சவுந்திரராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, தாடிக்கொம்பு
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஆடித்திருவிழாவில்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும் ...
ஸ்ரீவிஷ்வக்சேனர், நம்மாழ்வார், ஸ்ரீரெட்டைவிநாயகர், ஸ்ரீஹயக்ரீவர், தசாவதார மூர்த்திகள், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்கின்றனர்.
ஸ்ரீரெட்டைவிநாயகர்
தாயாரின் திருநாமம்- ஸ்ரீகல்யாண சௌந்தரவல்லி.
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மிகவும் விசேஷம்!
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!
தாடிக்கொம்பு ஆலயத்தில், இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் கோயிலின் நடை சார்த்துகிறபோது, கோயில் சாவியை பைரவரின் திருப்பாதத்தில் வைத்து வணங்குவது வழக்கத்தில் இருக்கிறது ....
தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவொருமாதமும் தேய்பிறை அஷ்டமியின் முதல் நாள் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜை ஐந்து கால பூஜையாக நடத்தப்பட்டு வருகிறது .
இதன் பின்னர் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரவருக்கு மலர் மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளுவது கண்கொள்ளாக்காட்சி ..!
சவுந்திரராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, தாடிக்கொம்பு
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள 16 கரங்கள் கொண்ட சக்ரத்தாழ்வார் சிற்பம் சிறப்புவாய்ந்தது ,,,.
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தாடிக்கொம்பு. சிற்ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில் விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில் இது!
lamps glowing at Sri Soundararaja Perumal Temple at Thadikombu near Dindigul
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_19.html
சிற்பக் களஞ்சியம் தாடிக்கொம்பு..
VERY GOOD MORNING !
ReplyDeleteதாடிக்கொம்பில்
ஆடித்திருவிழா !!
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!!!!!
சரியான தலைப்’பூ’ ;)))))
இருப்பினும் ’தாடி’ இல்லாமல் சுத்தமாக [பருப்பு தொகையல் போல்] ஷேவ் செய்துகொண்டு பிறகு வருகிறேன் ஃப்ரெஷ்ஷாக !
>>>>>
பலமுறை செல்லும் கோவில்... படங்கள் + தகவல்கள் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதாடிக்கொம்பு - பெயரே விசித்திரமாக உள்ளது. இதுவரை கேள்விப்படாத திருத்தலம். சிற்பங்களும் கோபுர அழகும் கண்ணைக் கவர்கின்றன. வழக்கம்போலவே அழகானப் படங்களுடன் அருமையானப் பதிவு. நன்றி மேடம்.
ReplyDeleteதங்களின் பழைய பதிவினைப்பற்றி இங்கு கொடுத்துள்ள இணைப்பின் மூலம் மீண்டும் அதைக் கண்டு களித்து வந்தேன்.
ReplyDeleteஅதில் நான் எழுதியுள்ள ஒருசில பின்னூட்டங்களை மீண்டும் நீண்ட நாட்களுக்குப்பின் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இதோ:
*****
தாடியும் நீளம், கொம்பும் நீளம்.
நீண்ட வர்ணனை. நல்ல படங்கள்.
ஹயக்கீரிவர், பைரவர், சக்கரத்தாழ்வார், தலவிருட்சத்தில் சைவ வைணவ ஒற்றுமை என் தொடர்ந்து அசத்துகிறீர்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
*****
கொம்பினில் மாட்டிய தாடி போல நாங்கள் தாடிக்கொம்பு சிற்பக்களஞ்சியத்தில் உங்களிடம் சிக்கியுள்ளோம்.
அனைத்துமே அருமை.
தொடர்ந்து அசத்துங்கள்.
அசராமல் நாங்களும் உங்களுடனே வருகிறோம்.
வாழ்த்துக்கள்.
*****
>>>>>>
// தாயாரின் திருநாமம் - ஸ்ரீ கல்யாண சௌந்தரவல்லி. //
ReplyDeleteமிகவும் அருமையான செளந்தர்யம் மிக்க நித்ய கல்யாண தேவி அம்பாளுக்கு அடியேனின் வந்தனங்கள்.
>>>>>
//ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்! //
ReplyDeleteசகல செல்வங்களும் தாடிக்கொம்பினிலும், கோவையிலும் மட்டுமல்லாது, [திருச்சி முதலிய] உலகின்அனைத்துப்பகுதிகளிலும், அனைவர் வீட்டிலும் குடிகொள்ளட்டும்,
அதற்கு என் [’ஸ்ரீ கல்யாண சௌந்தரவல்லி’] அம்பாளும், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் அருள் புரியட்டும்...
>>>>>
இந்தப்பதிவிலும் தங்களின் பழைய பதிவினிலும் உள்ள படங்களும், குறிப்பாக சிற்பங்களும் மிகவும் அழகாக உள்ளன.
ReplyDeleteஸ்பெஷல் பாராட்டுக்கள்.
அன்பான நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
இன்னும் ஒரு பக்ஷம் [15 நாட்களே] பாக்கியுள்ளது. ;)
பிள்ளையாரப்பா .... !
நல்லபடியா நடுவில் விக்னம் ஏதுமின்றி வெற்றி விழா நடக்கணுமப்பா.....
சங்கடங்கள் தீர, சங்கடஹர சதுர்த்தியன்று, சதிர் தேங்காய் வழக்கம் போல உனக்கு அடிச்சுடரேண்டாப்பா.....
ooooo 985 ooooo
தாடிக்கொம்பு பெருமானை தங்களின் அழகிய பதிவில் தரிசித்து மகிழ்ந்தேன்! விளக்கமும் படங்களும் சிறப்பு! நன்றி!
ReplyDeleteதலைப்பு வித்தியாசமாக இருக்கிறது.. ஸ்ரீ சௌந்திரராஜ பெருமாள் தரிசனம் படங்கள் மூலம் கிடைக்கப்பெற்றோம்.. அமுதுண்டது போல அருமையான தரிசனம்பா....
ReplyDeleteஅற்புதமான படங்கள்... அழகிய விளக்கங்கள்....
அடுத்த முறை திண்டுக்கல் போகும்போது தனபாலன் சாரை தான் கூட்டிட்டுப்போக சொல்லனும் இந்த கோயிலுக்கு...
சௌக்கியமாப்பா நீங்க?
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
தாடிக் கொம்பு-ஆடித்திருவிழா---தலைப்பே ஒரு கவிதையாக....
ReplyDeleteபின் வரும் பதிவும் படங்களும் கவிதை அனுபத்தை உயர்த்த...அருமை!
அம்மா தாயே...எத்தனை காலங்களின் பின் வந்தாலும் அதே பொலிவு.ஆன்மீகச் சிந்தனைகள்.மனதை ஒருநிலைப்படுத்துகிறது.சுகம்தானே ஆன்மீகத் தோழி !
ReplyDeleteஅற்புதமான கோவில் பற்றிய தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஇதுவரை கேள்விப்படாத தலம்! அழகிய சிற்ப வேலைப்பாடுகள்! அறியத்தந்தற்கு அன்பு நன்றி!!
ReplyDeleteதாடிக்கொம்பு கோவில் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதுவரை போனதில்லை. வீட்டிலேயே உட்கார்ந்தபடியே தரிசனம் செய்ய வாய்ப்பு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!
ReplyDeleteதீப ஒளியில் ஒளிரும் கோவில் கண்ணுக்கு விருந்து.
புதிய பல தகவல்களுடன் மிக அருமையான பதிவும் படங்களும்!
ReplyDeleteபகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
wow great pictures
ReplyDeleteதாடிக் கொம்பு கோவில் போக வேண்டும் என்று பல நாட்களாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எப்பொழுது அந்த சுந்தரராஜ பெருமாள் நினைகிறாரோ? அதுவரை காத்திருக்க வேண்டியது தான் என்று நினைத்திருந்தே. அதற்குள் உங்கள் பதிவால் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteசிற்பிகள் புது கோவிலுக்கு சிற்பங்கள் செய்ய ஒப்பந்தம் போடும்போது "தாரமங்கலம், தாடிக்கொம்பு நீங்கலாக" என்றுதான் ஒப்பந்தம் போடுவார்களாம். இந்த இரண்டு கோவில்களின் சிற்பங்களைப் போல் யாரும் செய்ய இயலாதாம்.
ReplyDeleteநான் மணப்பாறையில் வேலை பார்த்த போது தாடிக்கொம்பு கோயிலைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். சென்றதில்லை. இப்போது உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteதாங்கள் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவங்களா??
ReplyDelete