1. சௌந்தர்ய லட்சுமி
முதல் வரவேற்பு கிடைக்கச்செய்யும் முக வசீகரத்திற்கு "சௌந்தர்ய லட்சுமீ கரம்' பெற முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.
2. சௌபாக்கிய லட்சுமி
சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
3. கீர்த்தி லட்சுமி
எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், சமூகத்தில் வேண்டும். கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.
4. வீரலட்சுமி
மக்கள், செல்வம் , செல்வாக்கு அனைத்தையும் காப்பாற்றிக் கொள்ள வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம்.
5. விஜயலட்சுமி
எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தா லும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.
6. சந்தான லட்சுமி
அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், நல்ல குழந்தை பேறு பெற்று பெருமை அடைதற்கு அருள் புரியும்
ஸ்ரீசந்தான லட்சுமி. வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
7. மேதா லட்சுமி
பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.
8. வித்யா லட்சுமி
கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது "ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.
9. துஷ்டி லட்சுமி
எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந் தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.
10. புஷ்டி லட்சுமி
வெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்கும் பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.
11. ஞான லட்சுமி
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.
12. சக்தி லட்சுமி
இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங் களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் பெற சக்திலட்சுமியை வணங்க வேண்டும்.
13. சாந்தி லட்சுமி
எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.
14. சாம்ராஜ்ய லட்சுமி
மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.
15. ஆரோக்கிய லட்சுமி
மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப் பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.
16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி
மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது.
ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.
பதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.
தகவல்கள் அத்தனையும் அருமை.தங்களின் முயற்சிக்கு paaraattukkal
ReplyDeleteஷோடச லக்ஷ்மிகளும் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅஷ்டலக்ஷ்மி அறிவேன். இப்போது தான் பதினாறு தேவியரை
ReplyDeleteபற்றி உங்கள் மூலம் அறிகிறேன்.
உருளி , ஒட்டியாணம், சொம்பு கொள்ளை அழகு.
அழகிய படங்களுடன் விளக்கம்... நன்றி அம்மா...
ReplyDeleteதகவல்கள் அனைத்தும் அருமை . எல்லோரும் ஸ்ரீ லெட்சுமி அருள் பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான படங்கள்... தகவல்கள்... நன்றி அம்மா..
ReplyDeleteஅழகிய படங்களுடன் விளக்கங்கள் அருமை.
ReplyDeleteஅழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள்ளிக்கிழமை அன்று ஷோடச மஹாலக்ஷ்மிகள் அருட் பிரசாதம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.
ReplyDeleteஸ்ரீ வித்யா லக்ஷ்மியின் அருள் பெற்றுத் தரும் பஞ்சதசீ மந்திரங்களை முறையான உபதேசம் பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்களே அறிவார்கள். சாமான்யர்கள், அன்னையின் அருள் பெற, ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் 33 வது ஸ்லோகமான, 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்று தொடங்கும் ஸ்லோகத்தை, முறையான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, தினம், இயன்ற முறைகள் பக்தியுடன் கூறி வரலாம். இந்த ஸ்லோகத்தில், 'சௌபாக்கிய பஞ்சதசீ' சங்கேதமாகக் கூறப்படுகிறது.
’செளபாக்யம் தரும் ஸ்ரீ லக்ஷ்மி பூஜை’ என்ற தலைப்பில் காட்டியுள்ள அனைத்துப்படங்களும், அழகான விளக்கங்களும் அருமையோ அருமை.
ReplyDelete>>>>>>
01. செளந்தரிய லக்ஷ்மி
ReplyDelete02. செளபாக்ய லக்ஷ்மி
03. கீர்த்தி லக்ஷ்மி
04. வீர லக்ஷ்மி
05. விஜய லக்ஷ்மி
06. சந்தான லக்ஷ்மி
07. மேதா லக்ஷ்மி
08. வித்ய லக்ஷ்மி
09. துஷ்டி லக்ஷ்மி
10. புஷ்டி லக்ஷ்மி
11. ஞான லக்ஷ்மி
12. சக்தி லக்ஷ்மி
13. சாந்தி லக்ஷ்மி
14. சாம்ராஜ்ய லக்ஷ்மி
15. ஆரோக்ய லக்ஷ்மி
16. ஸ்ரீ காமேச்வரி என்கிற ஆதிலக்ஷ்மி
என்கிற அனைத்து லக்ஷ்மிகளை இன்று ஒரு முகமாக தரிஸித்தோம் தங்களின் இந்த அழகான லக்ஷ்மீகரமான பதிவினால்.
பதிவராகிய தாங்களே இன்று எங்களுக்கு அனைத்து பதினாறு லக்ஷ்மீக்களின் ஒருமுகத் தோற்றமாக தோன்றுகிறீர்கள். மகிழ்விக்கிறீர்கள். ;)))))
>>>>>>>
இன்று “தை வெள்ளிக்கிழமை”க்கு ஏற்ற தங்கமான பதிவு.
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள்.
இனிய வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
அம்பாளின் இதுபோன்ற தெய்வீக சேவை எங்களுக்கு என்றுமே தேவை.
தாங்கள் நீடூழி வாழ்க வாழ்கவே !
-oOo-
Parvathy Ramachandran said...
ReplyDeleteஅழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள்ளிக்கிழமை அன்று ஷோடச மஹாலக்ஷ்மிகள் அருட் பிரசாதம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.
ஸ்ரீ வித்யா லக்ஷ்மியின் அருள் பெற்றுத் தரும் பஞ்சதசீ மந்திரங்களை முறையான உபதேசம் பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்களே அறிவார்கள். சாமான்யர்கள், அன்னையின் அருள் பெற, ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் 33 வது ஸ்லோகமான, 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்று தொடங்கும் ஸ்லோகத்தை, முறையான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, தினம், இயன்ற முறைகள் பக்தியுடன் கூறி வரலாம். இந்த ஸ்லோகத்தில், 'சௌபாக்கிய பஞ்சதசீ' சங்கேதமாகக் கூறப்படுகிறது.//
பாக்யப்பிரசாதமாகக் கிடைத்த தங்களின் அருமையான ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் ஸ்தோத்திர அறிமுகத்திற்கும் , சிறப்பான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் அம்மா...
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete’செளபாக்யம் தரும் ஸ்ரீ லக்ஷ்மி பூஜை’ என்ற தலைப்பில் காட்டியுள்ள அனைத்துப்படங்களும், அழகான விளக்கங்களும் அருமையோ அருமை./
தெய்வீகப் பிரசாதமாக்க்கிடைத்த
இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteதகவல்கள் அத்தனையும் அருமை.தங்களின் முயற்சிக்கு paaraattukkal //
பாராட்டுக்களுக்கும் இண்ட்லியில் இணைத்து உதவியதற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
பழனி. கந்தசாமி said...
ReplyDeleteஷோடச லக்ஷ்மிகளும் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.//
இனிய பிரார்த்தனைக்கு
மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
ஸ்ரவாணி said...
ReplyDeleteஅஷ்டலக்ஷ்மி அறிவேன். இப்போது தான் பதினாறு தேவியரை
பற்றி உங்கள் மூலம் அறிகிறேன்.
உருளி , ஒட்டியாணம், சொம்பு கொள்ளை அழகு./
கொள்ளை அழகாய் கருத்துரைகள் வழங்கி பதிவை பெருமைப்படுத்தியதற்கு இனிய நன்றிகள்..
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅழகிய படங்களுடன் விளக்கம்... நன்றி அம்மா.../
அழகிய கருத்துரைகளுக்கு
மனம் நிரைந்த இனிய நன்றிகள்...
Gnanam Sekar said...
ReplyDeleteதகவல்கள் அனைத்தும் அருமை . எல்லோரும் ஸ்ரீ லெட்சுமி அருள் பெற வாழ்த்துக்கள்..//
அருமையான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
ஸ்கூல் பையன் said...
ReplyDeleteஅருமையான படங்கள்... தகவல்கள்... நன்றி அம்மா..//
அருமையான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
நிலாமகள் said...
ReplyDeleteஅழகிய படங்களுடன் விளக்கங்கள் அருமை.//
அருமையான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
ராஜராஜேஸ்வரி தந்த அழகிய ஷோடச லக்ஷ்மி பற்றிய அருமையான பதிவு.
ReplyDeleteஅகம் மிக குளிர்ந்தேன் சகோதரி.
அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைத்திட வேண்டுகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி!
தை வெள்ளியன்று அருமையான லஷ்மி கடாட்சம் கிடைக்கப் பெற்றோம்...
ReplyDelete
ReplyDeleteஎவ்வளவு லக்ஷ்மிகள் அருள் இருந்தாலும் வீட்டின் மஹாலக்ஷ்மியின் அருள் இல்லாவிட்டால் எதுவும் பயன் தராது. வாழ்த்துக்கள்.
தை வெள்ளியில் தங்கமான பதிவு! அருமை! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteVery nice post. Pretty and divine pictures. Thanks Rajeswari.
ReplyDeleteviji
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ பதினாறு லக்ஷ்மிகளும் அருள்
ReplyDeleteபுரியட்டும்.
தை வெள்ளியன்று பக்திமயமான பதிவுக்குப் பாராட்டுக்கள்!
இத்தனை லக்ஷ்மிகளா?
ReplyDeleteஒரு லக்ஷ்மியின் கடைக்கண் பார்வை கிடைத்தால் போதுமே .
பகிர்விற்கு நன்றி.
ராஜி
லட்சுமிகரமான பதிவு. அனைவருக்கும் வளம் பெருகட்டும்
ReplyDelete//ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள்.//
ReplyDeleteஅஷ்ட லக்ஷ்மியை வழிபட்டுள்ளேன்.
ஆதி லக்ஷ்மியுடன் பதினாறு லக்ஷ்மியை இப்போது அறிகின்றேன்.
படங்கள், பதிவு பிரமாதம்...