






உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உலக சுற்றுச் சூழல் தினத்தின் பிரதான நோக்கமாகும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் பற்றி கலந்துரையாடப்பட்டடு ஜுன் 5ஆம் நாள் உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்ப்பட்டது.
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனஉயிரினங்கள் ,, கார்ருமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களாகும்.



மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது.

இயற்கைச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும்.
மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் உயிர்வாழ இயலாது
மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான்.
பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது.
எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன.
மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.
சுற்றுச்சூழலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது..
அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.







அனைவரும் உணர வேண்டிய கருத்துக்கள் அம்மா... படங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
மிகமிக சிரத்தையுடன் நீங்கள் சேகரித்து அளிக்கும் படங்கள் ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறது. சிறப்பானதொரு தகவல் மற்றும் நல்ல கருத்துக்களுடன் வந்த இந்தப் பதிவு வெகு ஜோர்!
ReplyDeleteகரம் சேர்ப்போம்,நன்றி
ReplyDeleteஆஹா அற்புதம்.இதிலேயும் கலக்கீடீங்க.இவ்வளவு சிறப்பா நிச்சயம் யாராலும் சேகரிக்க முடியாது.வாழ்த்துக்கள் தொடருங்கள்
ReplyDeleteமிகமிக அவசியமான அவசரமான அழகான விஷயம் சகோதரி!
ReplyDeleteஅனைவரும் உணர அகிலம் சிறக்கும்!
அழகிய படங்கள் + பதிவு!
பகிர்தலுக்கு மிக்க நன்றி!
Aha very nice pictures.
ReplyDeleteVery nice write up.
viji
மிகச்சிறப்பான பதிவுக்கும், பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDeleteமுதல் படமும், கடைசி படமும், கடைசிக்கு முந்திய படமும் மிகவும் பிடித்துள்ளன.
ooooo 931 ooooo
great & nice pictures.
ReplyDeletevishwa.
great & nice pictures.
ReplyDeletevishwa.
நாம் எல்லோருமே உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
ReplyDeleteநம்மைபோலவே தாவரங்களும், விலங்குகளும் இங்கு வாழ வேண்டியவைகளே என்று உணர்ந்து அவைளை அழிக்காமல் காக்க வேண்டும்.
அருமையான பதிவு!
கண்களுக்கு குளிர்ச்சியான படங்கள் மனதை கொள்ளை கொண்டு போகிறது. நன்றி
ReplyDeleteசுற்றுச் சூழல் தின வாழ்த்துகள் அனைவருக்கும்...
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை...
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விசயத்தைப் பல தகவல்களுடன் தந்ததற்கு நன்றி..ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று பள்ளியில் மரம் நடு விழா இருந்தது நியாபகம்.
ReplyDeleteஉங்கள் வலைத்தளத்தை நான் சுற்றி பார்த்தேன் படங்கள் மிகவும் அழகு
ReplyDeleteநல்ல பகிர்வு..... சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை.....
ReplyDelete