திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே ஒரே கருவறையில் சுயம்புவாக இருக்கும் அதிசய அமணீஸ்வரர் ஆலயம்
கற்பக ஆற்றுக்கு நடுவே பாறையின் மீது அமைந்துள்ளது. ..
கோவைமாவட்ட ம் நெகமம் அருகிலுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ளது
ஆற்றில் நீர் செல்லும் காலங்களில், கோயிலை சூழ்ந்தபடி நீர் செல்லும்
நீண்ட காலமாக பாம்பு ஒன்று வசிப்பதாகவும், அது சில சமயங்களில் சுவாமி கருவறைக்குள் சென்று இறைவனை சுற்றுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மும்மூர்த்திகளும் சுயம்புவாக, மேற்கு திசை நோக்கியபடி, ருத்திராட்ச மேனிகொண்டவர்களாக அருளுகின்றனர்.
நடுவே, சிவன் வீற்றிருக்க வலதுபுறம் பிரம்மா, இடதுபுறம் விஷ்ணு தனித்தனியேயும், மகாமண்டபத்தில், பீடத்தில் விநாயகருடனான அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியபடியும் அருள்பாலிக்கின்றனர் ...
தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக சுவாமியை வணங்க, தேவர்கள் அடிக்கடி வருவராம். இதனால், தேவநகர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் தேவனாம்பாளையம் என்றானது.
இங்கு முன்னோர்களுக்கு அதிகளவில் திதி கொடுக்கப்படுகிறது.
வெள்ளைக்கல் நந்தி, அஷ்டதேவதைகள், விநாயகர், முருகன், அர்த்தமண்டபத்தில் எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியபடி ருத்ரதாண்டவர், காளியின் சிலைகள் கலையம்சத்துடன் சிறப்பாக தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாவின் கற்பை சோதிப்பதற் காக வந்த மும்மூர்த்திகளையும், குழந்தைகளாக்கி பால் புகட்டிய தலம்.
அனுசுயாவை சோதிக்கச்சென்ற மும்மூர்த்திகளும் சுயம்புவாக உள்ளனர்.
விநாயகருக்கென தனிச்சன்னதி இல்லை.
அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் பாதத்தின் கீழ் பீடத்தில் சதுர் விநாயகர்களாக (சதுர் நான்கு) உள்ளனர்.
விநாயகர்களுடன் முனிவர் ஒருவரும் தவநிலையில் இருக்கும் அமைப்பு அபூர்வமானது ...
ஒரேசமயத்தி ல் அம்பாளையும்அவருக்கு கீழ் இருக்கும்
விநாயகர்களையும் வணங்கினால் தாய், பிள்ளைகளுக்கு
இடையேயான மனக்கசப்பு தீரும்,
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வணங்கினால் சுகப்பிரசவ ம் ஆகும் என்பது நம்பிக்கை.
பொள்ளாச்சி யில் இருந்து 18 கி.மீ., துõரத்தில் உள்ளது ..
கோவையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இக்கோவில் சுமார் 2000 வருடங்கள் பழமையான கோவில் ஆகும்.
அர்த்தமண்டபத்தில் எட்டு கைகளில் ஆயுதங்கள்
ஏந்தியபடி ருத்ரதாண்டவர்
நல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteஒரு நாள் சென்று வரவேண்டும்.
ReplyDeleteஅருமையானதோர் ஸ்தலம் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்.... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteRight now it looks like Drupal is the best blogging platform out there right now.
ReplyDelete(from what I've read) Is that what you're using on your blog?
My webpage: chi iron
படங்களுடன் அருமையான தகவல்கள்... நன்றி...
ReplyDeleteAha...
ReplyDeleteI never knew about this temple Rajeswari.
Sure i will make a visit over here to my next visit to CBE,
viji
மிக அருமையான புகைப்படங்களுடன் கூடிய பதிவு. அமணீஸ்வரர் ஆலயத்தைப் பற்றி அரிய தகவல்கள் பல தெரிந்து கொள்ள முடிந்தது. அத்ரி முனிவரின் ஆஸ்ரமம் அமைந்திருந்த திருத்தலம் என்பதையும் பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் தலம்(முன்னோர்களுக்கு அதிக அளவில் திதி கொடுக்கப்படுவதால்) என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteworshipping ambal and vinayagar will rectify problems in mother children relationship - very nice information
ReplyDeleteஅமணீஸ்வரர் ஆலயத்தைப்பற்றிய சிறப்பான தகவல்கள்.படங்கள் அனைத்தும் மிக அழகு.
ReplyDeleteமிக அருமை, ஒரு முறை சென்று வர வேண்டும்.....நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅன்பு சகோதரி, இன்று உங்களுடன் கூட வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பது அளவுகடந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/02/2.html
பூவோடு சேர்ந்து நாறும் மணக்கிறது!
நல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteஅருமை. அருமை.
ReplyDeleteஉங்களின் தயவால் இங்கு அறிந்தேன்... மகிழ்ந்தேன்...
பகிர்தலுக்கு நன்றிகள் பல சகோதரி!
இந்த கோவிலுக்கு நான் 1985 வாக்கில் சென்று தரிசித்த நினைவு லேசாக இருக்கிறது.
ReplyDeleteமும்மூர்த்திகளும் ஸ்வயம்புவான க்ஷேத்திரம் இது என்று சொல்லவும் கேள்விப்பட்ட நினைவு இருக்கிறது.
சதுர்வினாயகர் தான் என் இருமலைப் போக்கவேண்டும்.
வினாயகன் விக்னங்களைத் தீர்ப்பவன். என் இருபத்தி ஐந்து நாள் தொடர் இருமலையும் அவன் தான்
தீர்த்து வைக்க வேண்டும்.
அப்படி என்ன இருமல் என்று கேட்கிறீர்களா ?
இங்கே வந்து பாருங்கள்.
www.subbuthatha.blogspot.in
பார்த்துவிட்டு சும்மா போகாமல்
Lord தன்வந்திரி யிடம் ஏதாவது மருந்து இருக்கிறதா என்றும் சொல்லுங்கள்.
நாட் ஜோக்கிங். சீரியஸ் இன்டீட்.
சுப்பு தாத்தா.
முழு முதற்கடவுளாம் அந்தத்தொந்திப்பிள்ளையார் முதல் படத்தினில் சும்மா ஜொலிக்கிறார்.
ReplyDeleteபதிவென்றால் இதுவல்லவோ பதிவு என பொறாமை கொள்ள வைக்கிறது.
விரிந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்க, இருபுறம் மிகப்பெரிய திண்டுகள்*
[*ஏழு தலயணிகள் போல ;) ]
கையிலே ஓர் தட்டு நிறைய லட்டோ கொழுக்கட்டையோ**
[**நொறுக்குத்தீனி பிரியர் ;) ]
தலைக்கிரீடத்திலும், தொந்தியின் மேலும், கை வளைகள் மூன்றிலும் ஜொலிக்கும் ஆபரணங்கள், ஆஹா அழகோ அழகு தான், தங்களின் அன்றாடப்பதிவுகள் போலவே. ;)
அழகிய மலர் மாலைகள், தங்கச்சங்கிலிகள், இடுப்பில் ஒட்டியாணம், தொந்தியின் குறுக்கே பளிச்சிடும் பூணல்,
குட்டியூண்டு அபய ஹஸ்தம்.
ஒரு கையில் தாமரை சாந்தத்திற்கு அடையாளமாக ....
ஒரு கையில் ஆயுதம் துஷ்ட சம்ஹாரத்திற்காக ....
துதிக்கையில் ஒரு சாம்பிள் ... டபக்குன்னு வாயில் செல்வதற்கு முன்பாக போஸ் கொடுத்தபடி ...
மஞ்சள் வஸ்திரம், சிகப்புப்பட்டுப் பீதாம்பரம், தோளில் பச்சைப்பட்டில் அங்க வஸ்திரம்.
இந்தப்பிரபஞ்சமே அவருக்குள் அடக்கம் என்பது போன்ற ஒரு பேக்ரெளண்ட் கலர் ....
அசைந்து அசந்து ஆடி ஆடி அற்புதமாக ....
ஒளிரும் இரு குத்து விளக்குகள்,
கம்பீரமாக நிற்கும் இரு தூண்கள்.
எல்லாமே அற்புதம் ..... இந்த அமர்க்களத்தில் அந்த எலியாரை எங்கோ காணும் என்ற கவலையும் ஏற்படுகிறதூஊஊஊ, எனக்கு!
>>>>>
ReplyDelete”சதுர் விநாயகர்” என்ற தலைப்பினில் அசத்தலான பதிவு.
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகியான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரின் திருப்பாதங்களின் அடியே நான்கு விநாயகரா!
ஆஹா, அதற்கான விளக்கங்கள் அருமையோ அருமை.
தாயுடன் கூடிய சேயின் தரிஸனம் திகட்டுமா என்ன?
>>>>>
ReplyDeleteஎதற்கோ "INVITATION" கொடுத்துள்ளீர்களே என யோசித்தேன்.
பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன்.
மாறி மாறி வருகிறார் அந்த விநாயகப்பெருமான்.
ஒரு இடத்தில் நின்றால் தானே!
கழுகின் மேல் ஏறி பறந்து விடுகிறாரே.
கழுகுக்கு மூக்கில் வேர்த்தது போல, உடனடியாக கழுகு போலப்பறந்து போய் கோவை சென்று, நெகமம் சென்று, தேவனாம் பாளையம் செல்லலாமா என நினைக்க வைத்தது.
பிறகு "INVITATION" கொடுத்தவர்களே, அங்கு இருக்க மாட்டார்கள்.
போகாதே .... போனால் அது வெட்டி அலைச்சல் ஆகிவிடும் என என் உள்மனது சொன்னது.
அதனால் பதிவினையே திரும்பத்திரும்ப படித்து, திருப்தி படுத்திக்கொண்டேனாக்கும்.
ஹுக்க்க்க்கும் !
>>>>>>
ஆஆஆஆஆஆஆஆ
ReplyDeleteஅந்த ஒளிரும் படம் 2006, 2008 என்று பழைய காலண்டர்களைக் காட்டுகிறது.
மிகப்பழைய INVITATION ஆக இருக்கும் போலிருக்கிறது.
இருப்பினும் பிள்ளையாரப்பா!
ஒரு விழாவிற்கு [உன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு என்று வைத்துக்கொள்ளேன்] என்னை கட்டாயம் அழைப்பதாகச் சொல்லி, நீ பிறகு அதை மறந்தே போனாய். ;(
நீ மறந்தாலும், பிள்ளையாரப்பா!
எதையும் நான் அவ்வளவு சுலபத்தில் மறப்பதில்லை.
நீ என்னை அழைத்தாலும் அழைக்கா விட்டாலும், நான் என்றுமே உந்தன் பக்தனப்பா!
என்றும் நீ என் நெஞ்சிலப்பா!
உன் திருவடி அடைய, உன்னிடமிருந்து எனக்கு நிரந்தர அழைப்பு வர வேண்டுமப்பா!
அதுதான் என்றும் என் பிரார்த்தனையப்பா!
>>>>>>
இன்றைய தங்களின் பதிவு வெகு அருமையான படங்களுடன், வழக்கம்போல வெகு அருமையான விளக்கங்களுடன் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
ReplyDeleteஅனைத்துக்கும் பாராட்டுக்கள், மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
oooooo
கோவைமாவட்டம் நெகமம் அருகில் உள்ள தேவனாம்பாளையம் பார்த்தது இல்லை. அடுத்தமுறை கோவை போகும் போது பார்க்கவேண்டும்.
ReplyDeleteபடங்கள் , கோவில் பற்றிய விரிவான செய்தி அருமை.
நன்றி. பாறையில் தெரியும் விநாயகர் அழகு.அது சுயம்பு என்று நினைக்கிறேன்.
இங்கு நானும் சென்றதில்லை. தங்கள் படங்களும் விளக்கமும் செல்லும் ஆவலைத்தூண்டுகின்றன. நன்றிங்க.
ReplyDeleteசதுர் விநாயகரின் தரிசனம் அருமை! நன்றி!
ReplyDeleteரம்யமான சூழலில் மும்மூர்த்திகளும்
ReplyDeleteஎழுந்தருளியிருக்கும் ஸ்தலத்தைப் பற்றிய விவரங்களும், படங்களும் அருமை.
நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteGreetings from Florida! I'm bored to death at work so I decided to browse your blog on my iphone during lunch break. I really like the info you present here and can't wait to take a look when I get home.
ReplyDeleteI'm amazed at how quick your blog loaded on my mobile .. I'm not even
using WIFI, just 3G .. Anyways, very good blog!
my website :: chi flat irons
அருமையான பதிவு
ReplyDeleteமிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலம் பற்றி சொல்லியுள்ள தகவல்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteT.V.முத்துராமன்
ReplyDeleteதிருக்கோவில் :அருள்மிகு அம்மணீஸ்வர சுவாமி திருக்கோவில்
முகவரி :தேவனாம்பாளையம் - எம்மேகவுண்டன்பாளையம் ரோடு
தேவனாம்பாளையம் (அஞ்சல்),
கோயம்புத்தூர் மாவட்டம் - 642120.
நாடு :இந்தியா
தொலைபேசி :+91-96555-59023
மின்னஞ்சல்:tvmuthuraman@gmail.com.
இருப்பிடம் :பொள்ளாச்சியில் இருந்து ( 18 கிமீ)நெகமம் வழியாக கோவில்பாளையம் செல்லும் பஸ்கள். கிணத்துக்கடவிலிருந்து (15 கி.மீ.)நெகமம் செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இவ்வழியே செல்கிறது. தேவனாம்பாளையத்தில் ஊர் எல்லையில் ஆற்றுக்கு நடுவே கோயில் அமைந்துள்ளது.வாடகை கார்களில் செல்வது நல்லது.