குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்றும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்றும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!
ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும் திருவிழாக் கோலம் காணும்.
நடராஜப் பெருமானுக்கும் தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர்.
இருவரும் அன்று தேரில் பவனி வருவார்கள். திருவீதி உலா முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.

தில்லையில் ஆனி உத்திரத்தன்று சூரிய உதய வேளையில், யானைகள் இழுக்கும் தேர்போல அமைக்கப்பட்டுள்ள ராஜசபையின் முன்மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமானும் அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து வெகுசிறப்பாக ஆனித்திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரிவார்கள்.
சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீநடராஜப் பெருமான் ராஜசபையில் அருள்பாலிக்கிறார்.
திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம் ஐந்தொழிலையும் காட்டக்கூடியது.
சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள்.
ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள்.
அப்போது மூலவர் ஸ்ரீநடராஜரே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளி லும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.
ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானைப் போற்றும் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவில் சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். தம்பதிகள் சுகமான வாழ்வு வாழ்வர். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்கள் மனதில் தைரியமும் உடல் பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.
தில்லையிலும் திருவாரூரிலும் மற்றும் சிவத் திருத்தலங்களிலும் ஆனி உத்திர வைபவம் சிறப்பிக்கப்படுவது போல், பழனி ஆண்டவர் கோவிலிலும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும்.
பழனி ஆண்டவர் எழுந்தருளியுள்ள மலைக் கோவிலில் ஆனித் திருமஞ்சனமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
பழனி ஆண்டவர் எழுந்தருளியுள்ள மலைக் கோவிலில் ஆனித் திருமஞ்சனமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி யன்று அன்னாபிஷேகம் செய்வது போல், அவரது மகனான பழனி முருகனையும் சிவாம்சமாகக் கருதி, ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று மதியம் உற்சவமூர்த்திக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறுகிறது.
ஆனிமூல நட்சத்திரத்தன்று திருஆவினன்குடி (பழனி மலையடிவாரம்) குழந்தை வேலாயுதருக்கு மாலை பூஜையில் அன்னாபிஷேகம் உண்டு. ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் ஆனித்திருமஞ்சனம் விசாகத்தன்று நடைபெறும்.
ஆனிமூல நட்சத்திரத்தன்று திருஆவினன்குடி (பழனி மலையடிவாரம்) குழந்தை வேலாயுதருக்கு மாலை பூஜையில் அன்னாபிஷேகம் உண்டு. ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் ஆனித்திருமஞ்சனம் விசாகத்தன்று நடைபெறும்.
ஆனி மாதத்தில் வரும் அமாவாசையும் கிருத்திகையும் திருமஞ்சனத்துக்குரிய சிறப்பு நாட்களாகக் கருதப்படுகின்றன.
அன்று பஞ்சபூதத் தலங்களிலும், பஞ்சசபைத் திருத்தலங்களிலும், ஸ்ரீநடராஜர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அன்று பஞ்சபூதத் தலங்களிலும், பஞ்சசபைத் திருத்தலங்களிலும், ஸ்ரீநடராஜர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆனி மாதப் பௌர்ணமியன்று காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும். இறைவன் திருவீதி உலாவரும்போது, மாடியிலிருந்து கூடை கூடையாக மாங்கனிகளை அபிஷேகிப்பார்கள். இந்த மாம்பழங்கள் தெய்வப் பிரசாதமாகக் கருதப்படுகின்றன.
ஆனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது இரவுகள் ஆஷாட நவராத்திரி எனப்படும்.
கோடைக்கால இறுதி மாதமான ஆனி மாதத்தில் சில கோவில்களில் பழங்களாலான பூஜை சிறப்பிக்கப்படுகிறது. திருச்சி உறையூரில், மேல் கூரையில்லாமல் வெட்ட வெளியில் அமர்ந்திருக்கும் வெக்காளி அம்மன்
திருக்கோவிலில், ஆனி மாதப் பௌர்ணமியன்று மாம்பழங்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். பிறகு, அதை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவருக்கு (திருக்கோவிலில்) ஆனிப் பௌர்ணமியன்று பக்தர்கள் வாழைப் பழத்தாரினை சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக செழித்துவாழ வேண்டுமென்று பிரார்த்தனை செய்வார்கள்.
ஆனி மாதம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தன்றுதான் வசந்த பஞ்சமி, சமீகௌரி விரதம் ஆகியவையும் கடைப்பிடிக்கப்படுகிறது.
கோவைக்கு அருகிலுள்ள மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர்- பச்சை நாயகித் திருக் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவனும் இறைவியும் நாற்று நடும் திருக்கோலத்தில் தரிசனம் தந்த அடிப்படையில், நாற்றுநடவு உற்சவம் ஆனி திருமஞ்சனத்தன்றுதான் நடை பெறுகிறது.
நல்ல விவரங்கள். ரசித்தேன்.
ReplyDeleteஇதுவரை நான் அறிந்திராத ஆன்மிக விஷயங்கள் பல அறிந்தேன். நன்றி!
ReplyDeleteஅற்புதமான படங்கள்... தகவல்கள் அதை விட... நன்றி அம்மா... வாழ்த்துக்கள் பல...
ReplyDelete”ஆனித்திருமஞ்சன விழா” என்ற தலைப்பில் இன்று தாங்கள் எழுதியுள்ள பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDeleteநிறைய விஷயங்களை நிறைவாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
>>>>>
படங்கள் அத்தனையும் அழகாக உள்ளன.
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப்பின் நெல்லிக்கனி மாலையில் அம்பாளைப்பார்த்ததும் எனக்கு மிகவும் பரவஸமானது.
>>>>>
ReplyDelete//குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்றும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!//
இந்தப்பாடல் மிகவும் அழகு + அருமை. ;)
>>>>>>>
ReplyDelete//திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவருக்கு (திருக்கோவிலில்) ஆனிப் பௌர்ணமியன்று பக்தர்கள் வாழைப் பழத்தாரினை சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக செழித்துவாழ வேண்டுமென்று பிரார்த்தனை செய்வார்கள்.//
மகிழ்வூட்டும் இனிய தகவல்.;)))))
>>>>>>
ReplyDeleteபல ஊர்களில் கொண்டாடப்படும் இந்த திருவிழாக்களைப்பற்றி தெளிவாக விளக்கிச்சொல்லியுள்ளது தங்களின் தனிச்சிறப்பு.
வியக்க வைக்கும் பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 939 ooooo
informative post
ReplyDeleteஅற்புதமான ஆனிதிருமஞ்சனதிருவிழா. அழகியபடங்களுடன் கூடியதகவல்கள். நன்றிகள்.
ReplyDeleteVery great informations.
ReplyDeleteVery pretty pictures.
I remember the day we went to Perur temple holding my fathers hand ..............
viji
எந்தெந்த மாதங்களில் எந்தெந்த திருவிழாக்கள் வரும் என்பதை இங்கு வந்தே தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றிங்க.
ReplyDeleteஆனி திருமஞ்சன திருவிழா ஆன்மீக தகவல்கள் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇப்படி ஒரு விழா இருப்பதை இன்று தான் அறிந்தே நன்றிகள் அக்கா படமும் வெகு சிறப்பு
ReplyDeleteஆனி திருமஞ்சன விழா பற்றிய தகவல்கள் சிறப்பு! விரிவான எளிமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஆனி திருமஞ்சன பதிவு பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி மேடம்!!
ReplyDeleteமிகவும் அழகான படங்களுடன் அருமையான பதிவு. ஆனித் திருமஞ்சனம் பற்றி அறிந்து கொண்டேன். இறைவனையும், இறைவியையும் கண்குளிர சேவித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteநன்றி!
ஆனித் திருமஞ்சன திருவிழாவை நேரில் காட்டிய உங்கள் பதிவுக்கு நன்றி.. மனதில் தைரியமும் உடலில் பலமும் நிச்சயம் கூடித்தான் விட்டது... மீண்டும் நன்றி...
ReplyDeleteஆனித் திருமஞ்சனம் கண்டு இன்புற்றோம். சிறப்பான அலங்காரம் .படங்கள் அருமை.
ReplyDelete