகிறது... படங்கள் அனைத்தும் பிரமாதம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுவர்ண ஆகர்ஷண பைரவரை தொழுவதற்கு உதவியாக பைரவாஷ்டகமும் கொடுத்திருப்பது அருமை!
ReplyDeleteஆலவம் தொழுவது
ReplyDeleteசாலவும் நன்றே
பைரவரை
வழிபடுவோம் - நன்றி
பைரவர் பற்றிய தகவல்கள், ஸ்லோகங்கள், படங்கள் என அத்தனையும் அருமை.
ReplyDeleteஅழகாக அருமையான தெவிட்டாத சத்துநிறைந்த இன்னமுதை இழைத்து வாயினுள் ஊட்டியும்விடுகிறீகள் சகோதரி!
ReplyDeleteஅதை விழுங்காமல் வாயிலேயேவைத்து கெடுகிறேன் பிடி சபதம் என நாமே நம்மை தாழ்த்திக்கக் கூடாது...
சகோதரி! உங்கள் தன்னலமில்லாத தாயன்பும் அற்புத சேவையும் அளப்பரியது.
மிகுந்த மகிழ்ச்சியும் என் மனமார்ந்த நன்றியும் உங்களுக்கு!!!
வாழ்க வளமுடன்!!!
thanks for posting bairavar astagam
ReplyDeleteபடங்கள் மற்றும் குறிப்புக்கள் அருமை...
ReplyDeleteபைரவர் பற்றிய தகவல்கள்,படங்கள் மிக அருமை. நன்றி.
ReplyDeleteஅன்பு சகோதரி! அருமையான பதிவு. ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் மந்திரங்களும் மற்றும் படங்கள் அருமை. தேய்பிறை அஷ்டமி அன்று ராகு காலத்தில் மற்றும் பௌர்ணமி அன்று இரவு 8.00 முதல் இந்த பைரவ அஷ்டகத்தை ஆத்மார்த்தமாக சொல்லவேண்டும். இவரே சனீஸ்வரரின் குரு. பலன் கேட்கவா வேண்டும்.
ReplyDeleteஅன்பு சகோதரி! அருமையான பதிவு. ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் மந்திரங்களும் மற்றும் படங்கள் அருமை. தேய்பிறை அஷ்டமி அன்று ராகு காலத்தில் மற்றும் பௌர்ணமி அன்று இரவு 8.00 முதல் இந்த பைரவ அஷ்டகத்தை ஆத்மார்த்தமாக சொல்லவேண்டும். இவரே சனீஸ்வரரின் குரு. பலன் கேட்கவா வேண்டும்.
ReplyDelete