உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
முருகன் தியான கோலத்தில் திகழும் திருப்பந்துறையில் திக்கு வாய் உள்ளவர்கள் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் பிரம்மன் படைப்புத் தொழிலை செய்துகொண்டிருந்ததை முருகப்பெருமான் தெரிந்துகொண்டார்.
படைக்கும் தொழிலை பிரம்மனிடமிருந்து பறித்துவிட்டார்.
சிவபெருமான் இதை கண்டித்தார்.
அப்படியானால் அந்த பிரணவத்திற்குரிய பொருளை சொல்லிவிட்டு என்னிடமிருந்து மீண்டும் அத்தொழிலை பெற்றுக்கொள்ளட்டும் என்றார் முருகன்.
இறைவனுக்கே அந்த பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. எனவே சுவாமிமலை திருத்தலத்தில் தந்தைக்கே பொருளை உரைத்தார் மகன்.
பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து விட்டார் முருகன். பொருள் தெரியாமல் படைப்புத் தொழிலை ஏன் செய்கிறாய் என்றும் ஏளனம் செய்ததால் முருகனின் வாய் ஊமையாகி விட்டது.
தனக்கு மீண்டும் பேச்சு வர, திருப்பந்துறை என்ற தலத்திற்கு வந்து மீண்டும் பேச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக லிங்கம் ஸ்தாபித்து தவத்தில் ஈடுபட்டார்.
அந்த லிங்கமே 'சிவானந்தேஸ்வரர்' ஆயிற்று.
சிவ வழிபாட்டுக்கு பிறகு பிறகு முருகனுக்கு பேச்சு வந்தது.
இங்கு முருகன்தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சிலை மிகவும் பழமையானது.
கோயிலின் எதிரே மங்களதீர்த்தம் இருக்கிறது.
நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க,
மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.
கோயில் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
முருகன் சுவாமிமலையிலிருந்து தவமிருக்க வந்தபோது விநாயகர் இரட்டை வடிவெடுத்து அவருக்கு பாதுகாப்பாக வந்ததாகவும், இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஐதீகம்.
முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.
முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி, மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.
காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் ரோட்டில்உள்ளது. 20 கி.மீ. தூரம் ..
அருகில் உள்ள கோயில்கள் திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி ப்ரித்தியங்கரா தேவி கோயில்.
படங்களும் தகவலும் அருமை.
ReplyDeleteதந்தைக்குப் பிரணவத்தின் பொருளுரைத்துத் தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற எம் பெருமான் அமர்ந்த தளப் பெருமை சொல்லும் ஆக்கம் கண்டு மனம் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteசிறப்பான படங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையானப் படங்கள் மற்றும் தகவல்கள் நன்றி சகோ
ReplyDelete’திருபம்தரும் திருப்பந்துறை’ ஸ்வாமி பற்றி அழகான பதிவு.
ReplyDeleteஅனைவர் வாழ்விலும் செயலிலும் நல்ல திருப்பங்கள் திருப்தியாக ஏற்படட்டும்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 930 ooooo
முருகன் என்றாலே அழகன் தான்.... அருமையான படங்கள்.. நன்றி...
ReplyDeleteஇரட்டை பிள்ளையார் படம் அழகு. ஆறு முக தாமரை வடிவப்படமும் அழகோ அழகு. விளக்கங்கள் சிறப்புங்க.
ReplyDeleteஅழகன் முருகன். அழகான பதிவும் படங்களும். முருகனுக்கே வாய் பேசமுடியாமல் போனது அறியாத வரலாறு.
ReplyDeleteஅத்தனையும் சிறப்பு. பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!
I am expecting a great thruppam in my life dear....
ReplyDeleteMuruga do it for me dear....Pl.
viji
புதிய தகவல்கள் - புதுமையாக உள்ளது. காது நீளம், குடுமி -
ReplyDeleteஎதுவும் சாத்தியம் என்பதற்கு இது உதாரணமோ.
இனிய வாழ்த்து!.
மிக நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
அழகு...அழகு.... அனைத்தும் அழகு.
ReplyDeleteசிறப்பான செய்திகளுடன் நல்ல தரிசனம்!
ReplyDeleteசிறப்பான செய்திகளுடன், அழகான படங்களை இணைத்துள்ளீர்கள்...
ReplyDeleteவாழ்த்துகள்.
திருப்பம் தரும் திருப்பந்துறை பற்றிய தகவல்கள் உபயோகமானவை. உங்கள் தயவில் எல்லா கோவில்களையும் உட்கார்ந்த இடத்திலேயே சேவித்து விடுகிறோம். உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்!
ReplyDeleteநல்ல தகவல்.....
ReplyDeleteஎல்லாக் கோவில்களையும் பார்க்க நினைத்தாலும் ஒரு ஜென்மா நிச்சயம் போதாது..... பார்க்க முடிந்தவற்றை பார்த்திடலாம்....