Friday, June 14, 2013

ஏற்றம் தரும் ஏழுலோகநாயகி




மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்

ஈரேழு உலகங்களையும் ரட்சிக்கும் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மஹேந்திரி, சாமுண்டி  என்று அழைக்கப்படும் 
சப்த மாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமே ஏழுலோகநாயகி. 
சாந்தமூர்த்தியாக அருள்பாலிக்கும் அன்னை  இயற்கை எழில் சூழ்ந்த வனப் பகுதியில் தனி ராஜ்யம் நடத்துகிறாள்.

சப்த மாதாக்களுக்கு இருப்பது போலவே  அன்னைக்கு இருபுறமும் விநாயகர், வீரபத்திரர் திகழ, அம்பிகை வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

நல்ல உயரமான கம்பீரக் கோலம். எட்டு   திருக்கரங்களிலும் சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். 

ஒருகரத்தால் தன் பாதத்தைச் சுட்டி தன்னிடம் சரணடையச் சொல்கிறாள். வலது காலை மடித்தும் இடது காலை தொங்கவிட்டும் கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள்.

கேசத்தில்  நெருப்பு ஜுவாலை பறப்பதும் சற்று தலையை சாய்த்து பார்க்கும் கருணையும் உள்ளத்தை உருக்குகிறது.

அன்னையை மஞ்சள் குங்குமத்தின் வாசமும் சந்தனம் , பூக்களின் மணமும் எப்போதும்  சுழன்றபடி இருக்கிறது.

சக்தி உபாசகர்கள் இவள் வனதுர்க்கையும் கூட என்று  வணங்குகிறார்கள்...

சில ஆயிரம் குடும்பங்களுக்கு இன்று வரை இவள்தான் குலதெய்வமாக காத்து வருகிறாள்.

கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

சூரியனார் கோயிலுக்கு செல்பவர்கள் அருகிலுள்ள இக்கோயிலையும் தரிசிக்கலாம்.

கும்பகோணத்திற்கு அருகே மணலூரில் உறையும் ஏழு லோகநாயகி, திருமாந்துறைக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறாள்












11 comments:

  1. ஏழுலோகநாயகி ஏற்றம் தரட்டும் எல்லோருக்கும்... படங்களும் விளக்கங்களும் அருமை அம்மா... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ஏழுலோகநாயகி அம்மனின் தகவல்கள்,படங்கள் அருமை. ஏற்றமிகு வாழ்வுதனை வழங்கட்டும் ஏழுலோகநாயகி.நன்றி.

    ReplyDelete
  3. Just now I finished my pooja and opened the computer. What a Darshinam of Devi. That too the Zoom view. Just i felt very emotional.
    Thanks for sharing.
    Nice post dear.
    viji

    ReplyDelete
  4. மிக அருமை! அழகிய படங்களும் பதிவும்.
    அனைவருக்கும் அருள்கிடைக்க வேண்டுகிறேன்.
    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. good pictures thanks for sharing a new info about saptha mathar

    ReplyDelete
  6. ”ஏற்றம் தரும் ஏழுலோக நாயகி”க்கு என் அன்பான வந்தனங்கள்

    >>>>>

    ReplyDelete
  7. ஈரேழு உலகங்களையும் ரக்ஷிக்கும்

    பிராம்மி

    மஹேஸ்வரி

    கெளமாரி

    வைஷ்ணவி

    வராஹி

    மஹேந்திரி

    சாமுண்டி

    ஆஹா, மிகவும் அருமையான பெயர்கள். ;)))))))

    >>>>>

    ReplyDelete
  8. கீழிருந்து ஆறாவது ’சப்த கன்னியர் படங்கள்’, கிளி கொஞ்சுவதாக அமைந்துள்ளன.

    படத்தேர்வுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  9. வழக்கம் போல் அழகான படங்கள், அருமையான விளக்கங்கள்.

    சூப்பரான வித்யாசமான அற்புதமான பதிவு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்ற்கள்.


    ooooo 940 ooooo

    ReplyDelete
  10. அறியாத ஒரு ஆலயம்! அறியாத ஒரு வடிவம்! சிறப்பாக படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  11. வணக்கம்
    அம்மா
    ஏழுலோகநாயகி பதிவு மிக அருமையாக உள்ளது படங்களும் விளக்கமும் அருமை அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete