Wednesday, June 12, 2013

மரகத நடராஜர்














தாதாடும் பூஞ்சோலைத் த்த்தாய் நமைஆளும்
மாதாடு பாகத்தன் வாழ் பதி என் – கோதாட்டி
பத்தர்எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்திர கோச மங்கை ஊர்.. . .’ ---திருத் தசாங்கத்தில் ஒவ்வொரு கேள்வியையும் கிளியிடம்கேட்டுப் பெறுகிறார். மணிவாசகர்...

மணிவாசகரால் பாடல் பெற்ற நீத்தல் விண்ணப்பம் – 50 பாடல்களும் 
உத்திர கோசமங்கையிலே அருளிச் செய்தவை 

உத்திரகோசமங்கையில் மரகதக்கல்லினால் ஆன நடராஜர்
எப்போதும் சந்தனத்தால் மூடப்பட்டு இருக்கிறார்...


 நடராஜர் சிலையில் பச்சை நரம்புகள் தெரிகின்றன .என்கிறார்கள் ..

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில், மரகதத்தாலான ஆளுயர நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனகாப்பில் இருப்பது வழக்கம்.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
ஆருத்ரா தரிசனத்தின் போது,நடராஜரின், திருமேனி மீது பூசப்பட்டிருக்கும் சந்தன காப்பு களையப்பட்டு நடராஜர் சிலை மீது சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் பூசப்பட்டு, 32 வகையான மூலிகைகளால், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது....

திரும்பவும் இரவில் சந்தனக்காப்புக்குள் நுழைந்துவிடுகிறார் மரகத நடராஜர் 

பால் அபிஷேகத்தின் போது,பச்சை மரகத திருவுருவின் மீது பால் பட்டுத்தெறிக்கும் அழகே தனி அழகு. அப்போது சுவாமியின்  முன்பாகக் காட்டப்படும் தீபம் நடராஜர் திரு உருவுக்குள் ஊடுருவி மறுபுறத்தில் தெரியும். நடராஜர் மேனியில் சாற்றிய சந்தனம் மருத்துவகுணம் நிரம்பியது
தற்போது தினசரி மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு, ஆறு கால பூஜை நேரங்களில், மரகத நடராஜருக்கு தீபாராதனை மட்டும் நடைபெறும். பக்தர்கள் சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரின் முழு உருவ சிலையை, தினமும் பார்த்து தரிசிக்கும் வகையில் திறந்து வைக்கப்படுகிறது ...


மரகதக்கல் சேதமாகாமல் இருக்க  மேளச்சத்தம் ,நாதஸ்வர ஒலி  என்பது போல் பல ஒலிகளைத் தவிர்க்கின்றனர் 
Shiva Nataraja in the Mangalanathar temple in Uttirakosamangai
இதேபோல் மரகதலிங்கம் இருக்கும் இடங்களிலும் கோயிலைப்பரமரிப்பவர்கள் அவைகளைப்பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்
தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்துக்கு பிக்ஷாடனக் கோலத்தில் வந்த போது ஆடிய ஆட்டத்தை அம்பிகை  காண விரும்பியதால் தனியாக ஈசன் அறைக்குள்ளாக அம்பிகைக்கு மட்டுமே  ஆடிய இடம் இது.  

இதன் பின்னரே, பதஞ்சலிக்காகவும், வியாக்ரபாதருக்காகவும் அம்பலத்தில், (சிதம்பரம்)   ஆநந்த நடனம்.
இராவணனின் மருமகனான  தேவலோக சிற்பி மயனால் சாஸ்திரமுறைப்படி உருவாக்கி,பிரதிஷ்டை செய்யப்பட்டது மரகத நடராஜர். 

பாதுகாப்புக்கருதி சிலையினை  முதலில் பிரதிஷ்டை செய்து அதன்பின் கருவறை கட்டப்பட்டது  

கருவறை வாயில்  சிலையை விட சிறியதாக இருக்கும்! 

ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மா, விஷ்ணு, சிவன் சிற்பம் கோவிலின் சிறப்பம்சங்களுள் ஒன்று.

இங்கு அருள்பாலிக்கும் அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும்.

சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
எனவே உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே

 உத்திரகோசமங்கை - லிங்கோத்பவர்

Yaali with ball Uthirakosamangai.

பழமையான ஸ்தல விருட்சம் - இலந்தை ...
Uthirakosamangai_Temple_Tree.jpg

கன்னிமூலை கணபதி

Kannimoolai Ganapathi

மரகத நடராஜரை தன் மூச்சுக்காற்றால் சீராட்டும் நந்தி  


Nandhi facing Maragatha Natarajar
1500 ஆண்டுகள் பழமையான அழகிய ஓவியம் ..
\
அன்னாபிஷேகம்..



மங்களநாயகர் கோவில் நுழைவு வாயில் கோபுரம்



21 comments:

  1. வீட்டில் இருந்தவாரே மரகத நடராசரைத் தரிசிக்க வாய்ப்பு. நன்றி

    ReplyDelete
  2. நடராஜர் எப்போதுபோல இப்போதும் உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம். நானும் திருவாதிரை நட்சத்திரம் தான் ஆனா ரொம்ப கஷ்டப்படுறேன்

    ReplyDelete
  3. அடாடா... மரகத நடராஜரின் படம் வெகு சிறப்பு. கண்களை ஈர்த்துப் பிடித்தது. மயன் ராவணனின் மருமகனா? புதிய தகவல்! நடராஜ தரிசனம் நவரசம்! மிக ரசித்தேன்!

    ReplyDelete
  4. சிறப்பான தகவல்களுடன் படங்கள் அருமை அம்மா... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. எத்தனை அற்புதம்!!!
    அருமையான படங்களும் பகிர்வும்.... மிகவும் ரசித்தேன்.
    வாழ்த்துக்கள் சகோதரி!. பகிர்விற்கும் நன்றி!..

    ReplyDelete
  6. ”மரகத நடராஜர்” என்ற தலைப்பில் தங்களின் இன்றைய பதிவு சூப்பராக உள்ளது. ;)

    >>>>>>>

    ReplyDelete
  7. எல்லாப்படங்களுமே அழகென்றாலும், மேலிருந்து கீழ், பத்தாவது வரிசையில் உள்ள படம் என்னை மிகவும் கவர்ந்தது.

    [குளத்தில் கோபுரத்தின் நிழல் விழும் படம்] படத்தேர்வுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். ;)

    >>>>>>

    ReplyDelete
  8. 63 நாயன்மார்கள் உள்ள படமும் அருமை.

    இதே போன்ற 63 நாயன்மார்கள் சிலைகள், என் வீட்டருகே உள்ள “ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி” கோயிலிலும் இதே போல வரிசையாக உள்ளன.

    ஒவ்வொருவரின் பெயர்கள், அவர்கள் பிறந்த நக்ஷத்திரத்துடன், மிகவும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்கள்.

    அதைத்தவிர நால்வருக்கு மட்டும் தனியே மிகப்பெரிய சிலைகளாக, சந்நதியில் வைத்து முக்கியத்துவம் அளித்துள்ளார்கள்.

    >>>>>>

    ReplyDelete
  9. அனைத்து விளக்கங்களும் வழக்கம்போல் மிகவும் சிறப்பாகத் தந்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 938 ooooo

    ReplyDelete

  10. உத்தரகோசமங்கை நடராஜரைத் தரிசித்த கணங்கள் நினைவுக்கு வந்தது. இப்போது உங்கள் பதிவில் மீண்டும் தரிசனம். நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மரகத நடராஜர் படத்தினை ரொம்பவும் ரசித்தேன். படத்தில் தெரிந்த சிலையின் நுணுக்கமான வேலைப்பாடுகள் கண்ணை விட்டு அகலவில்லை.

    ReplyDelete
  12. அற்புதமான அரிய தகவல்களையும் அழகான படங்களையும் அன்றாடம் பகிரும் தங்களின் பணி அருமையானாது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  13. நடராஜரின் சிலையில் பச்சை நரம்புகள் தெரிகின்றன - வியப்பில் ஒன்று. தீபம் திருவுருவில் ஊடுருவி மறுபுறம் தெரியும் - இதுவும் வியப்பில் ஒன்று. படங்களுடன் கட்டுரை பளபளக்கின்றது. ஒரு சென்று தரிசனம் செய்து விட்டு வர வேண்டும் என்ற அவாவை தந்துள்ளது.

    ReplyDelete
  14. நடேசப் பெருமானின் சந்தனக் காப்பு உள்ளத்தைப் பறிக்கிறது.

    ReplyDelete
  15. படித்து மகிழ்ந்தோம்!

    ReplyDelete
  16. உத்திரகோசமங்கை மரகத நடராஜர் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
    நன்றி

    ReplyDelete
  17. info about maragatha natarajar with pictures are so good

    ReplyDelete
  18. பச்சை மரகதக்கல் நடராஜர் கண்டு மெய்சிலிர்த்தேன்.
    அற்புதப் பதிவு.

    ReplyDelete