Sunday, February 3, 2013

தோரணங்கள் தரும் தோரணைகள்







வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்


தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். 

பூமாலைகளாலான மாவிலை தோரணம்பூமாலைகளாலான மாவிலை தோரணம்
 தென்னங் குருத்தோலையில்  செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும்.  
தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவது மாவிலை தோரணம் 
சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள்  நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். 

குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.
அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்க வேண்டும்.


மங்கள் நிகழ்ச்சிகளை தனித்துக்காட்ட எத்தனை நாகரிகமான கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் சிறந்து விளங்குகிறது ..!
Inline image 1
பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மா இலைகள்  சிறந்த கிருமி நாசினியாகும்.
சாதாரண மாவிலைகளாலான தோரணம்
வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.



கோயில்களில் திருவிழா நடை பெறும் காலங்களில் பெருந்திர ளான மக்கள் கூடும் கூட்டம்  வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. 
காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மா விலை தோரணம் கட்டுகிறார்கள்.
தாமரை / சாமந்தி மலர் மாலைகளாலான மாவிலை தோரணம்
காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது ‘மாவிலைத் தோரணம்’


மாவிலையில் மகா லட்சுமி வீற்றிருக்கிறார். 
அதனால் துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி காணப்படுகிறது..

 மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.

இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

மாவிலை தோரணம் கட்டுதலுக்கு அலங்காரம், சம்பிரதாயம் என்பதை தாண்டி அதில் ஒரு மருத்துவ உண்மையும் இருக்கிறது.
 
விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். ‘கும்பல் பெருத்தல் செப்பெருக்கும்’ என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது.
கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.
காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன.
உடல் நலத்தைக் கெடுக்கின்றன.
நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.

மாவிலைகள் ‘புரோஹிஸ்பிடின்’ என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் ‘புரோஹிஸ்பிடின்’ வாயு அழிக்கிறது.

மாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.

கோவில் கும்பாபிஷேகங்களிலும் கும்பகலசங்களில் உள்ள மந்திர சக்திவாந்த தீர்த்தத்தை மாவிலைக்கொத்தில் நனைத்து தெளிக்கின்றனர்.
யாகத்தீயிலும் மாவிலையால் நெய் வார்ப்பது உண்டு
இளஞ்சிவப்பு / சம்பங்கி மலர் மாலைகளுடன் கூடிய மாவிலை தோரணம்
மரம் செடிகொடிகள் கரியமில வாயுவை (Carbon-di-oxide ) எடுத்துக்கொண்டு பிராண வாயுவை (oxygen) வெளிவிடுகின்றன. 

விசேஷ நாட்களில் பலர் கூடும். போது உடம்பில் இருந்து வியர்வை நாற்றமும் ஆவியும் வெளிப்படும். 

 கட்டிஇருக்கும் மாவிலை தோரணங்கள் காற்றில் பரவி  இருக்கின்ற கிருமிகளை அழித்துவிடும்.
சுப காரியங்களுக்கு அடையாளமாக வாழை மரத்தை வாசலில் கட்டுவதும் தோரணங்களில் தென்னங்குருத்துகளை கட்டுவதும் மாவிலை தோரணங்கள் கட்டுவதும் ஏதோ சம்பிரதாயத்திற்கு மட்டும் அல்ல, 

தென்னை காலங்களை கடந்து ஓங்கி வளர்ந்து எல்லோரையும் குளிர்விக்கும் இளநீரையும் தேங்காயையும் தன் தலைமீது சுமந்து தருகிறது, 

மாவிலை என்பது முக்கனிகளில் ராஜக்கனியாக திகழ்கிறது, 

இவைகளைப்போல மணமக்கள் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதும் இதன் உள்நோக்கம்,

வாழைமரம் தனது கன்றுகளை தனது வேரிலேயே உற்பத்திசெய்து பின்னர் மரமாக வளர்ந்து முக்கனிகளில் ஒன்றாகிய வாழைக்குலையை நமக்கு அள்ளிக் கொடுத்து விட்டு பின்னர் அதன் ஒவ்வொரு உறுப்பும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பயனுற வாழ்ந்து மறைகிறது. 

அரிய பண்புகளை உள்ளடக்கிய இயற்க்கை நமக்கு செய்வதெல்லாம் நன்மை மனிதர்களும் தாங்கள் வாழுகின்ற காலத்தில் மா போல இனிய கனிகளைக்கொடுத்து வாழை போல தன்னையே மற்றவர்களுக்கு அள்ளி வழங்கி, தென்னை போல ஓங்கி, உயர்ந்து நின்று உபகாரம் செய்வதே இவை நமக்குச் சொல்லும் பாடம்.


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

மனிதர்கள் வாழையைப்போல் கூடி வாழ்ந்து நன்மைகளை ஓய்வின்றி செய்யவேண்டும் 

வேம்பும் , அரச மரமும் கொடிய கோடையில் குளிர் நிழலை கொடுப்பதோடு பல மருத்துவக் குணங்களையும் உடையது

மனிதர்களும் தாங்கள் வாழுகின்ற காலத்தில் 
மா போல இனிய கனிகளைக்கொடுத்து 
வாழை போல தன்னையே மற்றவர்களுக்கு அள்ளி வழங்கி, 
தென்னை போல ஓங்கி, உயர்ந்து நின்று உபகாரம் செய்வதே 
இவை நமக்குச் சொல்லும் பாடம்.

பாங்குடன் முகூர்த்தப் பாலக்கால் நாட்டித்
தென்னம் குலையும் தேமாங் கொத்தும்           
பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கி
வாழை கமுகு வளர்கூந் தற்பனை
மாவிலைத் தோரணம் மகரத் தோரணம்
சோலை இலையால் தோரணங் கட்டி

 என்ற் கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடிய கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்து பாடலில் தோரணங்களை அறிகிறோம் ..

சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து, நின்றான்.



சந்திரன் முதலவாகிய கிரகங்களும்; 
ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள்

எல்லாமும் சூழ்ந்திருக்க விளங்கிய- இந்திர 
வில் என்னும் வானவில்லைப் போன்று தோன்றிய;  

அங்கிருந்த தோரண வாயில் மீது ஏறி நின்றான்.


     தோரண வாயில்,இராவணன், இந்திரனைப் போரில்
புறங்கண்டபோது, அவனது அமராவதியில் இருந்ததைக் கவர்ந்து,
அசோகவனத்தின் வாயிலாகக் கொண்டு வந்து வைத்ததை கம்பர்  காவியச்சுவையுடன் விளக்குகிறார் ..






Windy Trees

33 comments:

  1. எங்க விட்டில தோரணம் கட்டற முழு உரிமையும் எனக்கே. வீட்டில வேற ஆம்பிளை யாரும் கிடையாது.

    ReplyDelete
  2. ஆஹா.. தோரணம் கட்டுவதிலும் இவ்வளவு நன்மைகளும் உள்ளதா? அதுவும் மா,வாழை,தென்னை இவற்றிற்கு ஈவளவு சிறப்புள்ளது என்பதை அறியும்போது வியப்பாகவும் முன்னோர்களை நினைத்து பெர்ருமைபடும் படியும் உள்ளது.

    ReplyDelete
  3. மாவிலை, மா, தென்னை, வாழைமரம் ஆகியவற்றின் சிறப்பை காரண காரியங்களை விரிவாக சொல்லும் பதிவு அருமை.
    படங்கள், பாடல்கள் எல்லாம் அற்புதம்.

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு. மாவிலையைப் பற்றி எத்தனை எத்தனை தகவல்கள். அருமையான அர்த்தம் பொதிந்த நம் பாரம்பரியப் பெருமையை உணர்ந்து, ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்களைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பதே நன்மை தரும்.

    ஆன்மீக ரீதியாகவும் மாவிலைக்கு சிறப்பிடம் உண்டு. ஒரு கலசத்தில் மாவிலை வைத்து அதன் மேல் தேங்காய் வைத்தாலே அது பூர்ண கும்பம். மாவிலை கலசத்தில் ஆவாஹனம் செய்யப்படும் தெய்வத்தின் சிகையாகவே உருவகிக்கப்படுகிறது. மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தி அதற்கு உண்டு. தாங்கள் கூறியதைப் போல, அதன் காரணமாகவே, கலச நீரைத் தெளிப்பதற்கு மாவிலை உபயோகிக்கிறார்கள்.

    மிக நுணுக்கமான, அருமையான பல தகவல்கள் தந்திருக்கிறீர்கள். தங்கள் சேவை போற்றத்தக்கது. மிக மிக நன்றி.

    ReplyDelete
  5. படிக்க படிக்கத் தெவிட்டாத தகவல்கள்.
    பார்க்க பார்க்க சலியாத படங்கள். அழகு.

    ReplyDelete
  6. நல்ல விளக்கங்கள்... நன்றி அம்மா...

    ReplyDelete
  7. மாவிலை தோரணத்துல இவ்வளவு விஷயம் இருக்கா??

    ReplyDelete
  8. தோரணங்களில் இத்தனை சூட்சுமமா?
    ஆய்வில் எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்கள் .
    வாழ்த்துகள் அம்மா...

    http://chitramey.blogspot.in/2013/02/blog-post.html

    ReplyDelete
  9. அன்று சொன்னதெல்லாம் அர்த்தம் உள்ளதாகத் தான்!

    ReplyDelete
  10. மாயிலையில் இத்தனை விஷயங்களை விஷயங்களா?
    அழகாக படிக்க படிக்க தெவிட்டாத அளவிற்கு தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.

    நன்றி பகிர்விற்கு,

    ராஜி

    ReplyDelete
  11. ”தோரணங்கள் தரும் தோரணைகள் ”என்ற இந்தப்பதிவினை தோரணம் கட்டி வரவேற்று மகிழ்கிறோம்.

    பழைய ஏற்கனவே பகிர்ந்து கொண்ட தகவல்களே ஆனாலும், அவற்றை தோரணமாகப் புதுப்பித்து, அதற்கு ஓர் புதிய தோரணம் போன்ற தலைப்பும் இட்டு, ஒவ்வொருவர் மனதிலும் அதைத் தாங்கள் இன்றும் நினைவூட்டவும் புதுப்பிக்கவும் செய்வது மஹத்தான செயலாகவே உள்ளது.

    அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>>>>

    ReplyDelete
  12. அழகுத்தோரணமாக ஆயிரம் ஆயிரம் தகவல்கள்.

    அறிவியல் விஞ்ஞானத்தையும், ஆன்மீக சாஸ்திர சம்ப்ரதாய வழிமுறைகளையும் இணைத்தே தோரணம் கட்டியுள்ளதும் காட்டியுள்ளதும் அழகோ அழகு.

    அதுவே தங்களின் தனித்திறமையாகும்.

    தகவல் களஞ்சியமாக இன்று எங்களுக்கு நீங்கள் கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும்பாக்யம்;)

    >>>>>>>>

    ReplyDelete
  13. ஒவ்வொருபடமும் கொள்ளை அழகு.

    என்னைச் சொக்க வைக்குது ...... வாழைப்பூவுடன் கூடிய தாரும்,
    அந்த இளநீர் குலைகளும்.

    மோத மொழங்க உள்ள அந்த இளநீரை உடைத்துப் பருகிடும் ஆசை என் நெஞ்சினை வருடிச்செல்கிறது.

    எவ்வளவோ கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று தான் என் மனமும் துடிக்குது.

    ஆனாலும் ஏதோ சில காரணங்கள் தடுக்குது.

    எனினும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல் வாழ்த்துகள்.

    அசத்தலான இந்தப் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.


    oooooo

    ReplyDelete
  14. பதிவில் தொங்கிய தோரணங்கள்! பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க அலுப்பு தட்டவில்லை. சிலப்பதிகாரத்திலும் மகர வாயில் தோரணம் என்று படித்ததாக நினைவு.

    ReplyDelete
  15. Excellent article. I will be dealing with many
    of these issues as well..
    Also visit my blog post ; cheap ray rice jersey

    ReplyDelete
  16. தோரணங்கள் பற்றிய செய்திகளும் படங்களும் அருமை! மிக்க நன்றி!

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அழகுத்தோரணமாக ஆயிரம் ஆயிரம் தகவல்கள்.//

    தோரணையாகத் தந்த
    தடையற்ற கருத்துரைகளுக்கு தாராளமான இனிய நன்றிகள் ஐயா ..

    இந்த பதிவில் இன்னும் பல நுணிக்கமான தகவல்கள் பகிர்ந்திருப்பதாக எண்ணுகிறேன் ..

    ReplyDelete
  18. பழனி. கந்தசாமி said...
    எங்க விட்டில தோரணம் கட்டற முழு உரிமையும் எனக்கே. வீட்டில வேற ஆம்பிளை யாரும் கிடையாது.//

    தோரணம் கட்டி வரவேற்கும் தங்களுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  19. கவியாழி கண்ணதாசன் said...
    ஆஹா.. தோரணம் கட்டுவதிலும் இவ்வளவு நன்மைகளும் உள்ளதா? அதுவும் மா,வாழை,தென்னை இவற்றிற்கு ஈவளவு சிறப்புள்ளது என்பதை அறியும்போது வியப்பாகவும் முன்னோர்களை நினைத்து பெர்ருமைபடும் படியும் உள்ளது.//

    வியக்கவைக்கும் அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  20. கோமதி அரசு said...
    மாவிலை, மா, தென்னை, வாழைமரம் ஆகியவற்றின் சிறப்பை காரண காரியங்களை விரிவாக சொல்லும் பதிவு அருமை.
    படங்கள், பாடல்கள் எல்லாம் அற்புதம்.

    சிறப்பான அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  21. Parvathy Ramachandran said...
    மிக அருமையான பதிவு. மாவிலையைப் பற்றி எத்தனை எத்தனை தகவல்கள். அருமையான அர்த்தம் பொதிந்த நம் பாரம்பரியப் பெருமையை உணர்ந்து, ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்களைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பதே நன்மை தரும்.

    ஆன்மீக ரீதியாகவும் மாவிலைக்கு சிறப்பிடம் உண்டு. ஒரு கலசத்தில் மாவிலை வைத்து அதன் மேல் தேங்காய் வைத்தாலே அது பூர்ண கும்பம். மாவிலை கலசத்தில் ஆவாஹனம் செய்யப்படும் தெய்வத்தின் சிகையாகவே உருவகிக்கப்படுகிறது. மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தி அதற்கு உண்டு. தாங்கள் கூறியதைப் போல, அதன் காரணமாகவே, கலச நீரைத் தெளிப்பதற்கு மாவிலை உபயோகிக்கிறார்கள்.

    மிக நுணுக்கமான, அருமையான பல தகவல்கள் தந்திருக்கிறீர்கள். தங்கள் சேவை போற்றத்தக்கது. மிக மிக நன்றி.//

    மிக நுணுக்கமான, அருமையான கருத்துரைகள் வழங்கி தெளிவுபடுத்தியதற்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  22. ஸ்ரவாணி said...
    படிக்க படிக்கத் தெவிட்டாத தகவல்கள்.
    பார்க்க பார்க்க சலியாத படங்கள். அழகு/

    அழகான அருமையான கருத்துரைகள் வழங்கியதற்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  23. திண்டுக்கல் தனபாலன் said...
    நல்ல விளக்கங்கள்... நன்றி அம்மா...

    அருமையான கருத்துரைகள் வழங்கியதற்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  24. கோவை ஆவி said...
    மாவிலை தோரணத்துல இவ்வளவு விஷயம் இருக்கா??

    எத்தனையோ விஞ்ஞான நுணுக்கங்களை நம்க்கு சட்ங்குகளாக அளித்த முன்னோர்களின் கலாச்சாரம் போற்றத்தக்கது ...

    ReplyDelete
  25. Advocate P.R.Jayarajan said...
    தோரணங்களில் இத்தனை சூட்சுமமா?
    ஆய்வில் எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்கள் .
    வாழ்த்துகள் அம்மா../

    சூட்சுமமான கருத்துரைகளுக்கு
    நன்றி ஐயா..

    ReplyDelete
  26. தி.தமிழ் இளங்கோ said...
    பதிவில் தொங்கிய தோரணங்கள்! பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க அலுப்பு தட்டவில்லை. சிலப்பதிகாரத்திலும் மகர வாயில் தோரணம் என்று படித்ததாக நினைவு.

    சிலப்பதிகாரத்தில் தோரணங்களும் கொடிகளும் கண்ணகியையும் கோவலனையும் இங்கு வாராதீர்கள் இடர் காத்திருக்கிறது என்று எச்சரிப்பதுபோல அசைந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடும் காவிய நயமான வரிகள் அருமையானவை ...

    அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  27. நிலாமகள் said...
    அன்று சொன்னதெல்லாம் அர்த்தம் உள்ளதாகத் தான்!/

    அர்த்தமுள்ள இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  28. s suresh said...
    தோரணங்கள் பற்றிய செய்திகளும் படங்களும் அருமை! மிக்க நன்றி!

    அருமையான கருத்துரைகளுக்கு
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  29. rajalakshmi paramasivam said...
    மாயிலையில் இத்தனை விஷயங்களை விஷயங்களா?
    அழகாக படிக்க படிக்க தெவிட்டாத அளவிற்கு தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.

    நன்றி பகிர்விற்கு,

    ராஜி

    தெவிட்டாத கருத்துரைகள் வழங்கியதற்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  30. மங்களத்தின் சின்னம் தோரணம் என்று மட்டுமே இதுநாள் வரை நினைத்தேன்..அதில் அறிவியல் சார்ந்த விளக்கங்கள் இப் பதிவினில் தெரிந்தமைக்கு மகிழ்ச்சி..பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  31. நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. Heya i'm for the primary time here. I came across this board and I to find It truly useful & it helped me out much. I am hoping to offer one thing again and aid others such as you aided me.
    Look into my site louis vuitton outlet online

    ReplyDelete
  33. விதவிதமான தோரணங்கள்,அவற்றின் விளக்கம், படங்கள் என்று பதிவு சிறப்பாக இருக்கு.

    ReplyDelete