Thursday, July 25, 2013

புற்றுமண் பிரசாதம்


[gomathiamman.jpg]
வெய்ய பிணிமாற மண் கொடுக்கும் பேரருள் 
எம்கோமான் பணிமாறு காலம் பணித்தேன்- 
தணியாத ஆனந்த வெள்ளத்தில் தழுந்தினேன்'' 

 சிவபெருமாள் புற்றுக்குள் இருந்ததனால் புற்றே தெய்வ 
மகத்துவம் பெற்று இன்று அருமருந்தாகி விட்டது. 

எல்லா செல்வங்களையும் வாரி வழங்கக் கூடிய அன்னை ஆவுடைத்தாய் கோமதி, ஆவினங்களின் நாயகியாகத்திகழ்கிறார்.. . 
பண்டை காலத்தில் ஒருவரது செல்வம் அவரிடமுள்ள பசுக்களின் எண்ணிக்கையை வைத்தே அறியப்பட்டு வந்தது. கோ என்றால் பசு. 
மதி என்றால் தாயாக (பசுக்களின்) இருந்து இயக்குபவர் என்று பொருள் 
கோமதி பெயர் காரணம்
 கோமதி அம்மாள் என்றால் தாயாக இருந்து 
இயக்குபவள் என்று பொருள். 

அதன் காரணமாகவே ஆவுடையம்மன் எனப் பெயர் கொண்டாளாம். 

பசுக்களை மேய்த்து பராமரிப்பது கோமதி அம்பாளின் 
ஆண் ரூபமாகிய கோவிந்தனே. 
அக்காலத்தில் அரசர்கள் ஆயிரமாயிரங்களாக பசுக்களைத் தானம் செய்து வந்த பாண்டிய மன்னர் களை மக்கள் நயினார் என்றே அழைத்தனர். வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் என்று ஆண்டாள் கூறியுள்ளாள். 

சங்கர நயினார் கோவில் எனும் பெயர் அதன் காரணமாகவே
ஏற்பட்டது போலும். 

உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
[sankaralingaswamigal.jpg]
 சங்கரநயினார் கோவிலை ஆவுடைத் தாயாகிய 
கோமதியம்மன் ஆட்சி செய்து அருள் பொழிகிறாள்..
தீர்த்தம் சங்கன் பத்மன் ஆகிய நாகர்களால் வெளிவந்த 
ராகுவின் தாயான சிம்மிகையான புற்றில் வசிப்பதையும், 
தவக் கோலத்தில் நிலை கொண்டுள்ளதையும் 
கோமதி சகஸ்ரநாமத்தில் அறியலாம். 

சங்கரன் கோவில் மண்ணைத் தடவினால் தீராத தோல் நோய்கள்
 பலவும் நீங்குகின்றன. 
மண்ணே பிரசாதமாக மக்களே கோமதியம்மன் கோவிலில் இருந்து எடுத்துச் சென்று நண்பர்கள் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். 

புற்று மண் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கிறது. சில பக்தர்கள் தலைசுமையாக சுமந்து கொண்டு வந்து புற்று மண்ணை கோவிலில் சேர்க்கின்றனர். புற்று மண்ணை எவ்வளவு அள்ளியும் அகழ்ந்தும் பிரசாதமாக வழங்கினாலும் அந்த மண் குறையாத அதிசயம் எப்போதும் நிகழ்கிறது. புற்றுமண் பிரசாதம் தெய்வத் தன்மையும் மருத்துவ குணமும் கொண்டது
சங்கரன் கோவிலில் ஆறு இல்லாததால் கோவிலின் உள்ளே உள்ள தீர்த்தக் கிணற்றில் இருந்து நீரை எடுத்து வந்து நந்திக்கு மட்டும் குடமுழுக்கு செய்யப்படுகிறது. இறைவன் நந்தியில் இருப்பதாக ஐதீகம் என்பதால் நந்திக்கு குடமுழுக்கு செய்வதால் உலகிற்கு சகல பாக்கியமும் கிடைக்கும்.

24 comments:

  1. VERY VERY GOOD MORNING !

    புற்றுமண் பிரஸாதம் வாங்கிக்கொள்ள மீண்டும் வருவேன். கவலை வேண்டாம்.

    >>>>>

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா
    புற்றுமண் பிரசாதம் பதிவு மிக அருமையாக உள்ளது படங்கள் மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. எல்லாப்படங்களுமே அழகாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  4. கோமதியே தான் ஆண் உருவில் வந்த கோவிந்தனா?

    நல்ல தகவல்.

    >>>>>

    ReplyDelete
  5. *வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம்.*

    இனிமையான ஆண்டாள் பாசுரம் ;)))))

    >>>>>>

    ReplyDelete
  6. 5/5]

    நோய் தீர்க்கும் சங்கரனார் கோயில் புற்று மண் பிரஸாதம் பற்றிய நல்ல தகவல்களுடன் கூடிய பதிவுக்கு நன்றிகள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இன்னும் 18+1=19 பதிவுகளே உள்ளன.

    அதன் பிறகு ஒரே ஜாலி தான். ;)

    ooooo 981 ooooo

    ReplyDelete
  7. அம்பாளின் அருள் அனைவர்க்கும் கிட்டட்டும் .புற்று மண் அளிக்கும் புதமை அறிந்தேன் மனம் மகிழ்ந்தேன் .அலங்கார சொரூபியாக அம்பாளின் திருக்கோலம் (இறுதியாக உள்ள படம் )மனத்தைக் கொள்ளை அடிக்கின்றது .அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  8. கோமதியம்மன் குறித்த விளக்கமும்
    நயினார் குறித்த விளக்கமும் புதிதாக
    அறிந்துகொண்டேன்
    திருவுருவப் படங்களுடன் பதிவு
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சில நாட்களாக உங்கள் பதிவிற்கு வர இயலவில்லை. பொறுக்கவும்.

    புற்று மண் எங்கள் குலத்தில் கல்யாணத்தில் மணவறை அமைக்கும்போது பயன்படுத்துகிறோம்.

    ReplyDelete
  10. சிறப்பான படங்கள் & தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. சங்கரன் கோவில் சிறப்பு அறிந்துகொண்டேன். நல்ல தகவல்கள் & சிறப்பான படங்கள்.நன்றி.

    ReplyDelete
  12. ஆடிமாத அம்மாவாசைக்குபிறகு வரும் பஞ்சமி கருடபஞ்சமி. அன்று புற்றுமண்ணை உடன்பிறந்தவன் வலது தோளிலும், காதிலும் வைத்து பூஜை செய்து நீண்டகாலம் வாழ பிரார்த்தனை செய்வது வழக்கம்.

    சங்கரன் கோவிலில் என்னென்ன கிழமைகளில் தங்கினால் என்னன்ன பலன் என்று தம்பி ஒரு லிங்க் அனுப்பியிருந்தார். தேடிபார்த்து தருகிறேன்

    ReplyDelete
  13. http://temple.dinamalar.com/news_detail.php?id=20813

    ReplyDelete
  14. http://temple.dinamalar.com/news_detail.php?id=20813

    ReplyDelete
  15. கோமதி அம்மன் பெயர் விளக்கம் இன்று தான் தெரிந்து கொண்டேன். எங்கள் வீட்டிலும் நான் சிறு பிள்ளையாக இருந்த போது அதிகமாக பசுக்கள் இருந்தன. அவற்றை பராமரிக்க தனி ஆட்களே இருந்தார்கள். இன்றும் அந்த இடம் எங்கள் வீட்டில் இருக்கிறது. மண் சுமந்த படங்களா தலையில் சுமந்த படி இருக்கும் படங்கள்.. வெகு அழகு.

    ReplyDelete
  16. ஆவுடை அம்மன் அருளது ஓங்கிட
    நோவிடை காணுமே நீங்கி!

    அத்தனையும் மிகமிக அருமை!

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. எங்கள் திருநெல்வேலி பக்கத்தில் ஆவுடைஅம்மாள். கோமதி என்று நிறைய பேருக்கு பேர் வைப்பார்கள். பேரின் விளக்கம், படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  18. சிறப்பான பகிர்வு. என் பாட்டிக்கு சங்கரன் கோவில் தான். பாட்டியின் பெயரும் கோமதி தான்.

    ReplyDelete
  19. பகிர்வு அருமை.
    படங்கள் அழகு.

    ReplyDelete
  20. புற்றுமண் பிரசாதம் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும், இன்றுதான் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  21. புற்று மண் பிரசாதம் பற்றிய தகவல்களுக்கு நன்றி;

    படங்கள் அருமை.

    ReplyDelete
  22. Good report. I'm also from sankarakovil

    ReplyDelete
  23. Good report. I'm also from Sankarankovil

    ReplyDelete
  24. Good report. I'm also from sankarakovil

    ReplyDelete