





ஆண்டுதோறும் ஜூன் மாதம் எட்டாம் தேதி
சர்வதேச கடல் தினமாக கொண்டாடப்படுகிறது ...
அனைவரும் இணைந்து கடலை பாதுகாப்போம்'
என்பது இந்த வருட கடல்தினத்தின் மையக் கருத்து.
நாம் வாழும் பூமி, ஒரு பங்கு நிலத்தாலும்
மூன்று பங்கு நீராலும் சூழப்பட்டுள்ளது.
பூமியில் 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
பூமியில் உள்ள மொத்த தண்ணீரின் அளவில்,
97 சதவீதம் கடல் நீராக உள்ளது.

இதனால் வானில் இருந்து பார்த்தால், பூமி ஊதா நிறத்தில் காணப்படும்.
கடலால் மனிதர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கிறது.
நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 முதல் 80 சதவீதம்
கடல் மூலமாக கிடைக்கிறது.

நமக்குத் தேவையான குடிநீரும் கடல் மூலம் தான் கிடைக்கிறது.
கடல் மூலம் அதிகமான வணிகத் தொடர்பு நடந்து வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில், கடல்நீரின் மாசுபாடு அதிகரித்து வருகிறது.
கழிவு நீர் கடலில் கலப்பது; எண்ணெய் கசிவு போன்ற காரணங்களால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் நிலையில் கடலை பாதுகாக்க முயற்சி எடுக்கவில்லையெனில், மனித வாழ்க்கைக்கே ஆபத்து ஏற்படும்.
கடலில் பல நூறு கோடி நுண்ணியிரிகள் வாழ்வதாக
அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன.
கடல்வாழ் உயிரினங்களில் சமநிலையை ஏற்படுத்துவதில்
சுறா மீன்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன.

ஆனால், ஆண்டுக்கு 7 கோடியே 30 ஆயிரம் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன.
உலகில் 10 கோடி பேர் உணவு, வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர்.
52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது.



பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், சமுத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகச் சமுத்திரம் என்னும் எண்ணக்கரு கடலியலில் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
முதன்மையான சமுத்திரங்களின், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், ஏனைய பகுதி இயற்கை நீதிகளினாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.
கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது.
சமுத்திரங்கள், சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன.
நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும், உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன.
இத்தகைய சிறப்புகளை கொண்ட கடல்களையும் சமுத்திரங்களை காப்பது தனி மனித மற்றும் சமூக கடமையாகும்.
கடந்த காலத்தில் கடலுக்கு அடியில் இருந்த சில பகுதிகள் நிலப்பகுதிகளாக இருக்கின்றன. நிலப்பகுதிகள் கடல்களாகி இருக்கின்றன.
உலகின் உயர்ந்த இமயமலையே ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாகக் கருதப்படுகிறது.
இமய மலையின் உயரத்தை விட பசிபிக்கடல் ஆழம் மிகுந்தது ...
லெமூரியா என இருந்த கண்டமே கடலில் மூழ்கி இருந்ததாக அறிவியல் அறிஞர்கள் கருத்து ...








வணக்கம்
ReplyDeleteஅம்மா
அருமையான பதிவு படங்கள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தரவுகள் தொகுத்த விதம் மிக அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நமது வருங்கால
ReplyDeleteதலைமுறையினருக்காகவாவது
கடலினை காப்பாற்றியே ஆக வேண்டும்.
சிறந்த பதிவு சகோ. நன்றி
படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...
ReplyDeleteநாங்களும் கொண்டாடி விட்டோம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
”கடல் தினம்” அழகான படக்களுடன், அருமையான விளக்கங்களுடன் கூடிய மிகச் சிறப்பான பதிவு.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
ooooo 935 ooooo
மேலிருந்து ஐந்து, கீழிருந்து இரண்டு ஆகிய இரண்டு அசையும் படங்களும், என்னையே சற்று அசைத்து விட்டன. படத்தேர்வுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான படங்களுடன் அறியாத தகவல்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteAhahhaa.
ReplyDeleteWhat a beauti...
Wounderful pictures and nice write up.
I enjoyed it like anything. Thanks for the post.
This is the first time i am hearing about SEADAY...
You are so informative dear.
viji
எத்தனை தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பதிவு படித்தபின் தான் இதுபோல கடல் தினம் இருக்கிறது என்றே தெரிய வந்தது.
ReplyDeleteஎல்லா வளங்களையும் போலவே கடலும் தன்னுள் எத்தனை எத்தனை வளங்களை கொண்டுள்ளது. எத்தனை உயிரினங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது.
நிச்சயம் கடல் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று!
விழிப்புணர்வுக் கட்டுரைக்கு நன்றி!
கடல்..... யாருக்குத் தான் பிடிக்காது. அலுக்காது சலிக்காது எப்போதும் அடித்துக் கொண்டிருக்கும் அலைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம்....
ReplyDeleteகடல் தினம். நல்ல கட்டுரை.
கடல் வளம் காப்போம். நலம்பெறுவோம்.
ReplyDeleteமிக அழகான அசத்தலான பகிர்வு.பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete