Sunday, February 17, 2013

ஓம் எனும் பிரணவம்







விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது  

“ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். 

ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர்
விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். 

ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். 

பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். 

அவன் அருளின் தோற்றம்  உண்டாக ஆங்காரம் ஒழிந்து 
சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். 

காயகல்பம் பெற அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.
உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. 

இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். 

இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுலகத்தார் அறியவில்லை. 

அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
"ஓம்" என தியானிப்பதால்  சித்திகள் கைகூடி ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு விளங்கும். 

இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை ஏற்படும்..
ஓங்காரத்தின் தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.

அகரவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், 

உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். 

மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.

ஓங்காரம், பிரவணம்.  எல்லா எழுத்து ஒலிகளுக்கும் முதலாக 
அமைந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. 

இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும். 

வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத் தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "

சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும்  " அ " உள்ளது. 

அத்துடன் எழுத்துக்களைக் குறிக்கும் போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் அ முதல் எழுத்தாக அமைகிறது ..

அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. 

வழிபடும் உருவாக 'சிவலிங்கமும்' 
ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. 

காதுகள் "ஓம்' என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன.


 "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்குள்ளே தான் இந்த அண்டமே அடங்குகிறது! வையத்திலுள்ளோரை வழிநடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது இந்தப் பிரணவ மந்திரமே. 



 ஓங்கி ஒலிக்கும் வலிமை வாய்ந்த- மிக எளிமையான மந்திரம் "ஓம்'. இந்து மதத்தின் இரு கண்களாக விளங்கும் சைவம், வைணவம் இரண்டுமே போற்றிடும் சக்தி வாய்ந்த பிரபஞ்ச மந்திரமாக இது திகழ்கிறது.


"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம்

பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய

பூர்ணமே வா வசிஷ்யதே'.

"அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே' என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள். பூரணத்தைப் பிரித்தால்கூட அதுவும் பூரணமாகவே இருக்கும். ஆக பரம்பொருள் பூரணமானது; அதன் ஒரு சிறு பகுதியும் பூரணமே.
 சுலோகத்தின் கருத்தை- பூர்ண சக்தியை கவியரசு கண்ணதாசன் கவிநயத்தில்,

"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு

புரியாமலே இருப்பான் ஒருவன்

அவனைப் புரிந்துகொண்டால்

அவன்தான் இறைவன்!'

என்று அழகாக விளக்கியுள்ளார்..


 அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே 
‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான 
ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. 

மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. 
mandala
மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

 " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். 

அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
om animated
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே

 என்று உணர்த்துகிறது -திருமந்திரம் 

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே

- என  திருமந்திரம் அறிவிக்கிறது .... 
.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓங்காரம் அம்மையப்பனை உணர்த்தும் எழுத்து.. 

ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், 

சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், 

ஜீவாத்துமாவையும் பரமாத்துமாவையும் மாயையையும் குறிக்கு மென்றும், கூறப்படுகிறது ...

25 comments:

  1. நல்ல விளக்கங்கள்... + அருமையான பாட்டு...

    ReplyDelete
  2. ஓம் எனும் மந்திரம் பற்றி இத்தனை விளக்கமாக படித்ததில்லை. பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  3. யோகக் கலைதன்னை கற்க சென்ற போது அவர்கள் கூறியது.. பாடல்களுடன் பொருள் விளக்கிய விதம் அருமை..

    ReplyDelete
  4. Very very nice post Rajeswari. I like the Panjaboodha tadhvam as Animation. So great
    viji

    ReplyDelete
  5. If you are going for most excellent contents like me, just pay a quick visit this
    web site every day because it provides quality contents, thanks

    My webpage: Fake Oakley Sunglasses

    ReplyDelete
  6. சகோதரி! பிரணவத்தின் விளக்கம் பிரமாதம். தங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். விநாயகர் அகவலை தெளிவான விளக்கத்துடன் ஒரு தனி பதிவு இட்டால் நன்மக்கள் அதை கண்டிப்பாக உணர்வார்கள் . பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  7. புதிய தகவல்கள் வெகு சிறப்பாக விளக்கிய விதம் அருமைங்க.

    ReplyDelete
  8. ஓங்கார விளக்கம் அற்புதம் சகோதரி...

    அழகிய படங்களுடன் அருமையான பதிவு.

    உள்வாங்கி உய்ந்திட உயர்வான உபாயம் இதுவே.

    நன்றிகள் பல

    ReplyDelete
  9. "ஓம் என்னும் பிரணவம்"

    தலைப்பு + படங்கள் அத்தனையும் அருமையாக உள்ளன.

    >>>>>>

    ReplyDelete
  10. //விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது

    “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள்.//

    ஆம். மிகச் சரியாகவே பொருந்தியுள்ளன. ;)

    //ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர்
    விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான்.

    ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான்.

    பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.//

    வெகு அற்புதமான விளக்கங்கள்.

    நான்காவது படத்தில் காட்டியுள்ள வடமொழியில் சுழலும் “ஓம்” அசத்தலாக உள்ளது.

    >>>>>>>

    ReplyDelete
  11. /காதுகள் "ஓம்' என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன.//

    வெகு அழகோ அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ! ;)))))

    //"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய
    பூர்ணமே வா வசிஷ்யதே'.//

    "அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே' என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள். பூரணத்தைப் பிரித்தால்கூட அதுவும் பூரணமாகவே இருக்கும். ஆக பரம்பொருள் பூரணமானது; அதன் ஒரு சிறு பகுதியும் பூரணமே.//

    இதைப்படித்ததும் பூர்ண சந்தோஷம் ஏற்பட்டது.

    >>>>>

    ReplyDelete
  12. உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் ..........

    அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறும் விளக்கத்தினை விளக்கியுள்ளது அருமை.

    மூச்சுப்பயிற்சிகள் பற்றியும், இதர விஞ்ஞான அறிவியல் விளக்கங்களையும், வெகு அழகாக பல்வேறு மெற்கோள்களுடன் கூறியுள்ள இந்தத்தங்களின் பதிவு மிகவும் அற்புதம்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooooo

    ReplyDelete
  13. "ஓம்" பற்றிய நல்ல விளக்கங்கள் + படங்களுடன் த‌ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  14. ஓம் என்னும் பிரணவத்தை பற்றி விளக்கம் அருமை.

    ReplyDelete
  15. பிரணவ விளக்கம் வெகு சிறப்பு! படங்களும் தேவையான மேற்கோள்களும் அளித்து சிறப்பாக விளக்கி பகிர்ந்துள்ளீர்கள்! நன்றி!

    ReplyDelete
  16. ஓம் பற்றி விரிவாக விளக்கியதற்கு நன்றி.
    படங்கள் ஸூப்பர்.

    ReplyDelete
  17. பிரவணத்தின் விளக்கம் மிக அருமை. பாடல் பகிர்வும் அருமை.
    ”பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு” பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.

    அதிகாலை பொழுதிலும், இரவிலும் ஓம்’மந்திரத்தை உச்சரித்தால் எல்லா ந்ன்மைகளும் கிடைக்கும் நீங்கள் சொல்வது போல்.நன்றி நல்ல பதிவுக்கு. வாழ்த்துக்கள்.


    ஓம் என்று உச்சரிக்க
    ஒன்றிரண்டாய் விட்டதாங்கே
    ஓம் அதற்கு மூல ஒலியே
    பிரண்வமாம்.

    ஓம் என்று செபிப்பவனைப் பக்தன் என்போம்
    உட்பொருளை உணர்ந்தவனை ஞானி என்போம்.
    மகரிஷி
    வேதாத்திரி மகரிஷி.

    ReplyDelete
  18. எவ்வளவு விளக்கங்கள்! அனைத்தும் அருமை.படங்கள் மனதில் கொள்ளை கொண்டன.
    இன்று ரத சப்தமி பற்றிய பதிவு இருக்கும் என்று நினைத்தேன்.

    ReplyDelete
  19. மிக அழகான விளக்கங்கள்.
    நமது சுவாசமும் ப்ரவண மந்திரமும் இயைந்து இயங்குவது எல்லோரும் உணர வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  20. அழகான படங்களுடன் அருமையான பதிவுகள். எப்போதும் உங்களால் எப்படி முடிகிறது

    ReplyDelete
  21. பிரணவ மந்திரத்தைப் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. படங்கள் அறொஉதம்.

    ReplyDelete
  22. மன்னிக்கவும்,படங்கள் அற்புதம்.

    ReplyDelete
  23. விரிக்கப் பெருகும் பிரணவத்தை எங்கள் புரிதலுக்கேற்ப விளக்கங்களுடன் கண்ணையும் கருத்தையும் நிறைக்கும் படங்களுடன் உன்னதப் பதிவு!

    ReplyDelete
  24. a fine component.
    if u dnt mind pls explain it by taking the scientific researches and explanations.

    ReplyDelete
  25. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete