வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளியோடும் தொடர்வினைகளே!
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய
தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.
முழுமுதற்கடவுளான விநாயகர் கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மகான்களின் அறிவுரைப்படியும், சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் யோக விநாயகர் சிலையை உருவாக்கி. அமைதியான சூழலில் யோக வளம், தியானசக்தி, ஆன்மிக அறிவு ஆகியவற்றைப் பெறவும். நாடு நலம் பெறவும் வேண்டி யோக நிஷ்டை விநாயகரை பிரதிஷ்டை செய்து அமைக்கப்பட்ட அருமையான ஆலயம் ....
சபரிமலை ஐயப்பன் போன்று யோகநிலையில் காட்சியளிக்கிறார். கணபதி
இளஞ்சூரியனின் நிறத்தோடு, வலது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தியுள்ளார். தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலிப்பவர்.
நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சந்நிதியும்,
உள்ளே புற்று, ராகு சிலையும் உள்ளது.
உள்ளே புற்று, ராகு சிலையும் உள்ளது.
உட்பிரகாரத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.
:விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, அமாவாசை,பவுர்ணமி, வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை. ஆகிய நாட்களில் திருவிழாவாக சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன ,,யோகாவில் ஆர்வமுள்ளவர்கள் வந்து வணங்க வேண்டிய சிறப்பான ஆலயமாகத் திகழ்கிறது ..
காலை 6 -10, (வெள்ளியன்று பகல் 12),மாலை 5.30 - இரவு 8.30.
இருப்பிடம்: உக்கடத்தில் இருந்து (4.5 கி.மீ) பாலக்காடு சாலை வழியாக சுந்தராபுரம் செல்லும் வழியில் நிர்மலா மாதா பள்ளி அருகில் அமைந்துள்ளது
ஸ்ரீ விநாயகர் பழங்கள் - காய் கனி அலங்காரம்,
கோட்லாம்பாக்கம் கிராமம், பண்ருட்டி,
எத்தனை எத்தனை விநாயகர்கள்?
ReplyDeleteஇவ்வளவு வினாயகர்களின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.மிச்சம் மீதி இருந்தா எனக்கும் கொஞ்சம் குடுக்கட்டும்.அத்தனையும் அழகு
ReplyDeleteநர்த்தனமிடும் விநாயகரும் வாத்யமிடும்
ReplyDeleteசுண்டெலியும் வெகு ஜோர்.
இருப்பிடத் தகவல் பயனுள்ளது.
அனைத்தும் அழகு படங்கள்...
ReplyDeleteவிநாயகப் பெருமானின் தரிசனம் மிக அற்புதம் . அசத்தி விட்டிர்கள் பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு
ReplyDeleteமயில் மீது விநாயகர் அதுவும் ஸித்தி புத்தியுடன் ’த்ரிபுள்ஸ்’ போவது புதுமையாக உள்ளது.
ReplyDeleteமயில் பஞ்சராகாமல் இருக்கோணூம்! ;)
>>>>>>
பன்ருட்டி கோட்லாம்பாக்கம் கிராமத்து விநாயகருக்கு பழங்கள் காய்கனி அலங்காரம் சூபபரோ சூப்பர்.
ReplyDelete>>>>>>
//முழுமுதற்கடவுளான தொந்திப்பிள்ளையார் கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.//
ReplyDeleteகோவைக்காரர்களுக்கு மட்டும் அடிக்கடி அருள்பாலிக்கிறார் போலிருக்கிறது.
மற்ற ஊர்க்காரர்கள் குனியமுத்தூருக்குச்சென்று குனிந்து கஷ்டப்பட்டு இவரை தரிஸிக்கும்படியாக இருக்குமோ!
>>>>>>>>
ReplyDeleteவெள்ளைக்கொம்பனா!
தொப்பையப்பா !
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)))))
>>>>>>>>>
முதல்படத்தில் அது என்ன கழுகின் மேல் விநாயகரா?
ReplyDeleteபார்ப்பதற்குள் ஓடி ஓடிப்போய் விடுகிறாரே .... அந்தக்கழுகார்!!
>>>>>>>>>
ReplyDelete”ஸ்ரீ யோக விநாயகர்”
என்ற தலைப்பில் இன்றும் பல்வேறு தொந்திப் பிள்ளையார்களைக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.
மிகச்சிறந்த பதிவு.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான் இனிய நல்வாழ்த்துகள்
யோகம் தந்திடும் அழகான பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
ooooooo
காலையிலேயே விநாயகர் தரிசனம் மிக அருமை.
ReplyDeleteஉலகத்தின் நாயகன், முழு முதற் கடவுள் எத்தனை விதமான விநாயகன் .. அனைத்தும் மிக அருமை.
ReplyDeleteinfo about yoga vinayagar is nice
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteமிக அற்புதமான விநாயகர் படங்கள். தகவல்களும் அருமை.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமையான விநாயகர்களின் தரிசனம்...
ReplyDeleteகோட்லாம்பாக்கம் தான் என் அப்பாவின் பிறந்த ஊர்...
படங்கள் 'பளிச், பளிச்'
ReplyDeleteகட்டுரையும் அதே!
தல விவரங்களும், ஆலய திறப்பு
நேரங்களும் தந்திருப்பது சிறப்பு.
யோக விநாயகர் அனைவருக்கும் அருள் பாலிக்கட்டும்!
எல்லா வினாயகர்களிலும் மனத்தைக் கவர்ந்தவர் நடன விநாயகர் தான்! என்ன ஒரு எழில்! ரொம்பவும் ரசித்தேன்!
ReplyDeleteExcellent Post. Thanks.
ReplyDeleteRgds
Kartheesan