ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத்
சூரிய காயத்ரி மந்திரம்.
ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:
தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள்
ரதசப்தமியாக கொண்டாடப்படுகிறது.
ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத்தில் வலம் வருவதாக ஐதீகம்...
சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார்.
சூரியனுக்கு ஏழு மிக முக்கியமான ஆலயங்கள் உள்ளன.
மிக முக்கியமானது ஒரிசா மாநிலத்திலுள்ள கோனார்க் ஆலயமாகும்.
கயாவில் தட்சி ணார்க்கா,
ஆந்திராவில் அரசவல்லி,
குஜராத் தில் மொதேரா,
அஸ்ஸாமில் சூர்யபஹார்,
மத்திய பிரதேசத்தில் உனாவோ
போன்ற ஆலயங்கள் மிகவும் பிரசித்தமானவையாகும்
போன்ற ஆலயங்கள் மிகவும் பிரசித்தமானவையாகும்
சிவபெருமானின் மூன்று கண்களில் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும், நெற்றிக் கண் அக்னியாகவும் விளங்கும் ஐதீகத்தின் அடிப்படையில்தான் சிவாலயங்களுக்குள் இறைவனை நோக்கியபடி வலது- இடது புறங்களில் சூரியன், சந்திரன் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
நாளடைவில் சூரிய பகவானும் திருமாலும் ஒரு தெய்வாம்சத்தின் இருகூறுகள் என்ற அடிப்படையில் சூரியன்,
சூரிய நாராயணர் என்றே வழிபடப்படுகிறார்.
காயத்ரி மந்திரம் என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மந்திரம்தான். "செங்கதிரோன் ஒளியைத் தேர்கின்றோம்; அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!' என்பதே இந்த மந்திரத்தின் தமிழ்ப் பொருளாகும்.
இராமபிரான் இராவணனை வெற்றி கொள்ள சூரிய பகவானைத் துதிக்குமாறு அகத்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்ய ஹ்ருதயம் ஆகும்.
காயத்ரி மந்திரமும் ஆதித்ய ஹ்ருதயமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்கக் கூடியவையாகும்.
சூரியனுக்குரிய ரதசப்தமி நாளன்று அவருக்குரிய எருக்குச் செடியின் ஏழு இலைகளை உச்சந் தலையின்மீது வைத்துக் கொண்டு ஆறு, குளங்களில் மூழ்கி எழ வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம்..
வைவஸ்வத மனுவின் (விவஸ்வான் என்ற சூரிய பகவானின் வழித்தோன்றல்) ஆட்சியின் முதலாம் நாள் இந்த ரதசப்தமி நாளாகும்.
இது மகாசப்தமி என்றும்; ஜயசப்தமி என்றும் அழைக்கப்படுகிறது.
வேதாந்தத்தின் ஸாரமாகவும்
மங்களத்தை தருபவரகாவும் உலகிற்கு ஒளியினையும் ,
அழகினையும் அளிப்பவரும் ,
பரிசுத்தமானவரும் , நிலையான அறிவாகவும் ,
உலகை இயங்க வைக்கக் கூடியவரும் ,
அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவரும்,
மூன்று உலகிற்கும் சூடாமணி போல தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் ஹ்ருதயத்தில் பிரகாசிப்பவருமான
சூரிய பகவானை நான் வணங்குகிறேன்.
திருப்பதி - வைணவ ஆலயங்களில்
ரதசப்தமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
ரதசப்தமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
உற்சவருக்குரிய வாகனங்கள் சூரியப் பிரபை,
சந்திரப் பிரபையென்று இரண்டு உண்டு.
சந்திரப் பிரபையென்று இரண்டு உண்டு.
ரதசப்தமி நாளன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி சூரிய நாராயணராக மக்களுக்கு அருள்பாலிக்கிறார்!
Temple Wall with the Head of a Sun God by Mayan
படங்கள் அருமை...
ReplyDeleteநேற்று கேட்டேன், இன்று போட்டுவிட்டீர்கள் பதிவு.தகவல்களும் படங்களும் அழகு சேர்க்கின்றன.
ReplyDeleteநேற்று ஒரு நண்பர் இதைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார். படங்களுடன் உங்கள் விளக்கம் அருமை.. !
ReplyDeleteசூரியனார் பற்றிய தகவல்கள் மற்றும் விஷ்ணுவின் மறு வடிவம் போன்ற தகவல்கள் அருமை
ReplyDeleteரதசப்தமிப் பற்றிய விரிவான பதிவு. அருமை. படங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteஆடுதுறைக்கு அருகில் சூரியானார் கோவில் இருக்கிறது, இரண்டு மனைவியருடன் அழகாய் நடுநாயகமாய் இருப்பார் மூலவர். கார்த்திகை மாதம் மிக விஷேசம் இந்த கோவிலில்.
செங்கதிரோன் எல்லாவளங்களும் உங்களுக்கு அருள்வான். வாழ்த்துக்கள்.
ரதசப்தமி பற்றி அழகான படங்களுடன் சிறப்பான பதிவு.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteரதஸப்தமி பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள். அழகான படங்கள்.
ReplyDeleteசகோதரி...
ReplyDeleteஎன்னவென சொல்வது உங்களின் இந்த அரிய சேவையினை!
அறிந்திராத எத்தனை எத்தனை விஷயங்களை உங்கள் மூலமாக அறிகின்றோம்.
அருமை. அற்புதம்...
பகிர்தலுக்கு மிக்க நன்றி!
அருமையான பதிவு. நாங்களும் எருக்க இலையையும், அட்சதையும் வைத்து குளித்தோம்.
ReplyDeletesuperb post
ReplyDeleteரத ஸப்தமி பற்றிய விரிவான விளக்கங்களும் படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
கீழிருந்து நாலாவதாக உள்ள மிகப்பெரிய படம் இதுவரை திறக்கப்படவில்லை.
ReplyDelete>>>>>>
கீழிருந்து எட்டாவது படம் நல்ல அழகான கவரேஜ் ஆக உள்ளது.
ReplyDeleteஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>>>
//காயத்ரி மந்திரமும் ஆதித்யஹிருதயமும் நமக்கு சிறந்த ஆரோக்யத்தையும், அறிவுத்திறனையும் கொடுக்கக்கூடியவையாகும் //
ReplyDelete;)))))
கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
காலத்துக்கு ஏற்ற அழகான அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
oooooo
ஒரு நாள் தள்ளி பதிவிட்டாலும் சிறப்பான அரிய தகவல்கள்! அழகான படங்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDelete
ReplyDeleteசூரிய பகவானின் இன்னொரு பெயர்தான் அருணன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வழக்கம்போல் பதிவும் படங்களும் அருமை.
அருமையான பகிர்வு!!
ReplyDeleteஇத்தனை செய்திகளை எங்கிருந்து திரட்டுகின்றீர்கள். கிரணங்களின் அளவு செய்திகள். அழகிய புகைப்படங்கள்.
ReplyDeleteஉங்கள் ரத சப்தமி பதிவு படித்தவுடன் 'கர்ணன்' படத்தில் வரும் 'ஆயிரம் கரங்கள் நீட்டி...' பாடலும் காட்சியும் நினைவுக்கு வந்தன.
ReplyDeleteகச்சிதமாக விளக்கங்களுடன், புகைப்படங்களுடன் ரத சப்தமி பதிவு வெகு ஜோர்!
This is a topic that's near to my heart... Thank you! Where are your contact details though?
ReplyDeleteMy web blog: how to buy a car
நாளைய 19/02/2013 வலைச்சர அறிமுகத்திற்கு, என் அன்பான இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteMiha arumai Rajeswari.
ReplyDeleteI enjoyed all the pictures. Especially the brass like one very much.
Thanks for the post.
viji
அருமையான பதிவு ..சிறப்பான தகவல்கள் ...மிக்க நன்றி ....
ReplyDeleteநீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் ....தேங்காய் பூ எப்படி உருவாகிறது என்று சொல்ல வாய்ப்பு உள்ளதா ? உலக மக்கள் அனைவருக்கும் என்றும் மகிழ்ச்சியும் நன்றியும் ....