Friday, February 15, 2013

அருள்மழை பொழியும் அன்னை





அன்னை ஸ்ரீரங்கநாயகி! தனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்திருக்கிறாள்..
அன்னையின்  திருவடிகள் படுவதால், அரங்கன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது; 
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது. 
இப்படிப்பட்ட அன்னையின் திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன. 

தாமரை மலர் போன்றுள்ளஅன்னையின் திருவடிகளை  சரணம் என்று வணங்குகின்றேன். 

திருமாலின் முதல் அவதாரமாகிய மச்சாவதார காலத்திலேயே தோன்றியது என்பதால்,விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவரங்கம் “ஆதிரங்கம்” என்றும் உத்தரங்கம் என்றும் போற்றப்பெறுகின்றது.....
ஆதிகாலத்தில் சோமுகன் என்னும் அசுரன், தேவர்கள வெல்லக் கருதி, வேதங்கள அபகரிக்க, அதனால் தேவர்களும், முனிவர்களும்: மிகுந்த வருத்தமுற்று, திருப்பாற்கடல் சென்று, திருமாலிடம், வேதத்தை மீட்டுக் கொடுக்குமாறு முறையிட்ட வேண்டுகோளை ஏற்ற திருமால், கடலில் ஒளிந்து கொண்டிருந்த அசுரன சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு, அதனை பிரம்மாவுக்கு உபதேசம் செய்த திருத்தலமே திருவரங்கம்.

கிருத யுகத்தில், சுருத கீர்த்தி என்ற தொண்டை நாட்டு மன்னன், புத்திர பாக்கியம் இல்லாமல் மிகவும் வருந்தியபோது, நாரதர் கட்டளையை ஏற்று, இந்தத் திருவரங்கத் தலத்தில் பள்ளி கொண்ட அரங்கநாதப் பெருமாயைத் தன் மனவியுடன் வணங்கி, பெருமாள் அருளால் நான்கு புதல்வர்களைப் பெற்றான் என்றும் தலபுராணம் கூறுகிறது. 

பிள்ளைச்செல்வம் இல்லாதோர், இத்திருவரங்கப் பெருமாளை வணங்கினால், பிள்ளைச் செல்வம் உண்டு என்பது ஐதீகம்.

சந்திரன் ஒரு சமயம், தன் மனவியரின் சாபத்தால் ஒளி மங்கிக் காணப்பட்டான். 

தேவர்கள் ஆணைப்படி, இந்தத் தலத்திற்கு வந்து, பள்ளிகொண்ட பரந்தாமன் அருளால், மீண்டும் பேரொளி பெற்றான் சந்திரன்.
இத்தலத்தில் சந்திரபுஷ்கரணி என்ற புனிதத் தீர்த்தக்கரயில், சந்திரன் தவம் மேற்கொண்டதாக தலபுராணம் சாற்றும்.

 தேவர்கள், தம் திவ்ய ஸ்தானத்திற்கே எழுந்தருள பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமியைப் பிரிய விரும்பாத முனிவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, திருமால், விஸ்வகர்மா என்ற தேவதச்சன அழைத்து தம்மைப்போல் ஒரு திவ்யமங்கள விக்கிரகத்தை நிர்மாணிக்கும்படி பணித்தார்.

விஸ்வகர்மாவும் அவ்வாறே அமைக்க, திருமால் அந்த பிம்பத்தில் சாந்நித்யமாகி, இந்தத் திருவரங்கத் தலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக சேவை சாதித்து வருகின்றார் என்றும் தலபுராணம் கூறுகிறது.
சிங்கவர மலைக்கோவில்
விழுப்புரம் மாவட்டம், பெண்ணை ஆற்றங்கரைசெந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள் சூழ்ந்த வளமான தென்புறத்தில், மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில், திருவரங்கம் பள்ளி கொண்ட அரங்கநாதப் பெருமாள் ஆலயம் அமந்துள்ளது. 

 ஆலயத்தில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் சன்னதி, ரங்கநாயகித் தாயார் சன்னதி, கண்ணன் சன்னதி, வரதர் சன்னதி, விஸ்வக்சேனர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, வேதாந்த தேசிகர் சன்னதி, நவராத்திரி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், அழகு கொஞ்சம் ராமர் சன்னதி, ஆலயத்தின் நேரெதிரே சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் சன்னதி ஆகியன அமைந்துள்ளன. 

கோதண்டராமர் சன்னதியில் எழில் கொஞ்சும் பவ்ய ஆஞ்சநேயர் (சாந்தம் ததும்பும் ஆஞ்சநேயர்), இரண்டாம் நுழவாயிலில் வீர ஹனுமான் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன...
 ஆலயத்தில், பள்ளி கொண்ட சயனப்பெருமாள், திருச்சி ஸ்ரீரங்கப்பெருமாளை விட மிகவும் நீளமாக, முப்பது அடியில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

முதல் பிராகாரம் என்று அழைக்கப்பெறும் ஸ்ரீரங்கநாதர் மூலஸ்தான வெளிப்பிராகாரத்தில், தும்பிக்க ஆழ்வார், ப்ரத்யும்னன், பரவாசுதேவன், பரமபதவாசன், துர்க்காதேவி ஆகியோர் காட்சி தருகின்றனர். முதல் வாயிலில், மணியன், மணிகர்ணன் என்னும் இரண்டு துவார பாலகர்கள் காவல் காக்கும் காட்சியும் உண்டு.

ஸ்ரீரங்கம், திருமெய்யம் ஆகிய தலங்களில் உள்ள சயனப்பெருமாள் மேற்குத் திசையில் தலை வைத்திருப்பார். 

ஆனால் இங்குள்ள சயனப் பெருமாள், தெற்குப்பக்கம் தலை வைத்து, கிழக்கு முகம் நோக்கி, புன்முறுவல் பூத்திட, வலக்கையத் தலையணையாய் வைத்தும், இட கையால் தன் நாபிக் கமலத்தில் தோன்றிய நான்முகனுக்கு வேத உபதேசம் செய்யும் காட்சியும் காணலாம்.
ரங்கநாதர், ஸ்ரீதேவி (திருமகள்) மடி மீது அன்புடன் சயனித்திருக்க, பூதேவி அவருடைய ஒரு திருவடியை வருடியபடி காட்சி தருகின்றாள். இன்னோர் திருவடி மீது ஆதிசேடனின் வால் நுனி வளைவு படிந்துள்ளது. 

சயனப் பெருமாளின் வல கையத் தாங்கிய வண்ணம் பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருடாழ்வார் காவல்புரியும் காட்சியும் உண்டு. 

ஐம்பொன்னால் ஆன உற்சவமூர்த்திகளான ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரும் மூலஸ்தானத்தில் காட்சி தருகின்றனர். 

இந்தப் பெருமாளுக்குத் தைலக் காப்பு அலங்காரமும் உண்டு. 
மற்ற அபிஷேகங்கள் இல்லை. 

உற்சவ மூர்த்திகளுக்கே அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் உண்டு.

இந்த பெருமாளை தரிசித்தால் 108 திவ்யதேச பெருமாள்களையும் ஒருசேர தரிசித்தால் ஏற்படும் பலன்களைப் பெறமுடியும் என்பது நம்பிக்கை. 

மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் கண்ணாடி சேவை நிகழ்ச்சியையும் சிறப்பாகக் காணலாம்.

ஜெயஸ்ரீ, விஜயஸ்ரீ என்ற இரண்டு துவார பாலகிகள் காவல் காத்திட, ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் சன்னதி, அபூர்வ சிற்ப வேலப்பாடுடன் காட்சி தரும் மாட்சியும் உண்டு. 

அருள்மழை பொழியக் காட்சி தரும் ஸ்ரீரங்கநாயகி அருகே, ஸ்ரீரங்கவள்ளியையும் தரிசனம் செய்யலாம். 

ஸ்ரீரங்கநாயகியை தரிசித்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும், பிள்ளைச் செல்வம் மலரும் என்பது ஐதீகம்.
 கண்ணன் சன்னதி குறிப்பிடத்தக்க. இந்த ஷேத்ரம் கிருஷ்ணாரண்ய ஷேத்ரம் என்று அறியப்படுகிறது ...

அனந்த சயன அரங்கனை தரிசித்து  வாழ்வில் வளம் பெறலாம் ...

திருச்சி மாவட்டத்திலுள்ள திருவரங்கம் திருமாலின் ஏழாவது அவதாரமாகிய ராமாவதார காலத்தில் தோன்றியது. 

இந்த  திருவரங்க திருத்தலம் விழுப்புரம் மாவட்டம் திருவண்ணாமலைக்கு அருகே உள்ளது.


நம்மாழ்வார் திருவரங்கம் பெரியகோயிலில் 
ஸேவை சாதிக்கும் அற்புதக்கோலம் ..

17 comments:

  1. திருவரங்கம் என்றதும் ஓடி வந்தேன்.(திருக்கோயிலூர்)மணலூர்பேட்டைக்குப் பக்கத்தில் உள்ளது.அடிக்கடி வாய்ப்பு கிடைத்தும் போக முடியவில்லை. போகாத மனக்குறை இன்று உங்கள் பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது.

    கண்கொள்ளாக்காட்சி,மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. திருவரங்கம் என்றதும் ஓடி வந்தேன்.(திருக்கோயிலூர்)மணலூர்பேட்டைக்குப் பக்கத்தில் உள்ளது.அடிக்கடி வாய்ப்பு கிடைத்தும் போக முடியவில்லை. போகாத மனக்குறை இன்று உங்கள் பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது.

    கண்கொள்ளாக்காட்சி,மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. ”அருள் மழை பொழியும் அன்னை”க்கு

    அடியேனின் அன்பான சாஷ்டாங்க

    நமஸ்காரங்கள்.


    வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற வெற்றிகரமான பதிவு .;)

    >>>>>>>>>>

    ReplyDelete
  4. இன்று அதிகாலை மிகச்சரியாக 10.45 க்கு துள்ளி எழுந்து விட்டேன், என் படுக்கையிலிருந்து.

    முதலில் வழக்கம்போல உங்கள் பதிவினை கண்டு களிக்கும் பாக்யம் பெற்றேன்.

    வரிசையாக, அழகாக, ரஸித்து ருஸித்துக் கருத்திடத்தான் நினைத்தேன்.

    ஆனால் சுமார் இரண்டு கிலோ எடையுள்ள கெட்டியான ஊட்டி முட்டைக்கோஸ் இங்குள்ள என் மேலிட, அம்பாளினால் என்முன் சமர்பிக்கப்பட்டுள்ளது.

    அது ரொம்பப்பெரிசூஊஊஊஊஊஊ.

    நல்ல வெயிட்டூஊஊஊஊஊ.

    பொடிப்பொடியாக டைமன் கற்கண்டு போல நான் வெட்டி முடிக்க [வெட்டி முறிக்கும் வேலை என்று நீங்கள் முணுமுணுப்பதும் என் காதிலும் விழுகிறதூஊஊஊஊ] வெகு நேரம் ஆகலாம்.

    அதனால் பிறகு மீண்டும் வருவேன்.

    ஆனால் எப்போது வருவேன் என எனக்கே தெரியாதூஊஊஊஊ.

    அதுவரை அம்பாள் என்னை கோச்சுக்கக்கூதாதூஊஊ
    .
    Bye for Now.

    >>>>>>>

    ReplyDelete
  5. ஒரு கையால் பிடிக்க முடியாமல் சும்மா கிண்ணுன்னு மோத முழங்க உள்ளதூஊ.

    என் கத்திக்கே கட்டுப்படாததாக இருக்கும் போல உள்ளதூஊஊ.

    இருந்தாலும் நான் விடுவேனா! என்ன,

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    பொடிப்பொடியாக வெட்டி வீழ்த்திடுவேனாக்கும் அந்த முரட்டு சைஸ் முட்டைக்கோஸை. ;)

    >>>>>>



    ReplyDelete
  6. திருவரங்கம் பற்றி அழகான படங்களு டன் அறியதந்தமைக்கு மிக்க நன்றி. அந்த ரங்கனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

    ReplyDelete
  7. இதோ மீண்டும் மீண்டு வந்துட்டேன்.

    அருள் மழை பொழியும் அன்னைக்கு அன்பான வந்தனங்கள்.

    4 + 4 = 8 ஒளிரும் விளக்குகளும் அவற்றிற்கு இடையே காட்டப்பட்டுள்ள படமும் சும்மா ஜொலிக்கிறதும்மா! ;))))

    காணக்கண்கோடி வேண்டும்.

    அழகோ அழகு.

    >>>>>>>

    ReplyDelete
  8. வைஜயந்தி வாடாமல் இருப்பதற்கான காரணம் அறிந்தோம்.

    அற்புதம் தான் அன்னையின் திருவடி மஹிமை.

    வீட்டிற்கே, அன்னை தன் காலடி வைத்துப் பிரவேசித்து விட்டால் ........ ;)))))

    சுபிட்ஷட்த்திற்கு கேட்கவா வேண்டும்.

    //தாமரை மலர் போன்ற அன்னையின் திருவடிகளை சரணம் என்று வணங்குகின்றேன்//

    அதே ..... அதே ! சபாபதே !!

    >>>>>>>

    ReplyDelete
  9. அந்தக் கோதண்டம் முரட்டு மாலைகளால் மறைக்கப்பட்டிருந்தாலும், அந்த ஸ்ரீ கோதண்டராமரும், ஸீதையும், லக்ஷ்மணரும் உள்ளதாகக் காட்டியுள்ள படம் கொள்ளை அழகு.

    அதன் மேல் உள்ள பத்தியில் [Paragraph] ஒரு சில எழுத்துப்பிழைகள் உள்ளன போலத் தெரிகிறது.

    பதிவின் மேல் யாரும் கண் திருஷ்டி போடாமல் இருக்கவோ என்னவோ !

    சாந்தம் தம்பும் = ’சாந்தம் ததும்பும்’ அல்லது ’சாந்தம் தவழும்’

    [இதை சாந்தமாகவே ஏற்றுக்கொள்ளவும்]

    அமந்துள்ளன = அமைந்துள்ளன

    >>>>>>

    ReplyDelete
  10. //இந்தப்பெருமாளை தரிஸித்தால் 108 திவ்யதேசப்பெருமாள்களையும் ஒருசேர தரிஸித்தால் ஏற்படும் பலன்களைப் பெறமுடியும் என்பது நம்பிக்கை.//

    ஆஹா, இந்தத்தங்களின் பதிவின் மூலம் நாங்களும், [உலகில் சுமார் 108 பேர்கள்] இப்போது அந்தப்பெருமாளை தரிஸித்து விட்டோம்.

    108 திவ்யதேசப்பெருமாள்களையும் ஒருசேர தரிஸிக்க வைத்த புண்ணியம் உங்களுக்கு மட்டுமே.

    வாழ்க வாழ்கவே ! ;))))

    >>>>>>

    ReplyDelete
  11. //ஸ்ரீரங்கநாயகியை தரிஸித்தால் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பிள்ளைச்செல்வம் மலரும் என்பது ஐதீகம்.//

    இந்த வரிகளுக்குக்கீழே காட்டியுள்ள விரிந்த தாமரைப்பூவும், நடுவே தெரியும் மொட்டும், அதைச்சுற்றியுள்ள மஞ்சள் மகரந்தமும் அருமையோ அருமை. ;)

    உங்களுக்கே ஸ்ரீரங்கநாயகி என்றொரு பெயர் உண்டு தானே! ;))))))

    [என் மாமியாருக்கும் ராஜலக்ஷ்மி + ரெங்கநாயகி என இரண்டு பெயர்கள் உண்டு]

    உங்கள் பதிவினை தரிஸித்ததால் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படட்டும்.

    பேரன்/பேத்தி; கொள்ளுப்பேரன்/கொள்ளுப்பேத்தி என பிள்ளைச்செல்வங்கள் மலர்ந்து கொண்டே இருக்கட்டும்.

    >>>>>>>>

    ReplyDelete
  12. இன்றைய எல்லாப்படங்களும், விளக்கங்களும் அழகோ அழகு தான்.

    இன்று லக்ஷமஞ்சள் விநியோகம் பற்றிய சிறப்புப் பதிவாக இருக்கும் என நினைத்து சற்றே ஏமாற்றம் அடைந்தேன்.

    அதனால் பரவாயில்லை.

    அற்புதமாகத்தந்துள்ள பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ஜொலிக்கும் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    oooooo

    ReplyDelete
  13. Heya i'm for the first time here. I found this board and I find It truly useful & it helped me out a lot. I hope to give something back and help others like you aided me.

    my website: chi flat iron

    ReplyDelete
  14. அரங்கநாதர் ரங்க நாயகி தாயார் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  15. சகோதரி...அருமையான பதிவு.

    ஸ்ரீரங்க நாயகியையும் ரங்கநாதப் பெருமாளையும் அவர்களின் ஷேத்திரப்பெருமைகளையும் மனம் நிறைய படித்து மகிந்தேன்.
    இரண்டுதரம் அங்கு வந்து பெருமாளையும் பிராட்டியையும் தரிசிக்கும் பாக்கியமும் கிடைக்கப்பெற்றவள். இருப்பினும் உங்கள் மூலமே இத்தனை சிறப்புக்களையும் அறிய முடிந்தது. அற்புதமான அழகிய படங்கள். தொகுத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

    ஆனால் இன்று ஸ்ரீ ரங்கநாதர் என்னிடம் மறைந்து விளையாடிவிட்டார். காலையிலிருந்து உங்கள் பதிவைக் காணாமல் மனதில் கவலை மூண்டுவிட்டதெனக்கு.
    வழக்கமாக ப்ளொக்கர் டாஷ்போர்ட்டில் புதுப்பதிவுகள் வந்தவுடன் காண்பிக்கும். இன்று அப்படி காண்பிக்காதமையால் உங்கள் புதுப்பதிவு இன்றில்லை என நினைத்து இப்பொழுதுதான் உங்கள் வலைப்பூவில் பார்க்க, ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதர் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  16. படங்களும் பதிவுகளும் மிக மிக அருமை சொல்ல வார்த்தையே இல்லை

    ReplyDelete
  17. ஸ்ரீரங்கநாயகியின் அருள் பற்றி உங்கள் பதிவில் படித்து ஆனந்தம் அடைந்தேன். அவள் திருவடி அல்லால் வேறு புகல் எது நமக்கு?

    பலபல புதிய தகவல்கள் இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.

    திவ்ய தம்பதிகளின் படங்கள் அனைத்தும் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து.

    ReplyDelete