Saturday, June 8, 2013

ஸ்ரீஜய ஹனுமன்







அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

இயற்கை சூழல் நிறைந்த மலை அடிவாரத்தில் மலைப்பட்டு அருகில் மகாரண்யம் கிராமத்தில் மதுரபுரி ஆசிரமத்தில் வானத்தையே தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். 

சுற்றிலும் சோலைகள் நிறைந்த குளிர்ச்சியான இடத்தில், அரசமர நிழலில் இருந்து நம்மை காத்தருள்கிறார் ஜய அனுமன்.

தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் மலைப்பட்டு அருகேயுள்ள மஹாரண்யம் கிராமத்தில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமியின் மதுரபுரி ஆசிரமத்தில்  24 அடி உயர கன்னியாகுமரி ஸ்ரீ ஜயஹனுமான் சிலை  ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. 

ஜய ஹனுமாரை தரிசிப்பவர்களின் பிரார்த்தனை உடனே நிறைவேற அனுமன் சிலைக்கு அடியில் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

 கோவிலின் சுற்றுச் சுவர் நெடுக ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தை அற்புதமான ஓவியங்களாக தீட்டி அசத்தியிருக்கிறார்கள்...

நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், சர்ப்ப தோஷம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க  அனுமன் அருள்புரிகிறார்....

பக்தர்கள் அனுமனுக்கு அபிஷேகம் செய்தும், வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பரந்த வெளியில் இருபத்துநான்கு படிகள் ஏறினால் அவர் பாதத்தை அடையலாம். அதற்குமேல் 24 அடி உயர ஸ்ரீ ஆஞ்சநேயர் கம்பீரமாக அருள்கிறார்...

வால்மீகியின் ஆதி காவியமான ஸ்ரீமத் ராமாயணம் 24 ஆயிரம் செய்யுட்களால் எழுதப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில்  ஜய அனுமன் 24 அடி உயரம்  கொண்டு திகழ்கிறார்..

காயத்ரி மந்திரம் 24 அக்ஷரங்களைக் கொண்டது. அதைக் குறிக்கும் வகையில் 24 படிகளைக் கொண்டுள்ளது.

 கன்யாகுமரி ஸ்ரீ ஜய அனுமனை பிரதிஷ்டை செய்தபோது, அதன் அடியில் ஒரு விசேஷமான யந்திரத்தை வைத்துள்ளார்கள். நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், தொல்லைகள், ஏழரைசனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் கஷ்டங்கள் விலகவும், கால சர்ப்ப தோஷம் விலகவும் சங்கல்பம் செய்து  யந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டு படும் அவதிகள், தாங்கமுடியாத குடும்பத் தொல்லைகள் இருந்தால், இந்த ஜய அனுமாரை வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து ஏழு முறை அதே கிழமையில் வந்து வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டுச் சென்றால், கன்யாகுமரி ஸ்ரீ ஜய அனுமன் அருள்பாலித்து துன்பத்திலிருந்து விடுவிப்பதுடன்,  தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்.
[Gal1]
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில் தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமம் காஞ்சிபுரம் மாவட்டம்.


Wish You Hanuman Jayanti

10 comments:

  1. ”ஸ்ரீஜய ஹனுமான்” என்ற இன்றைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

    சனிக்கிழமைக்கு ஏற்ற பதிவு.

    ஒருசில படங்கள் புதுமையாக கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.

    விளக்கங்கள் யாவும் சிறப்பாக உள்ளன.

    கீழிருந்து ஏழாவது வடைமாலைப் படம் நாக்கில் நீர் ஊற வைக்கிறது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo 934 ooooo

    ReplyDelete
  2. இருமுறை சென்றுள்ளேன்... படங்கள் மிகவும் அழகு... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete

  3. படங்களுடன் பதிவு அருமை. படங்களைப் பார்க்கும்போது இந்த இடத்தை பார்த்ததாகவும் பார்க்கவில்லை எனவும் தோன்றுகிறது. நினைவே என்னை ஏமாற்றுகிறதோ. ?

    ReplyDelete
  4. படங்கள் வெகு சிறப்பு. படிகட்டுகள் அமைந்த கோயில் உயர்ந்து நிற்கும் அனுமன் அழகான காட்சி.

    ReplyDelete
  5. படங்கள் மிகவும் அருமை அக்கா அதில் பதிவு இன்னும் சுவை அக்கா

    ReplyDelete
  6. அழகான படங்களுடன் ஸ்ரீ ஜய அனுமன் தரிசனம் கிடைத்தது! தகவல்கள் சிறப்பாக தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. https://www.youtube.com/watch?v=SX1h8tPfNEY

    Thank U Madam. for the wonderful posting.
    you may see and listen here. your pathigam.

    subbu thatha
    NJ

    ReplyDelete
  8. கன்னியாகுமரியில் இருக்கும் அனுமார் கோயில் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  9. வடைமாலை, வெண்ணை அலங்காரம் அதி அற்புதம்!
    ஸ்ரீ முரளிதர ஸ்வாமியின் மதுராபுரி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதுவரை போனதில்லை. உங்கள் கட்டுரையில் படங்களைப் பார்க்க போய் தரிசித்த திருப்தி கிடைத்தது.

    ReplyDelete
  10. 24 அடியில் ஹனுமன்......

    படங்களில் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. நேரில் பார்க்கத்தூண்டுகிறது......

    ReplyDelete