ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த இக் கயவாய்
ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே எவ்வுயிர்க்கும்.
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் ...
ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உரு, அபூர்வமானது. சத்தியோஜாதம், அகோரம், தத்புருஷம், வாமதேவம், ஈசானம் என்பனவே அந்த ஐந்து முகங்கள். சிவலிங்கத்தின் நான்கு புற முகங்களோடு, லிங்கமும் ஒரு முகமாக கணக்கிடப்பட்டு மொத்தம் ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுகேஸ்வரர் தாமரைப் பீடத்தில் கருவறையில் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார் பஞ்சமுகேஸ்வரர்.
எதிரே தனி சந்நதியில் இறைவி திரிபுரசுந்தரி கொலுவிருக்கிறாள்.
இறைவனும் இறைவியும் எதிரெதிர் சந்நதிகளில் அருள்பாலிப்பதால் இருவரையும் நாம் ஒருசேர தரிசிக்க முடியும் அமைப்பு அபூர்வமானது
அன்னை தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளைத் தாங்கியபடியும் கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடனும் காட்சி தருகிறாள்.
இறைவன் பஞ்சமுகேஸ்வரருக்கும் அன்னை திரிபுரசுந்தரிக்கும் கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
பிரதோஷ நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரி அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மகாமண்டபத்தில் ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜராஜேஸ்வரரை தரிசிக்கலாம்.
எதிரே நந்தியும் பலி பீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.
மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவியான ராஜராஜேஸ்வரி அருள்கிறாள்...
விச்ரவஸ்ஸீக்கு ராவணன் என்றும் குபேரன் என்றும் இரு புத்திரர்கள். இருவரின் தாய்மார்களும் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை வளர்ந்து இருவரும் யுத்தம் மேற்கொள்ளும் அளவிற்கு வளர்ந்தது.
யுத்த முடிவில் குபேரனின் அனை த்து ஐஸ்வரியங்களும் புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன.
‘‘மகாவிஷ்ணு தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து ராவணனை யுத்தத்தில் தோற்கடிப்பார். உன்னிடமிருந்து பறிபோன புஷ்கபவிமானம் அப்போது உன்னை வந்து அடையும்.’’ என மகாதேவரை ஆராதித்த குபேரனுக்கு அசரீரி வடிவில் அருள்கிடைத்தது ...
குபேரன் காவிரியின் தென் கரையில் ஆலயம் அமைத்து இறைவனை அங்கு பிர திஷ்டை செய்து அவருக்கு ராஜராஜேஸ்வரர் என்று பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான்.
ராஜராஜேஸ்வரர் அருளால் குபேரன் இழந்த தன் பெருமைகளையும் பொருட்களையும் மீண்டும் பெற்றான்.
தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையாரில் பாணம் அமைந்துள்ளது.
இறைவனுக்கு 64 முகங்கள். பாணம் முழுவதும் உள்ள 64 விரிக்கோடுகள் முகங்களாக கணக்கிட்டு இறைவனை தரிசிக்கின்றனர்,
இறைவனின் பின்புறம் நான்கு வேதங்கள் சாளக்கிராம வடிவில் அமைந்துள்ளது, ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.
ஆலயத்தின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 12 முதல் 16 இதழ்கள் இருப்பது ஆலயத்தில் காணப்படும் அற்புதமான அதிசயம்.
குபேரனின் துயர் தீர்த்த இறைவன் ராஜராஜேஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரையும் தீர்ப்பார்.
திருச்சி-திருவானைக்காவல் கடைவீதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
தெய்வீக மணம் கமழும் அற்புதப் பதிவு. நன்றி சகோ
ReplyDeleteஓம் நமச்சிவாய ....ஓம் நமச்சிவாய..ஓம் நமஹோ......அத்தனையும் அருமை
ReplyDeleteஅனைத்தும் அற்புதம் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபஞ்சமுகேஸ்வரரைப் பற்றிய தங்களின் இன்றைய பதிவு மிகவும் அருமையோ அருமை.
ReplyDeleteநேரில் சென்று சிலமுறை தரிஸிக்கும் பாக்யம் பெற்றுள்ளேன்.
>>>>>
இறைவன் இராஜராஜேஸ்வருக்கும்,
ReplyDeleteஇறைவி இராஜராஜேஸ்வரிக்கும்,
என் அனந்த கோடி அன்பு வந்தனங்கள்.
>>>>>>
காட்டியுள்ள படங்களும்.சொல்லியுள்ள புராணக்கதைகளும் சுவாரஸ்யமானதாக உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 936 ooooo
அற்புதம், அழகு! மிகமிகச் சிறப்பான படங்களும் பதிவும்.
ReplyDeleteபகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!
superb post
ReplyDeleteஅழகு படங்கள் அற்புத பதிவு நன்றிகள் அக்கா
ReplyDeleteபடங்கள் படிக்கத் தூண்டியது.
ReplyDeleteவில்வமிலை... முன்பொருபோதும் கண்டதில்லை.
”தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
ReplyDeleteதன்னோ ருத்ரப் பிரசோதயாத்”
அருமையான பகிர்வுக்கு நன்றி
சிவ சிவ !
ReplyDeleteஅற்புதமான படங்களும் செய்திகளும்!
திருவானைக்காவிலா இருக்கிறது இக்கோவில். அடுத்த பயணத்தில் பார்க்க வேண்டும்.....
ReplyDelete