சீரங்க ராகமறமோது திகிரி செங்கைகொண்ட
சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே.
ஆறு முகம் உடையவன் ஷண்முகன் ...
கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த, விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன்.
அதாவது முகுந்த மு என்றால்-விஷ்ணு.
ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.
கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன் ...
முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர்
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர்.
அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர்.
சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர்.
மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.
இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார்.
இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், ஆவணி, மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
முருகன் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார்.
முருகன் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார்.....
பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.
வள்ளி குகையில் மும்மூர்த்தி சிலை மூன்று முகங்களுடன் இருக்கிறது.
அலைபாயும் செந்திலம்பதியாகிய திருச்செந்தூரில் சீரும் சிறப்புமாக நடத்தப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணிதிருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி வீதி உலாவில் திருமுருகன் உடையும் சிவப்பு, செங்கடம்பு மாலையும் சிவப்பு, அவரது வேலும் சிவப்பு பகைவரை கொல்வதால் இரத்தம் தோய்ந்து, அவர் மேனியும் சிவப்பு செந்தமிழில் தோன்றியதால், அவரது திருமுகமோ விரியும் செங்கதிர் இளஞாயிறு போன்ற சிவப்பு என்று கந்தன் சிவப்பு உடை அணிந்து வரும் அற்புத கோலத்தில் சுவாமி வரும் வழியில் பக்தர்கள் சிவப்பு பூக்களை தூவியும்,சிவப்பு பந்தல்கள் அமைத்தும் சுவாமியை வரவேற்கின்றனர்.
சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோலம் எண்ணம் நிறைக்கும் வண்ணமயமானது...
விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் திகழ்கிறது.
மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடையும்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் நிகழ்வில் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை
குளிர்ச்சிப்படுத்துகின்றனர்.
செஞ்சடையாரின் விழியாலே,
செவ்வேள் என்னும் பெயராலே,
சேவற்கொடியோன் ,
சிறப்பாய் மணமும் கொண்டவன் ..,
முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் ...
செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாய் திகழ்பவன் ...
கருநிற யானையாம் பிணிமுகத்தின் மேல் செவ்வேள் குமரன் அமர்ந்து வருவது கருநிறக்கடலின் மேல் செந்நிறக் கதிரவன் தோன்றுவதைப் போல் திகழ்கிறது ..
உலகத்தவர் மகிழ உலகத்தின் வலப்பக்கத்தில் வலிவுடன் தோன்றி உலகத்தினைச் சுற்றும், பலரும் போற்றும், ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்
உணர்வுடையோர் மதிக்கும் மாணிக்கமாம்
அன்னை அபிராமி மகிழ் திருமகன் முருகன் ...
திருமால் தனக்கும் திருமகளுக்கும் இனிய மருகன்..
இந்திரன் மகள் தெய்வயானைக்கு மணமாலை சூட்டியவன் ...
முதலில் முடிவு அது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது!
செஞ்சடையாரின் விழியாலே,
சேந்தனாக வந்துதித்தவன் முருகன் ..
செவ்வேள் என்னும் பெயராலே,
சேர்ந்தோரால் வணங்கப்படுபவன் ...
சேவற்கொடியோன் ,
செந்திரு போன்ற வள்ளியினை,
சிறப்பாய் மணமும் கொண்டவன் ..,
முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் ...
செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாய் திகழ்பவன் ...
நீல நிற மயிலின் மேல் சேயோன் முருகன் அமர்ந்து வருவது நீலத்திரைக்கடலின் மேல் செங்கதிரவன் தோன்றுவதைப் போல் அருள்கிறான் ....
சேய் என்பதற்கு சேய்மையும், சிவப்பும் என இரு பொருள்கள் உண்டு
சேயோன் என்று முருகனையும் சிவனையும் குறிக்கும் வழக்கமும் உண்டு
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்
உணர்வுடையோர் மதிக்கும் மாணிக்கமாம்
அன்னை அபிராமி மகிழ் திருமகன் முருகன் ...
திருமால் தனக்கும் திருமகளுக்கும் இனிய மருகன்..
இந்திரன் மகள் தெய்வயானைக்கு மணமாலை சூட்டியவன் ...
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது!
படங்களும் விளக்கங்களும் அருமை.
ReplyDeleteகாலை இளம் கதிரிலில் உந்தன் காட்சி தெரியுது
ReplyDeleteகடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியது. என்று கம்பீரமான குரலில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் நினைவுக்கு வந்தது. உங்கள் பதிவை விடியல் காலையில் படித்தவுடன்.
ஷண்முகன் விளக்கம், படங்கள் எல்லாம் அலைபாயும் செந்திகல்பதியை திருச்செந்தூரில்கண்ட மனநிறைவு ஏற்பட்டது.
வாழ்த்துக்கள்.
நன்றி.
மிக அருமை. முருகப்பெருமானை தரிசித்ததில் மிக மகிழ்ச்சி. பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு
ReplyDeleteவண்ண வண்ண எழில் முருகன் !
ReplyDeleteஇன்று செவ்வாய்க்கிழமைக்கு ஏற்ற சிறந்த பதிவு.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ரசித்தேன்!
ReplyDeleteஅழகென்ற சொல்லுக்கு முருகா. அழகான படங்கள்.நல்ல பகிர்வு.நன்றி
ReplyDeleteமுருகா என்றதும்... உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா...
ReplyDeleteஅழகன் முருகனை எத்தனைவிதமாக எப்படி எப்படியெல்லாமோ பாடலாம்... அறியாத பல விஷங்களைத் தொகுத்துத் தந்தீர்கள். அருமையான பதிவு.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
அழகு = முருகன்
ReplyDeleteமுருகனின் திருநாமம் ஒருகோடி நாமங்களுக்கு சமம். முருகா என்ற உச்சரிக்கும் போது எல்லா தெய்வங்களும் ஒன்று சேர்ந்து காப்பாற்ற வருகின்ற மன வலிமை கிடைக்கும். முருகன் செவ்வாய்க்கு அதிபதி. செவ்வாய் என்பது போர். முருகன் படைத் தளபதி. முருகனை வழிபட்டு போராட்டங்களில் வெற்றி பெறலாம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... பதிவும், கருத்தும், படங்களும் உள்ளத்தை நிறைக்கின்றன. வாழ்த்துக்கள் !
ReplyDeletehttp://jayarajanpr.blogspot.in/2013/02/39.html
ReplyDeleteமுருகப்பெருமான் படங்களும் விளக்கமும் அருமை.
ReplyDeleteஎனது வேண்டுகோளை ஏற்று, 'சிவப்பு சாத்தி முருகனை தரிசிக்கும் நல்வாய்ப்புத் தந்த தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. செவ்வாய்க் கிழமையன்று பொருத்தமாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.
ReplyDeleteஅழகான முருக கடவுள் வண்ண மயமான பதிவு அருமை!
ReplyDelete
ReplyDeleteமுருகன், திருமால் மருகன் பெருமை அந்த முக்கணனுக்குமில்லை திரு தணிகாசல முருகன்.எனக்கு முருகனைப் பிடிக்கும். வாழ்த்துக்கள்.
அழகன் முருகனின் காட்சிகள் கண்டு களிப்புற்றோம்.
ReplyDeleteவண்ண வண்ண எழில் முருகன் உள்ளம் கவர்ந்தது.
ReplyDeleteசிறப்பான பகிர்வு நன்றிங்க.
ReplyDeleteமால் மருகன் அழகில் மனம் மகிழ்ந்தது. நன்றி.
ReplyDelete