







"யத்ர யத்ர ரகுனாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருத மாஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் ராக்ஷஸாந்தகம்'
என்றபடி, எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் இருந்துகொண்டு ராம நாம சிரவணம்
செய்பவரானவரும் அசாத்தியமான சாதனைகளைப் புரிந்தவருமான
ஸ்ரீ ஆஞ்சனேயமூர்த்தியை பச்சைக்கிளிகளும் வணங்கிப் பரவசப்படும் ஆலயம் பஞ்ச்குயான் மந்திர் என்னும் அனுமன் ஆலயம் ...




மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் அருகில் உள்ள பஞ்ச்குயான் மந்திர் என்ற இடத்தில்அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ஹனுமன் கோயில் “பஞ்ச்குயான் ஹனுமன் மந்திரில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையிலான பச்சைக் கிளிகள் நாள்தோறும் வருகின்றன.
கோயில் வளாகத்திற்குள் சிறிய சிவன் கோயிலும் அமைந்துள்ளது.

மனிதர்கள் மட்டுமல்லாது பச்சைக் கிளிகள் கூட கடவுள் மீது ஏராளமான பக்தி கொண்டிருப்பதை அறியத்தரும் ஆலயம் ....

கடந்த பல வருடங்களாக பச்சைக் கிளிகள் இங்கு வருவதாகக் கோயிலில் வசிக்கும் துறவிகள் கூறுகின்றனர்.
நாள்தோறும் 4 ஆயிரம் கிலோ தானியங்கள் பச்சைக் கிளிகள் உண்பதற்காக பரப்பப்படுகின்றன.



தானியங்களை உண்பதற்கு முன்பு ஒவ்வொரு கிளியும் தனது தலையை ஹனுமன் சிலையை நோக்கித் திருப்பி வழிபடுகிறது.
பிறகு மேற்குப் புறமாகத் திரும்பி தானியத்தைக் கொத்தித் தின்கிறது. பச்சைக் கிளிகளின் இந்தப் பக்தியைக் கண்டு அனைவரும் வியக்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டிற்குப் பிறகு பிரசாதம் பெற்றுச் சாப்பிடும் அதே நேரத்தில் பச்சைக் கிளிகளும் தானியத்தை உண்ணத் துவங்குவது, ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வாக வியக்க வைக்கிறது. பச்சைக் கிளிகளின் பக்தியைக் காண பரவசம் பரவுகிறது ..

பச்சைக் கிளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், 3,000 சதுர அடிபரப்பளவுள்ள கான்கிரீட் கூரையை சில பக்தர்களின் உதவியுடன் கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது.



தினமும் காலை 5.30 முதல் 6.00 மணி வரையும், மாலை4 முதல் 5 மணி வரையும் கான்கிரீட் தளத்தின் மீது தானியங்கள் பரப்பப்படுகின்றன.
சுமார் 1 மணி நேரத்தில் தானியங்கள் முழுவதையும் கிளிகள்
உண்டு விடுகிறதாம் ..























அருமையான கிளிகள் பற்றியப் படைப்பு
ReplyDeleteஅழகியப்பச்சை கிளிகள் தரை விரிப்பு
அசந்து விட்டேன் இந்த படைப்பால்
அடைந்து விட்டேன் இன்றும் மகிழ்வாய்
ஆகா... ஆகா... படங்கள் அவ்வளவு அருமை... வாழ்த்துக்கள் அம்மா... அறியாத தகவலுக்கும் நன்றி...
ReplyDeletewow great pictures of parrot
ReplyDelete"பச்சைக் கிளிகள் பரவும் பக்த அனுமன் ..!"
ReplyDeleteஆஹா, எப்படி எப்படி எப்படி ...... ?
இப்படியொரு அழகான பதிவினைக்கொடுத்தீர்கள் ? ;)))))))
சும்மா தூள் கிளப்பிட்டீங்கோ!
கையைக்கொடுங்கோ, என் கண்களில் ஒத்துக்கொள்ளணும்!
>>>>>>>
ReplyDelete"யத்ர யத்ர ரகுனாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருத மாஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் ராக்ஷஸாந்தகம்'
என்றபடி, எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இருந்துகொண்டு ராம நாம சிரவணம் செய்பவரானவரும் அசாத்தியமான சாதனைகளைப் புரிந்தவருமான ஸ்ரீ ஆஞ்சனேய மூர்த்தியை பச்சைக்கிளிகளும் வணங்கிப் பரவசப்படும் ஆலயம் பஞ்ச்குயான் மந்திர் என்னும் அனுமன் ஆலயம் ...//
அதிசயமான அழகான அபூர்வமான தகவல் ...
எங்கள் தகவல் களஞ்சியத்திடமிருந்து ;)))))
>>>>>>>>>
கூட்டம் கூட்டமாக பச்சைக்கிளிகளை இப்படிக் காட்டி அசத்தியிருப்பது, பச்சை கம்பளமோ, பசுமையான பஞ்சு மெத்தையோ விரித்தது போல மிக அழகாக உள்ளது.
ReplyDeleteஅருமையான படத்தேர்வுகள்.
இது உங்களால் மட்டுமே முடியும்.
வேறு ஒரு பயலாலும் முடியாதுங்க!
>>>>>>
ReplyDeleteசனிக்கிழமைக்கு ஏற்ற, வழக்கமான ஹனுமனைப்பற்றிய பதிவாக இருப்பினும், அந்தப் பச்சைக்கிளிகளின் கூட்டத்தால், பதிவு மேலும் மேலும் மெருகூட்டப்பட்டு மிகுந்த சுவாரஸ்யம் அளிப்பதாக அமைந்துள்ளது.
மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
>>>>>>>
ReplyDelete//தானியங்களை உண்பதற்கு முன்பு ஒவ்வொரு கிளியும் தனது தலையை ஹனுமன் சிலையை நோக்கித் திருப்பி வழிபடுகிறது. //
ஆஹா! ஆஹா! ;)
//பிறகு மேற்குப் புறமாகத் திரும்பி தானியத்தைக் கொத்தித் தின்கிறது. பச்சைக் கிளிகளின் இந்தப் பக்தியைக் கண்டு அனைவரும் வியக்கின்றனர். //
பதிவினில் பார்த்தாலே வியக்க வைக்கிறதே, எனக்கு மயக்கமே வரும் போல உள்ளதே.
நேரில் கண்டால் ..... கேட்கவா வேண்டும்.
அதிசயம் .... ஆனால் உண்மைத் தகவல்கள்.
தங்களின் தனிச்சிறப்புக்கோர் எடுத்துக்காட்டு அல்லவா!
ஹல்வா போல, எனக்கு இனிக்கிறது, இந்தச்செய்திகள். ஸோ ... ஸ்வீத்த்த்.
>>>>>>>
ReplyDelete//கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டிற்குப் பிறகு பிரசாதம் பெற்றுச் சாப்பிடும் அதே நேரத்தில் பச்சைக் கிளிகளும் தானியத்தை உண்ணத் துவங்குவது, ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வாக வியக்க வைக்கிறது. பச்சைக் கிளிகளின் பக்தியைக் காண பரவசம் பரவுகிறது .. //
ஆஹா, மிகவும் அற்புதம். திருக்கழுங்குன்றத்தில், மிகச்சரியாக நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு, இரண்டு கழுகுகள் வருகை தந்து, பிரஸாதப் பொங்கல் சாப்பிடுவதை இரண்டு முறைகள் நேரில் சென்று பார்த்துள்ளேன். அதே போலவே உள்ளது இந்தப்பறவைகளின் செயலும். ஆச்சர்யம் தான்.
>>>>>>>
//பச்சைக் கிளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், 3,000 சதுர அடிபரப்பளவுள்ள கான்கிரீட் கூரையை சில பக்தர்களின் உதவியுடன் கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது.
ReplyDeleteதினமும் காலை 5.30 முதல் 6.00 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையும் கான்கிரீட் தளத்தின் மீது தானியங்கள் பரப்பப்படுகின்றன.
சுமார் 1 மணி நேரத்தில் தானியங்கள் முழுவதையும் கிளிகள் உண்டு விடுகிறதாம் ..//
ஆஹா, இதைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதுங்க !
>>>>>>>>
இன்றைய பதிவினில் உள்ள அசையும் படங்கள் எல்லாம் மிகவும் அழகாக உள்ளன. என் மனதையே அசைத்து விட்டன.
ReplyDeleteசிறு பறவைகளின் சிறகு விரிப்பால் அசையாத மனமும் அசைந்திடும் தானே!
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 941 ooooo
அத்தனையும் மிக்க அழகு!
ReplyDeleteசொக்கவைக்கும் பதிவு.
பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!
மனதை கவரும் செய்தி. மதுரை மீனாக்ஷியின் காதில் அனவரதமும் ராம நாமத்தை ஓதும் கிளியின் வழி வந்தவைகள் அல்லவா இந்த கிளிகள்!
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=7Iz5m-3JhPU
அற்புதம் அருமை நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆவலை தூண்டும் படங்களும் விளக்கமும் கிளிகள் அழகோ அழகு.
ReplyDeletesuperb feeding of parrots.
ReplyDeleteThe Almighty has designed a way out for each and every living being He created.
subbu thatha
ReplyDeleteவணக்கம்!
பச்சைக் கிளிகளின் நற்பசுமைக் காட்சிகளில்
உச்சி குளிர்ந்தேன் உறைந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கிளிகள் குவிந்து இருக்கும் காட்சியை மூன்று சின்ன படங்களாக போட்டு இருப்பதை விட, X - LARGE SIZE – இல் ஒரே படமாக போட்டு இருக்கலாம். உங்கள் வலைப்பதிவின் சிறப்பம்சே ஆன்மீகத்தோடு கூடிய X - LARGE SIZE வண்ணப்படங்கள்தான் என்பது எனது கருத்து.
ReplyDeleteஅடடா என்ன ஒரு அதிசயம்.. அற்புதம்.. பச்சைக் கிளிகள் இவ்ளோ தொகையாக எங்கேயும் கண்டதில்லை. நான் எண்டால் ஒரு கிளிக்குஞ்சை எடுத்து வந்திடுவேன் வீட்டுக்கு வளர்க்க:).
ReplyDeleteஅதிசய அனுமன் ஆலயம்! சிறப்பான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான பட தொகுப்புகள் . புதிய தகவல்கள் . நன்றி
ReplyDeleteஅருமையான பட தொகுப்புகள் . புதிய தகவல்கள் . நன்றி
ReplyDeleteஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள்! பார்க்கவே பரவசமாக இருக்கிறது. பச்சைகிளிகள் பரவும் அனுமன் கோவில் பற்றிய தகவல் புதிதாகவும், வியப்பாகவும் இருக்கிறது.
ReplyDeleteபுதிய தகவல். படங்கள் அருமை!! நன்றி அம்மா..
ReplyDelete