மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.
தை மாத அமாவாசையன்று அபிராமிபட்டர் அபிராமி அந்தாதி
பாடிஅம்பாளின் அருள்பெற்றார்
சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண
காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.
தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு,
புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை
முக்கியமானது
சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு
சிரார்த்தம் என்று பெயர்.
மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது சிரார்த்தச் சடங்கு பொருளுடையதாகும்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும்
தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
அன்றைய தினம் ஸ்ரீநெல்லையப்பர்- காந்திமதியம்மன்
கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக
பிரகாச ஜோதியாகவே காணப்படும்.
ஸ்ரீ நெல்லையப்பர்-காந்திமதியம்மன்ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.
முன்னோர் வழிபாடு மிக முக்கியமானது என்கிறார்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் ...
தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை
நிச்சயம் வழிபட வேண்டும். அதற்குரிய சிறந்த நாள் அமாவாசை.
பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன் தரும்.
தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை அமாவாசை பிரசித்தி பெற்றது.
அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி இறந்த தங்களது முன்னோர்கள் நினைவாக கடற்கரையில் புரோகிதர்கள் மூலமாக
தர்ப்பணம் கொடுக்கும் புனித நாள...
ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி. ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்வார்கள்...
ஸ்படிகலிங்க பூஜை சிறப்புவாய்ந்தது ...
ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி விசேஷ தீபாராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இரவு ஸ்ரீராமர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சி கண்கொள்ளாக்காட்சியாகத் திகழும் நாள் ...
ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளிலும் நீத்தார் வழிபாடு செய்வது எங்கள் குடும்ப வழக்கம்.
ReplyDeleteஅருமையான தகவல்கள்... படங்கள்.. நன்றி...
ReplyDeleteவெள்ளியன்று காலையிலேயே கோவிலுக்கு போகாமலேயே தெய்வ தரிசனம் கிடைக்கச் செய்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅருட் சுடர் அன்னையின் அருள் எங்களுக்கும் கிடைக்கும் விதமான பதிவு. மிக்க நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteவிளக்கம் அறிந்தேன் அம்மா...
ReplyDeleteஇன்றைய “தை வெள்ளிக்கிழமை”க்கும், நாளைய “தை அமாவாசை”க்கும் ஏற்ற
ReplyDeleteதங்கமான பதிவு.
மீண்டும் பிறகு வருவேனாக்கும். ;)))))
>>>>>
இன்று எங்கள் ஊரிலும் புனுகீஸ்வரர் கோவிலில் இலட்சதீபம். 19 ஆண்டுகளாய் செய்து கொண்டு இருக்கிறார்கள். தை மாதம் கடை வெள்ளியில் செய்வார்கள்.
ReplyDeleteஅதில் என் கணவர் தொடர்ந்து 19 வருடமாய் தீபம் ஏற்றும் சிறப்பை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள், இறைவன் அருளால்.
தை அமாவாசைப்பற்றி விவரமாய் அதன் நன்மைகளையும் அழகாய் படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
”அருட் சுடர் அன்னை” க்கு என் அன்பு வந்தனங்கள்.
ReplyDeleteஇன்று தை வெள்ளிக்கிழமை
இன்று மாத சிவராத்திரி
இன்று பிரதோஷம் என்ற நல்ல நாள்
இன்று ’தை’ உத்திராடம்
என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய
என்பெரிய அக்காவுக்குப் பிறந்தநாள்.
அவங்களுக்கு வயது: 74
அத்திம்பேருக்கு வயது: 84
உத்தம தம்பதியினர்.
அபார சம்சாரி.
இன்று ப்கல் 12 மணிக்குப்பிறகு என்
பெரிய அக்கா லக்ஷமஞ்சள் வினியோகம்
ஆரம்பிக்க இருக்கிறாள்.
ஒவ்வொருவருக்கும் 100 வீதம் 1000 சுமங்கலிகளுக்கு.
இன்று தங்களின் இந்தப்பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
>>>>>>>
ஈரோட்டிலிருந்து ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து நல்ல தரமான குண்டு மஞ்சளாக மூட்டை மூட்டையாக லாரியில் வரைவழைக்கப்பட்டு, என் பெரிய அக்கா வீடே மஞ்சள் பூசிய வண்ணம் கடந்த ஒரு வாரமாக அமர்க்களப்பட்டு வருகிறது.
ReplyDeleteலக்ஷமஞ்சள் விநியோகம் என்ற பிரார்த்தனை பற்றியும், இதன் மகத்துவம் பற்றியும் அடுத்த வெள்ளிக்கிழமை தாங்கள் ஒரு தனிப்பதிவு தரலாம். எல்லோரும் தெரிந்து கொள்ள ஏதுவாகும்.
“மஞ்சள் முகமே வருக!! “
>>>>>>>
எல்லாப்படங்களுமே வழக்கம் போல அழகோ அழகு.
ReplyDeleteஅதுவும் அந்த முதல் இரண்டு படங்களும், கீழிருந்து மூன்றாவது படமும் அமர்க்களமாக உள்ளன.
"பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே!"
ப த் ம பா த மே ..... தான்.
;))))))))))))))))))))))))))))
அதனால் மட்டுமே நானும் பணிந்துள்ளேனாக்கும். ;)
>>>>>>>>
தாங்கள் சொல்வது போல சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டிய சிரார்த்த காரியங்கள் போன்ற
ReplyDelete”தை அமாவாசை” நெருங்கி விட்டது. அதற்கான முன்னேற்பாடுகளில் நான் இறங்க வேண்டும்....... இப்போதே.
மேலும் என் வீட்டு ஜன்னல் கம்பிகள், ”என்னைபற்றி ஏதோ எழுதினாயே ... பிறகு அது என்னாச்சு?” என மிரட்டுகின்றன.
அதையும் நாளை இரவுக்குள் முடித்து நிறைந்த நாளான தை அமாவாசை இரவுக்குள் வெளியிட வேண்டியுள்ளது.
இது போல பல அவசர அவசியக்காரியங்கள் நான் கவனிக்க வேண்டியுள்ளன.
நடுவில் என் அக்கா வீட்டுக்குச்சென்று வர வேண்டும்.
அங்கு போனால் என்னை அவள் அவ்வளவு சுலபமாக விடமாட்டாள். அன்பின் எல்லை அவள் ... தங்களைப்போலவே. ;)
9th + 10th இரு நாட்களும் இங்கு என் வீட்டருகே ஸ்ரீ ராதா கல்யாண பஜனைகள் வேறு விடிய விடிய அமர்க்களப்பட இருக்கின்றன.
அதனால் என் வருகையில் நாளையும் மறுநாளும் கூட மிகுந்த் தாமதங்கள் இருக்கக்கூடும்.
கோச்சுகாதீங்கோ.
இது என் அன்பு அம்பாளின் தகவலுக்காக மட்டுமே.
>>>>>>>>.
மிகச்சிறந்த இந்தத்தங்களின் பதிவுக்கு என் பாராட்டுக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
லக்ஷ மஞ்சள் கணக்கில் நன்றியோ நன்றிகள்.
oooooo
தை வெள்ளியில் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteஅபிராமி தரிசனம் அருமை!
ReplyDeleteதனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனந்தரும்... இதுதான் தினமும் விநாயகருக்கு அடுத்தபடியாக அபிராமியை வேண்டி என் வாயில் வரும் தோத்திரம்.
தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமானதுமான தை அமாவாசை பற்றியும் சிறந்த விளக்கங்கள்.
அற்புதமான அபிராமியின் படங்கள். மனதிற்கு அமைதியைத்தரும் அழகிய அருமையான பதிவு!
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன் நன்றி!
ReplyDelete
ReplyDeleteபதிவினைப் படிக்கும்போது, திருக்கடையூர், ராமேஸ்வரம் நெல்லை என்று சென்றுவந்த இடங்கள் பற்றிய நினைவுகள் நெஞ்சில் நிறைகிறது.வாழ்த்துக்கள்.
அறிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
ReplyDeleteஅபிராமியின் கடைக்கண் பார்வைக்காக எல்லோருமே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteதிருக்கடையூர் அபிராமி படமும் பதிவும் மிகவும் அருமையாக இருந்தன.
ராஜி
அப்போதைக்கப்போதைய ஆன்மீக தினங்களை தவறாமல் நினைவு படுத்தும் நல முயற்சி!
ReplyDeleteதை வெள்ளிக்கிழமை அன்னையின் வழிபாடு, தை அமாவாசை பித்ருக்களின் வழிபாடு இரண்டையும் சேர்த்து பதிவாக்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஎல்லா அம்பாளையும் ஒரே இடத்தில், அதுவும் வீட்டில் உட்கார்ந்தபடியே தரிசனம் செய்த திருப்தி.
நன்றி நல்ல நல்ல விஷயங்களை எங்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு!
அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
தை அமாவாசை சிறப்பு பதிவு அருமை !
ReplyDeleteபுது விஷயங்கள் பல தெரிந்துகொண்டேன்.
ReplyDelete