Sunday, June 23, 2013

மாங்கனித்திருவிழா








உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினால் காரைக்கால் பேய்சொற் - பருவுவார்
ஆராத அன்பினோடு அண்ணலைச்சென்(று) ஏத்துவார்
பேராத காதல் பிறந்து. - 
என அற்புதத்திருவந்தாதியில்  காரைக்காலம்மையார் 
ஈசனைப் போற்றுகிறார்..

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய் பிறவா யாக்கைப் பெருமானாகத் திகழும்  பிறப்பற்ற இறைவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்றவர்  காரைக்கால் அம்மையார்.

காரைக்கால் அம்மையாரின் அமுது படையல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் 
ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று "மாங்கனித் திருவிழாவாக" காரைக்காலில்  சௌந்தராம்பிகா உடனமர் கைலாச நாதர் ஆலயத்தில் நடைபெறுகின்றது 

காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் சிறப்பான இடத்தை பெற்றவர். 

தனதத்தர் என்ற வணிகருக்கு மகளாகப்  பிறந்த  புனிதவதியார் சிறுவயது முதலே சிவ பக்தி கொண்டிருந்த அவளை, பரமதத்தன் என்ற வணிகனுக்கு மணமுடித்து கொடுத்தனர்.. 

அம்மையாரின் சிவபக்தியை சோதிக்க இறைவன் சிவணடியார் கோலத்தில் அம்மையார் வீட்டுக்கு அன்னம் கேட்டு சென்றார்.

அம்மையாரும் சிவனடியாருக்கு உணவிட்டு கூடவே கணவர் கொடுத்த இரு மாங்கனிகளில் ஒன்றை அளித்தார்.

பரமபக்தர் வீட்டுக்கு வந்து சாப்பிட தயாரானார்.அப்போது தான் அனுப்பிய மாங்கனியை கேட்டார்.அதனை சாப்பிட்ட அவர் ருசியில் திகைத்து மற்றொரு மாங்கனியையும் கேட்கவே புனிதவதியார் இறைவனை நினைத்து வேண்டினா.

மற்றொரு கனியை தரும்படி கேட்கவே புனிதவதியார் மீண்டும் இறைவனிடம் வேண்டிப் பெற்ற கனியை பரமபக்தரின் கையில் கொடுத்த போது அது மறைந்ததால் திகைத்த பரமதக்தர் தனது மனைவி தெய்வப்பிறவி அவருடன் குடும்பம் நடத்தி விட்டோமே என்று மனம் கலங்கி பாண்டிய நாட்டுக்கு  சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மனைவி  பிள்ளைகளுடன் சென்று புனிதவதியார் காலில் விழுந்து வணங்கினார்.

கணவரின் கருத்தை உணர்ந்த புனிதவதியார் இறைவனிடம் தனது உருவத்தை பேய் உருவமாக்க வேண்டி பேய் உருவம் கொண்டு கயிலாய மலைக்கு தலையால் நடந்து சென்ற போது தாய் தந்தையற்ற ஈசன் புனிதவதியாரை அம்மையே என்று அழைக்க அம்மையாரோ ஈசனை அப்பா என்று அழைத்தார்.
அன்று முதல் புனிதவதியார் காரைக்கால் அம்மையார் என்று போற்றப்படுகிறார்.
[Gal1][Gal1]
காரைக்காலில் வாழ்ந்து வரலாறு படைத்தவருக்கு
காரைக்காலில் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
[Gal1]
கோயிலில் அமர்ந்த நிலையில் திருமேனியுடன் வீற்றிருந்து
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் 
ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோயிலில் 
மாங்கனித்திருவிழா மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.


ஆனி  மாத பவுர்ணமியன்று சிவன், 
பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார். 

காரைக்காலில் மாங்கனித்திருவிழாவில் வெள்ளை சாத்தி ஆனந்தத் தாண்டவத்துடன் புறப்பாடு கண்டருளி, ருத்ராபிஷேகம் கொண்டருளி, பிச்சைத்தேவராக ஐயன் வரும் அழகுத்திருக்கோலம் ..!

மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவார்கள்.. காரைக்காலில் ஆனி பௌர்ணமியன்று மாங்கனி மழைதான்...

பிக்ஷாடண மூர்த்தி "வெள்ளை சாத்தி புறப்படும்" நிகழ்ச்சியில் முழுதும் மல்லிகைப்பூவினால் அலங்கரிக்கப்பட்ட பிக்ஷாடணர், கையில் சூலத்துடனும், பாம்பு கழுத்தில் தொங்க சர்வ அலங்காரத்துடன், தாருகாவனத்தில் ரிஷிகளின் கர்வத்தை அடக்கியபின் ஆடிய ஆனந்தத்தாண்டவமாடி கோவிலை சுற்றி ஆடி வரும் அழகே அழகு. 

 நம் மனத்தில் உள்ள அழுக்கு களைந்தால் இறை தரிசனம் காணலாம் என்பதை விளக்குவதே வெள்ளை சாத்தி புறப்படுதலின் தாத்பரியம்.

ஊர்வலத்தின் போது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக மக்கள் கூடை கூடையாக மாங்கனிகளை வீட்டின் கூரைகளிருந்து வீசுகின்றனர்.

அந்த மாங்கனிகள் இறைவனின் பிரசாதம் என்பதாலும் அக்கனியை உண்பவர்களின் குழந்தை இல்லா குறை நீங்கும் என்பதாலும் அதை பிடிப்பதற்காக அனைவரும் போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுவது
 வேறு எத்திருக்கோவிலிலும்  காணக்கிடைக்காத காட்சி. .

எழில் ஒயிலாக சாய்ந்து நின்று தோளில் திரிசூலத்தை தாங்கி, 
மோகனப் புன்னகையுடன் தோளில் பாம்பு தொங்க ஐயன் 
அளிக்கும் அழகு அருட்கோலம்.. 
திருக்கோவில்களின் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மாலை 
பிக்ஷாடண்ர் உற்சவம் என்னும் இரவலர் கோலவிழா ...



14 comments:

  1. சிறப்பான திருவிழா... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நம் மனதில் கறுமை எனும் அழுக்கை களைந்து விட்டால் இறைக்காட்சி கிடைக்கும் என்பதே வெள்ளைசாற்றி வருவதின் தாத்பரியம் என்பதை அறிந்து மகிழ்ச்சி.
    மாங்கனி மழையில் நனைந்து இருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்.
    இன்று உங்கள் பதிவில் கண்டுகளித்தேன். மகிழ்ச்சி, நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்...
    மாங்கனித் திரு விழா பற்றி மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்....
    நன்றி...

    ReplyDelete
  4. மாங்கனித் திருவிழா போக வேண்டும் என்று எண்ணுவதோடு சரி. உங்கள் பதிவைப் பார்த்து திருப்தியடைந்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. thanks for sharing this important information about mango prasadam

    ReplyDelete
  6. இந்த ஆண்டின் வெற்றிகரமான 175வது பதிவுக்குப்பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    இன்றைய பதிவு மாங்கனியாக இனிக்கும் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    ”போன்ஸாய் மரங்கள்” பற்றிய பதிவுக்கு இன்றைய வலைச்சரத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளதற்கு என் அன்பான இனிமையான மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

    வாழ்க!

    தாங்கள் நாளை வெளியிட உள்ள வெற்றிகரமான 950வது பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ooooo 949 ooooo

    ReplyDelete
  7. மாங்கனித்திருவிழா பற்றி அறிந்து மனம் மகிழ்வதோடு ஞாபகம் வருதே... என ஊர் நினைவு எனக்கு வந்துவிட்டது சகோதரி!

    அழகிய படங்கள். நல்ல பதிவு. அருமை!
    பகிர்விற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  8. மாங்களி, காரைக்காலம்மையார் பாடசாலைப் படிப்பை நினைவு படுத்தியது.
    மிக நன்றி நல்ல பதிவிற்கு.
    இனிய வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. மாங்கனிப்பதிவு மாங்கனியாகவே இருக்கு.

    ReplyDelete
  10. மாங்கனி திருவிழா பற்றி முதல் முறையாகத் தெரிந்து கொண்டேன்.
    காரைக்கால் அம்மையாரின் தெய்வ பக்தி யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

    ReplyDelete
  11. காரைக்காலம்மையாரின் பதிபக்தியும் விஞ்சிய இறை பக்தியும்... சிலிர்க்கச் செய்பவை. இக்கதை கேட்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும்... பசியென வந்தவருக்கு தாய்மையோடு உணவளித்த அவர், அவருக்கான இறையருளில் மிரண்டு கணவர் வேறொரு பெண்ணை மணந்திட, எஞ்சிய காலம் கழிக்க, தன தோற்றத்தில் கிழப்பருவம் கேட்ட அவ்வையை விஞ்சி பேய்
    வேடம் விரும்பி ஈசனை அடைய எத்துணை மனோதிடம் பெற்றிருப்பார்... நாமெல்லாம் சின்ன சின்ன இடர்களுக்கும் சோர்ந்து, பிதற்றி, பரிதவித்து...

    ReplyDelete
  12. சரியாக மாங்கனித் திருநாள் ஆனி பௌர்ணமியன்று பதிவிட்டிருக்கிறீர்கள் நன்றி.

    ReplyDelete
  13. அழகியபடங்களுடன் மாங்கனித்திருவிழாத்தகவல் அருமை. நன்றிகள்.

    ReplyDelete
  14. I'm really impressed with your writing skills as well as with the layout on your blog.
    Is this a paid theme or did you modify it yourself?
    Either way keep up the excellent quality writing, it's rare to see a great blog like this one nowadays.


    Feel free to surf to my homepage :: free skype credit code

    ReplyDelete