Thursday, June 6, 2013

சகல நலன் அருளும் சர்வஜன ரட்சகி







தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கொள்ளிடத்தின் தென்கரையில் அமைந்துள்ள திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வவனநாதர் என்ற பெயரில் இறைவனும், சர்வஜன ரட்சகி என்ற பெயரில் இறைவியும் அருள்பாலிக்கிறார்கள்...
தல விருட்சம் வில்வ மரம். 
  

திருவைகாவூர் தலத்தில் நுழைவு வாசலில் அர்த்த மண்டபத்தில்  4 அடி உயரத்தில் வடிக்கப்பட்டஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ள தட்சணாமூர்த்தி  நின்ற கோலத்தில் கையில் வீணையுடன் அருள்பாலிக்கிறார். 


நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

 சிவனுக்கு விசேஷ பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும்.

மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர்.


மதியம் எம தீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளும்  பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.
தீர்த்தம் எம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் நோய்கள் அகன்று நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.

துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர்.

அருகில் கையில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.

உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும்,  சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர்.

ஒரே கல்லில் மயில், திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம் கொண்ட சண்முகர் வள்ளி-தெய்வானைசமேதராக   கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ள அற்புதம் பொக்கிஷமுமாகும்.

சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது.

முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.

 இங்கு உள்ளார்.கை ரேகை, நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும்.இதில் மயில் இடப்புறமாக திரும்பியிருப்பது மற்றோர் சிறப்பு.

அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் கொலுவிருக்கிறார்கள்.

ஸ்ரீவாஞ்சியத்திற்கு இணையான, எமபயம்  போக்கும் தலம்

அம்பாள் வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி) மிகவும் அருள் வாய்ந்தவர். . சர்வஜன ரட்சகி என்று மிகப்பெரிய பொறுப்பை  தனது திருப்பெயரோடு தாங்கி நிற்கிறாள். அழகும் அருளும் சேர்ந்து இலங்கும் திருமுகம்.

அபய-வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள்.

வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை அம்பாளுக்கு
அர்ச்சனை செய்தல் விசேசம்.

குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும்.

வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது.

ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது

பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி ,அம்பாள் சந்நிதிகள் உள்ளன


சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக - திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது.

வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்தன...
 
மகா சிவராத்திரி நாள்.ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார்.

அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான்.நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை.

சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார்.

 யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.




12 comments:

  1. நல்லதொரு பகிர்வு இராஜேஸ்வரி மேடம்! உங்க வலைப்பூவுக்கு வரும்போதெல்லாம் நல்ல புராணக்கதைகள் தெரிந்துகொள்ள/நினைவு படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

    பலநாட்களாக கேட்கவேண்டும் என நினைத்தேன், நீங்கள் கோவை வானொலியில்(பண்பலை அல்ல) தினமும் காலையில் ஒளிபரப்பாகும் "பக்தி இசை" கேட்பதுண்டா? அதில் S.P.ஷைலஜா அவர்கள் பாடிய ஒரு பாடல் ஒலிபரப்பாகும். அதன் ஒலி வடிவம் இணையத்தில் எங்கு தேடியும் அகப்படவில்லை! உங்களுக்குத் தெரியுமா என சொல்லுங்களேன்..

    அந்தப் பாடல் முழுவதுமாக நினைவில்லை எனக்கு..ஆரம்பமும் சில வரிகளும் நினைவில் இருக்கு...

    "அழகெல்லாம் தவழ்கின்ற அற்புதமே வணக்கம்!
    அன்னை கன்யாகுமரி கண்மணியே வணக்கம்!
    தாமரைத் தாள்களையே ஏழை மனம் நினைக்கும்..
    செண்பகப்பூ மணக்கும் அம்பிகையே வணக்கம்!"

    ...இப்படி வரும் பாடல். பின்ணனி இசை ஏதுமில்லாமல் ஷைலஜா அவர்களின் இனிய குரல் மட்டுமே வரும் பாடல். கிடைத்தால் சொல்லுங்களேன்! நன்றி!

    ReplyDelete
  2. சிறப்பான தகவல்கள்... படங்கள்... அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இன்னும் சிறப்போடு விளங்கும் இந்த கோவிலின் அருமைப் பெருமைகள் அபாரம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ”சகல நலன் அருளும் சர்வஜன ரட்சகி” க்கு அடியேனின் வந்தனங்கள்.

    அழகான பதிவு. அருமையான விளக்கங்கள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ooooo 932 ooooo

    ReplyDelete
  5. இப்படி ஒரு புராணத்தை இன்று தெரிந்துகொண்டேன் பகிர்வு நன்றிகள் பல

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  7. அற்புதமான கோவில் பற்றிய அற்புதமான தல வரலாறு

    ReplyDelete
  8. சர்வஜன ரட்சகி பெயரிலேயே அன்னை எல்லோரையும் காக்கும் சக்தியென தாங்கியுளாளே...
    அற்புத வரலாறுகள். அனைத்தும் அருமை. பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. இன்றைய [06 06 2013] வலைச்சரத்தில் தங்கள் பதிவினை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள். அதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    பஜகோவிந்தம் ... பஜகோவிந்தம் .... கோவிந்தம் பஜ மூடமதே!

    ReplyDelete
  10. சிவனை நினைப்பவரும் சிவனாவர்.

    சித்தமெல்லாம் சிவமயம்.


    சுப்பு தாத்தா.

    .

    ReplyDelete
  11. திருவைகாவூர் பெருமானின் பெயர் வில்வவனநாதர், அம்பாள் பெயர் சர்வஜன ரட்சகி!பெயர்களே மிகவும் அழகாக இருக்கிறதே!
    வேடனுக்கு மோட்சம் அளித்த வரலாறும் நன்றாக இருக்கிறது.

    புதுபுது ஊர்கள், இறைவனின் தரிசனம் என்று தினம் ஒரு ஆச்சர்யமான அனுபவம் உங்கள் புண்ணியத்தில்!

    ReplyDelete
  12. பல ஊர்கள் பல கோவில்கள்..... உங்கள் மூலம் நாங்களும் தெரிந்து கொள்கிறோம். நன்றி.

    ReplyDelete