Showing posts with label லஷ்மி. Show all posts
Showing posts with label லஷ்மி. Show all posts

Wednesday, April 30, 2014

அஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை



நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே! 
சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே! 

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி! 
ஸர்வதுக்க ஹரே தேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே!
திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. 

 தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 
3வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது

அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு 
மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நல்ல காரியங்கள் தொடங்கவும் 
சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘

மகிழ்வித்து மகிழ்’ என மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறலாம்..
 சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   சித்திரை மாத வளர்பிறையில் வரும்   எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.

திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை

பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது.

 பூஜை அறையில் கோலமிட்டு. அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இட்டு இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்கி அதனுள் காசுகளைப் போடுவதும், காசுகளைப் பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பதும்  வழக்கம்.

கலசத்தின் அருகே  நெல் நிறைத்து வைத்து  கலசத்திற்குப் பொட்டு, பூ வைத்து. லட்சுமி நாராயணர் படம் வைத்து அலங்கரித்து , குத்துவிளக்கினை ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வைக்கலாம்..
அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் வீடு தேடிவந்துவிடும்.

முதலில் விநாயகரை வேண்டி. பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்திக்கலாம்...

 விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லலாம்... அல்லது கேட்கலாம்..

 குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது.

 வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யலாம்..!

 பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் 
நிவேதிப்பது சிறப்பானது.

அட்சயதிருதியை தினம்  சிவாலயம், பெருமாள் கோயில் என்று 
 இயன்ற தலத்திற்குச் சென்று தரிசிக்கலாம்..

 அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக.கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.

பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.

எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.
 இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் 
லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, .தீராத வியாதி உள்ளவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் அந்த ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்
கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி பாலரிஷ்ட தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம்.

அட்சய திரிதியை அன்று ஆல இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். 

அட்சய திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். 

அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

அன்றைய தினம் மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம் பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.
அமிர்த சஞ்சீவினி மந்திரம்:-
ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |சாந்தி குரு குரு ஸ்வாஹா||

தன்வந்திரி மந்திரம்:-

ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு,சக்கரம்,அட்டைபூச்சி,அமிர்தகலசம் இவற்றுடன்  தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.

தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.


அட்சயதிருதியை அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.  தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

இல்லத்தில்  கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்யலாம். குறிப்பாக, சகல வெற்றிகளும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி ஹோமம் செய்யலாம்.

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை மனதார பிரார்த்தனை செய்தாலே , "கனகதாரை'' நிச்சயம் செல்வம் பெருக செய்வாள்.

ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

 அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில்  முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

உடல் ஊனமுற்றவர்கள்  அருளும் விசேஷமான அட்சய திருதியை பூஜை!
ஸ்ரீ சனீஸ்வரர் மானுட ரூபத்தில் விளங்குளத்தில் அட்சய திருதியை அன்று பிட்சை ஏற்று. அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார்.

எனவே, உடல் ஊனமுற்றவர்கள்.திருதியைத் திதி நாட்களில் அட்சயத் திரிதியைத் தலங்களில் மற்றும் ஸ்ரீ சனீஸ்வரர் தனிச் சன்னதி கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீ சனீஸ்வரர் தனிச் சிறப்பு கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீ சனீஸ்வரருக்கு நவதானியங்களும் ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி முழு முந்திரி பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் உடல் வகைத் துன்பங்கள் தணியலாகும்.

வழிபாட்டிற்குப் பிறகு தான்யங்களையும் முந்திரிகளையும் தானமாக ஏழைகளுக்கு அளிக்கவேண்டும்...

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்குரிய நாளாக இருப்பதால் லட்சுமி சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி செந்தாமரை மலரால் அர்ச்சிப்பது நன்மை அளிக்கும்.
கிருஷ்ணருக்கு குசேலர் அவல் அளித்த நாள் என்பதால், காய்ச்சிய பாலுடன் அவல், வெல்லம் சேர்த்து கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வது சிறப்பு.

அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம்.. இந்நாளில் பிதுர்தர்ப்பணம் செய்வதும், பசுவிற்கு கீரை,பழம் கொடுப்பதும் நல்லது.

அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்' எனப்போற்றுவர்.

லட்சுமி நாராயணருக்கு துளசியும், யவை என்னும் தானியத்தையும் (கோதுமை போல் இருக்கும்) படைத்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். யவை பூஜைபொருள்கள் விற்கும்  கடைகளில் கிடைக்கும்

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

 இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கிய பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி - அட்சய திருதியை தினத்தன்றுதான்அன்னை  காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான 
அன்னபூரணி அவதரித்தாள்

அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்' என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
தங்க ஆபரணங்க கட்டுமான பொருட்கள், கலைபொருட்கள் இப்படி எதையும் வாங்கலாம். இதன் மூலம் ஆண்டு முழுதும் சுபிட்சமாக அமையும் என்பது ஐதீகம்

அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை' நாளில் செய்யப்படுகிறது.

கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.


வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.


ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்பிக்கை..

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

Friday, April 25, 2014

சுபிட்சம் அருளும் ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி வழிபாடு..


Photo: வாழ்வில் செல்வம் பெருகிட குபேரரை வணங்கிடுவோம்











Gaja LakshmiDhana Lakshmi
இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, 
அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுகிறோம்

 மங்களகரமான் ஐஸ்வர்யம் நிறைந்த இல்லம என்று, மனிதர்களின் மனம் சஞ்சலமின்றி இருக்கும் நேரமான  .பிரம்ம முகூர்த்த வேளையில் வாசல் வழியாகச் செல்லும் மகாலட்சுமி வீட்டினுள் நுழைந்து வாழ்க்கையில் வெற்றியாளர்களாகத் திகழவைத்து விடுவாளாம். 
 அதிகாலையில் எழுந்து செய்யும் வழிபாடு, பெறுகின்ற ஆசிகள் அனைத்தும் இரட்டிப்பான பலன்களைத் தரும் என்பதால்தான் இல்லங்களில் பிரம்ம முகூர்த்த காலத்தில் புதுமனை புகுதலைச் செய்துவிடுவது வழக்கம்..

கணபதி ஹோமம் சூரிய உதயத்திற்கு 
முன்பே நிறைவேற்றப்படவேண்டும்..

காயத்ரி மந்திரமும் பிரம்ம முகூர்த்த வேளையில் ஜபிப்பது 
நலம் தரும் என்பதை அனுபவத்தில் உணரலாம் ..!
Photo: Learn Sri Kanakadhara Stotram

devi-coins-croppedThis year’s focus for the Navaratri Brahmotsavam will be the auspicious “Sri Kanakadhara Stotram,” composed by Sri Adi Sankaracharya. During Navaratri, this stotram will be chanted each day during the morning homas.

Our Temple is a Learning Temple, so we encourage everyone to learn and join in the chanting of this sacred stotram. The more who chant together in one voice, the more energy we can generate for universal blessings.

To help everyone learn this new text, we are providing the words, along with recordings of each of the 21 verses.

You can print out the text of Sri Kanakadhara Stotram, and then listen to the word-by-word pronunciation of each verse. Once familiar with the pronunciation, you can listen to the chanted version of the verse and become familiar with chanting it. You can also download an mp3 version of all the verses of Sri Kanakadhara Stotram (“right-click” on the link if using a PC, or “control-click” if using a Mac to download).

http://srividya.org/learn-more/learn-sri-kanakadhara-stotram/
 அமைதியுடன் மிகச் சாந்தமாக வழிபாட்டைத் தொடர்ந்தால், 
அதிர்ஷ்ட தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஞானநூல்கள், அதிர்ஷ்ட தேவி வழிபாட்டை பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில்  செய்ய வழிகாட்டுகிறது..
பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரித்து, 
ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, 
சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்தவேண்டும். 

 இனிப்பு, பழங்கள், தாம்பூலம் நைவேத்தியம் செய்யவேண்டும்..
முதலில், விநாயகர் துதி! 

அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூறவேண்டும். 

அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, 
கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக்கொண்டு, 
தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.
Adi Lakshmi
பங்கஜாட்சீம் சுவர்ணாபாம் சுரத்ன மகுடான் விதாம்
நாகாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன்விதாம்

சுதா பேடக சாலீஞ்ச வாம ஹாஸ்தேன தாரிணீம்
ஸவ்யேகரே சுபத்மஞ்ச லம்ப கேசேன சோபனாம்

பத்மோபவிஷ்டாம் ஸுவஸ்த்ராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் சங்கோலூக சமன் விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்ய லக்ஷ்மீ மஹம் பஜே.
தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்து, 
செந்தாமரை மீது அமர்ந்தவளாக
வலக் கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியவாறு, தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி
தாமரைக் குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருட்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன. 
இந்த அதிர்ஷ்டதேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.
Vidya Lakshmi
அதிர்ஷ்டதேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும்  தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும். 
Photo: Thai Maasam Shukravaaram ~ Manjal Kumkumam Vangikongo
 காமாட்சி விளக்கு  ஏற்றி வைத்து, யோக சக்தியான அதிர்ஷ்டதேவியை வர்ணித்து, 26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
Photo
26 திருநாமங்கள்: 

ஓம்ஸ்ரீம் தாராயை, 
ஓம்ஸ்ரீம்வித்யாயை, 
ஓம்ஸ்ரீம்ஓம்ஸ்ரீம்முநின்யை 
ஓம்ஸ்ரீம்சரத்தாயை, 
ஓம்ஸ்ரீம்ஜராயை, 
ஓம்ஸ்ரீம்மேதாயை, 
ஓம்ஸ்ரீம்ஸ்வதாயை, 
ஓம்ஸ்ரீம்ஸ்வஸ்தியை, 
ஓம்ஸ்ரீம்வர்மின்யை, 
ஓம்ஸ்ரீம்பாலின்யை, 
ஓம்ஸ்ரீம் ஜ்வாலின்யை, 
ஓம்ஸ்ரீம்க்ருஷ்ணாயை, 
ஓம்ஸ்ரீம் ஸ்மிருத்யை, 
ஓம்ஸ்ரீம் காமாயை, 
ஓம்ஸ்ரீம்உன்மத்யை, 
ஓம்ஸ்ரீம்ப்ரஜாயை, 
ஓம்ஸ்ரீம்சிந்தாயை, 
ஓம்ஸ்ரீம்க்ரியாயை, 
ஓம்ஸ்ரீம் க்ஷ£ந்த்யை, 
ஓம்ஸ்ரீம்சாந்த்யை, 
ஓம்ஸ்ரீம்தாந்த்யை, 
ஓம்ஸ்ரீம்தயாயை, 
ஓம்ஸ்ரீம்ஸ்வஸ்திதாயை, 
ஓம்ஸ்ரீம்தூத்யை, 
ஓம்ஸ்ரீம்கத்யாயை, 
ஓம் அதிர்ஷ்ட கலாயை நம


நாமாவளி அர்ச்சனை முடிந்ததும், தூப- தீபங்கள் காட்டி, நிவேதனம் செய்து,

'ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே 
                                           கமல ஹஸ்தாய தீமஹி 
                                          தந்தோ அதிர்ஷ்டதேவி ப்ரசோதயாத்’ 

என்ற அதிர்ஷ்டதேவி காயத்ரீ மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி, 
ஆரத்தி செய்ய வேண்டும். 
அதிர்ஷ்ட தேவி படம் முன்பு அமர்ந்து, '
ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷின்யை சுவாஹா’ 
என்று 108 முறை ஜபம் செய்வது விசேஷம்!
 அதிர்ஷ்ட தேவியை வழிபடுவதோடு உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், இன்முகப் பேச்சும் இருந்தால்... அதுவே, அதிர்ஷ்டதேவி   அந்த இல்லத்திற்குள் அடி எடுத்து வைக்கும் தெய்வீகப் படிகளாகும். 

.உழைப்பாலும், சரியான நேரத்தில்  கடமையைச் செய்வதாலும், 
அதிர்ஷ்டம் தடை இன்றி தேடிவரும் 

அதிர்ஷ்ட தேவையை வணங்குகிறபோதும்,  தலையாய பணிகளையும் காலத்தில் செய்துவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..!
Photo: ASTA LAKSHMI

Friday, April 12, 2013

ஐஸ்வர்யம் தரும் அலைமகள்









ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் சுவர்ணரஜ தஸ்ரஜாம் 
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ 

அக்னி தேவனே! பொன் போன்ற காந்தி உடையவளும், பாபங்களைப் போக்குபவளும், பொன்னாலும் வெள்ளியாலுமான ஹாரங்களை அணிந்தவளும், சந்திர பிம்பம் போன்றவளும், பொன்மயமானவளுமாகிய ஸ்ரீதேவியை எனக்கருள் புரியுமாறு எழுந்தருளச் செய்வீர்,


ஸ்ரீ என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லும், திரு என்ற தமிழ்ச்சொல்லும்
சோபை, ஐச்வர்யம், ஒளி, கீர்த்தி, ஸித்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. '

ஸ்ரீ' என்ற சொல் முதன் முதலில் வேதங்களில் அழகு, இனிமை ஆகியவற்றைக் குறிப்பிடவே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது,

 'ஸ்ரீ' என்ற சொல் லக்ஷ்மியைத் தான் குறிக்கிறது'


பாற்கடலில் உதித்து மஹாவிஷ்ணுவை மணாளனாக அடைந்த அந்த சக்தியையே நாம் மஹாலக்ஷ்மி என்கிறோம். 

லக்ஷ்யம் என்றால் அடையாளம் என்று பொருள்.

இறைவன் இருக்கிறான் என்பதற்கு பகிரங்கமான அடையாளமாகவும், மகத்தான லக்ஷ்யமாகவும் விளங்குவதால் அவள் மஹாலக்ஷ்மி என்ற பெயரைப் பெற்றாள்...

அவள் ஸ்வர்க்கத்தில் ஸ்வர்க்கலக்ஷ்மி, 
பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ய லக்ஷ்மி, 
வீடுகளில் இல்லத்தரசிகளின் உருவில் க்ருஹலக்ஷ்மி 
என்றெல்லாம் புகழ் பெறுகிறாள். 
உலகையும் உடலையும் துறந்த ஞானிகள் கூட 
மோக்ஷ லக்ஷ்மியின் கடாக்ஷத்தை விரும்புகிறார்கள்.

பாரதத்தின் பெண் தெய்வங்களுள் ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் ஸ்தானம் உயர்ந்தது.

பாற்கடலில் எல்லா ஔஷதிகளையும் போட்டு, மந்தரமலையை மத்தாக்கி, வாசுகி என்ற சர்ப்பத்தை கயிறாக்கிக் கடலைக் கடைந்தனர். 

அதனின்றும் அரிய பல பொக்கிஷங்களான காமதேனு, பாரிஜாத வ்ருக்ஷம், அமுதக்கிரணங்ளோடு கூடிய சந்திரன், தன்வந்திரி பகவான் முதலானவை தோன்றின. 

பின்னர் செந்தாமரையைக் கையிலேந்தியபடி, தாமரை மீது அமர்ந்தருளும் மகாலக்ஷ்மி அபூர்வமான ஒளி வீசும் காந்தியுடன் தோன்றினாள். 

ஒப்பற்ற அந்தக் காட்சியைக் கண்ட மகரிஷிகளும் தேவர்களும் “ஸ்ரீ ஸூக்தம்” என்றும் வேத மந்திரங்களால் அவளைத் துதித்தார்கள். 

 ஸூக்தம் என்பது ஒரே தெய்வத்தைப் பற்றியும், ஒரு பொருளைப் பற்றியதுமான மந்திரங்களின் தொகுப்பு,
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் சுவர்ணாம் ஹேம மாலிநீம் |
சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹா ||
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அநபகாமி நீம் 

ஆர்த்ரா - நீரில் தோன்றியவள், 
புஷ்கரிணீ - யானைகளால் வணங்கப்படுகிறவள், 
சூர்யா - கதிரவனை நிகர்த்தவள், 
அனபகாமினி - நிலை தவறாதவள் 
என்ற பல பெயர்களால் வர்ணிக்கப்படுகிறாள். 
ஸ்ரீ ஸூகத்தின் ஒவ்வொரு ரிக்கும் தேஜஸ், பசு, சேவகர் முதலியன, பகையழிவு, கல்வி, ஐஸ்வர்ய விருத்தி, நிலையான செல்வம், தான்ய விருத்தி என்று ஒவ்வொரு பலனைக் கொடுக்கும்.

உபநிஷத்தில் ஸ்ரீலக்ஷ்மியினுடைய மற்ற பெயர்களாக விஷ்ணு பத்னி, ஹிரண்யரூபா, ஸ்வர்ணமாலினி, ரஜதஸ்ராஜா, பத்ம வாஸினி, பத்ம ஹஸ்தா, பத்மப்ரியா, தனதா, ஸ்ரத்தா என்பவை கூறப்பட்டுள்ளது
லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தநயாம் ஸ்ரீரங்கதாமேஸ்வரீம் 
தாஸீபூத ஸமஸ்த தேவவனிதாம் லோகைக தீபாங்குராம் |
ஸ்ரீமந்மந்த கடாஏ லப்த விபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம் 
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் 

பாற்கடலரசனின் புத்ரியும், ஸ்ரீ ரங்கநாயகியும், தேவஸ்திரீகளனைவரையும் பணிப் பெண்களாய்க் கொண்டவளும், உலகுக்கெல்லாம் விளக்கு போன்றவளும், இந்திரன், பிரும்மா, சிவன் ஆகியோரின் பெருமைக்குத் தன் அழகிய கடைக்கண் பார்வையைக் காரணமாக உடையவளும், மூவுலகையும் குடும்பமாக முகுந்தனுக்குப் பிரியமான உனக்கு வந்தனம் செலுத்துகிறேன்.

 பாற்கடலினின்றும் உதித்த மஹாலக்ஷ்மி
ஸ்ரீமந் நாராயணனின் திருமார்பில் உறைந்தாள். 

எனவே அவளுக்கு வக்ஷஸ்தல வாஸினி என்ற பெயரும் உண்டு.

 பெரியாழ்வார் “வடிவாய் நின்வள மார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும் பல்லாண்டு” என்று பாடியுள்ளார். 

ஸ்ரீ வேதாந்த தேசிகரும் ஸ்தானம் யஸ்யா: ஸரஸிஜவனம் விஷ்ணு வக்ஷஸ்தலம் வா |என்று திருமகளின் உறைவிடமாக, தாமரையையும் திருமாலின் மார்பையும் குறிப்பிடுகிறார்.

 யானையின் மத்தகம், பசுவின் பின்பாகம், பதிவிரதைகளின் வகிடு, வில்வ வ்ருக்ஷம் போன்றவற்றில் “ஸ்ரீ” வாஸம் செய்வதாக நூல்கள் கூறுகின்றன.

அம்மா! உன் பதியோ புருஷோத்தமன். அரவரசன் உனக்குப் புல்கும் அணையும் ஆஸனமும் ஆகியுள்ளான். 

வேதாத்மாவான கருடன் வாஹன வடிவு கொண்டான். 
உலகம் முழுதும் கவர்ந்திழுக்கும் இயற்கை ப்ரக்ருதி உனக்குத் திரை. தேவர்களும், தேவியரும் உன்னிடம் பணி புரியும் ஸேவகர்கள் ஆவர்.

 உன் திருநாமமும், மகத்துவம் வாய்ந்த - சுருக்கமான'ஸ்ரீ' என்னும் ஒற்றை எழுத்தே ஆகும். இப்படி ஸர்வேஸ்வரியாக உள்ள உன்னை எப்படிச் சொல்வேன்”
தாயே! உன் சிறிய அருள் பார்வையும் போதும். அது இல்லாததாலன்றோ உலகம் முன்பு ப்ரளய காலத்தில் அழிந்து மீண்டும் பிறந்தது?” என்று வர்ணிக்கிறார். “அரவிந்த லோசனன் மகிஷியான உன் அனுக்கிரஹமின்றி இவ்வுலகிலோ மேலுகிலோ, இப்போதோ எப்போதோ மனிதர்களுக்கு ஏதும் மகிழ்ச்சி உண்டாகாது அன்றோ?” -

ஸ்ரீஇராமானுஜருடைய சீடரான கூரேசரும் தான் இயற்றிய ஸ்ரீஸ்தவத்தில் ஸ்ரீலக்ஷ்மியினுடைய கடாக்ஷத்தாலேயே ஸ்ரீமன் நாராயணன் தன்னை உயர்வு பெற்றவராகக் கருதுகிறார் என்கிறார்..

மஹாலக்ஷ்மியின் கண்பார்வை எங்கெல்லாம் விழுகிறதோ, அங்கெல்லாம் ஐச்வர்யங்களும் இதோ இதோ என்று வந்து சேர்கின்றன என்று கூறுகிறார்.
 தேவேந்திரனும் உன்னுடைய கருணையான கண்பார்வையின் மகிமையால் இழந்த மூவுலகையும் திரும்பப் பெற்றான் 

அமுதத்தைப் பருகி, மஹாலக்ஷ்மியின் அனுக்ரஹத்தை அடைந்த தேவேந்திரன் - உன் அருளால் நல்ல மனைவி, சத்புத்திரர்கள் குடியிருப்பு, சினேகிதர்கள் எல்லோரும் செம்மைப்படுகின்றனர். 
சரீரம் ஆரோக்யம் பெறுகிறது. 
எதிரிகள் அழிகிறார்கள். 
தர்மம் தழைக்கிறது; சுகம் நிலைக்கிறது. 
உனது கடைக்கண் பார்வையால் இத்தனையும் கிடைக்கிறது. 
மனோபலம், சத்தியவாக்கு, மனசுத்தி, நன்னடத்தை யாவும் அருளும் உலகமாதா நீ, நீ குடிகொண்ட மார்புடைய மஹாவிஷ்ணு உலகுக்கெல்லாம் பிதா, அசையும் பொருளும் அசையாப் பொருளும் உங்களுக்குள் அல்லவா அடங்கி உள்ளன?

ஸ்ரீஸூக்தத்தில் லக்ஷ்மியை
ஸித்தலக்ஷ்மீ மோக்ஷலக்ஷ்மீர் ஜயலக்ஷ்மீ ஸரஸ்வதீ 
ஸ்ரீலக்ஷ்மீர் வரலக்ஷ்மீஸ்ச்ச ப்ரஸந்நா பவ ஸர்வதா||
என்று அந்த வரலக்ஷ்மி வரம், அங்குசம், பாசம், அபய முத்திரை ஆகியவற்றைக் கைகளில் கொண்டவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், கோடி சூர்ய ப்ரகாசம் பொருந்திய மூன்று கண்களையுடையவளும் ஆன ஜகதீஸ்வரியைத் துதிக்கிறார்.

வேத ரூபிணியும் ஜகன்மாதாவுமான ஸ்ரீதேவியை தினந்தோறும் 
துதித்துகல ஸம்பத்தையும் அடைவோம்.